100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நாய்களை கொண்டு வர அமெரிக்கா திடீர் தடை - ஏன் தெரியுமா?

மாதிரிப்படம்

ஜூலை 14 முதல் அமலுக்கு வர உள்ள இந்த தடை பட்டியலில் உள்ள நாடுகளில் டொமினிகன் குடியரசு, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, கியூபா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.

  • Share this:
ரேபிஸ் பரவும் ஆபத்து இருப்பதால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நாய்களை அமெரிக்காவிற்கு கொண்டு வர ஓராண்டு தடையை அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்னும் ரேபிஸ் பிரச்சனை தொடரும் நாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு நாய்களை கொண்டு வர கூடாது என்று அமெரிக்கா இது தொடர்பான தடை உத்தரவில் கூறி உள்ளது. ஜூலை 14 முதல் அமலுக்கு வர உள்ள இந்த தடை பட்டியலில் உள்ள நாடுகளில் டொமினிகன் குடியரசு, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, கியூபா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், ரேபிஸ் பரவுவது குறித்த கவலைகள் காரணமாகவே 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நாய்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வர வர தடை விதிக்கப்படுவதாக விளக்கம் அளித்து உள்ளனர். தடை பட்டியலில் உள்ள நாடுகள் ஆபத்தான ரேபிஸ் வைரஸ் பரவ கூடிய அதிக ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (U.S. Centers for Disease Control and Prevention) கூறி உள்ளது. 2007 முதல் நாட்டில் இல்லாமல் இருக்கும் கேனைன் ரேபிஸ் (canine rabies) மாறுபாடு மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழையாமல் இருக்க இந்த தற்காலிக நடவடிக்கை அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தடை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படும் ஒரு மில்லியன் நாய்களில் 1,00,000 நாய்களை நாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் போகலாம் என்று C.D.C கூறி உள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் நாய்களுக்கு ஏற்கனவே ரேபிஸ் தடுப்பூசிக்கான ஆதாரம் கேட்கப்படுகிறது. எனினும் தடுப்பூசி போடுவதற்கு போதுமான வயதாகாத நாய்களும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் அமெரிக்காவிலிருந்து ஒழிக்கப்பட்ட canine rabies மீண்டும் ஏற்பட்டு விடாமல் இருக்க இந்த தடை விதிக்கப்படுகிறது என்னு குறிப்பிட்டுள்ளனர்.

ரேபிஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என இரு தரப்புக்கும் மிக ஆபத்தானது. தப்பித்தவறி ஒரு ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயை நாட்டிற்குள் அனுமதித்து விட்டால், ரேபிஸ் என்ற வெறி நோய் மனிதர்கள், செல்லப்பிராணிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பரவ கூடும் என்று அதிகாரிகள் சுட்டி காட்டினர். அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர் டக்ளஸ் கிராட் அரசின் இந்த முடிவிற்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். குறிப்பாக நாய்கள் செல்ல பிராணிகளாக இருக்கப் போகின்றன என்பதால் நல்ல ஆரோக்கியமான நாய்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று டக்ளஸ் கிராட் கூறி உள்ளார்.

Also read... காலநிலை மாற்றத்தின் மூலம் மலேரியாவை ஒழிக்க முடியுமா? ஆய்வு செய்ய குழு அமைப்பு!

செல்லப்பிராணிகள் அல்லது விற்பனைக்கு அல்லது தத்தெடுப்பிற்காக கொண்டு வரப்பட்ட நாய்கள் உட்பட அமெரிக்காவிற்கு அழைத்து வரப்படும் வரும் அல்லது மீண்டும் அமெரிக்கா திரும்பும் அனைத்து நாய்களுக்கு இந்த தடை பொருந்தும். உதாரணமாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தங்கள் செல்ல நாயை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்கள் என்றால் மீண்டும் நாட்டிற்கு அதை அழைத்து வர அதிகம் ரேபிஸ் ஆபத்து இல்லாத ஒரு நாட்டில் நாய் சுமார் ஆறு மாதங்கள் இருக்கா விட்டால் அவர்களால் அந்த நாயை மீண்டும் யு.எஸ்-ஸிற்கு அழைத்து வர முடியாது.

ஆண்டுதோறும் சுமார் 1 மில்லியன் நாய்கள் அமெரிக்காவிற்குள் கொண்டு வரப்படும் நிலையில் இந்த தடை காரணமாக 1 மில்லியனில் சுமார் 4% முதல் 7.5% வரையிலான நாய்கள் உள்நுழைய முடியாது என்று கூறப்படுகிறது. மெக்சிகோவிலிருந்து ஒரு புதிய வகை நாய் ரேபிஸ் 1988-ல் அமெரிக்காவில் பரவியது மற்றும் இதை ஒழிக்க சுமார் 19 ஆண்டுகள் ஆனது. எனவே தான் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் நாய்களை இவ்வளவு தீவிரமாக கண்காணித்து நாட்டிற்குள் அனுமதிக்கிறது அமெரிக்கா.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: