Love : காதலில் நடக்கும் அதிரடி திருப்பங்கள் - விழிப்புணர்வுடன் இருக்க டிப்ஸ்!

ஆண்,பெண் (மாதிரி படம் )

காதலில் மிக முக்கியமான ஒன்று, தனி நபருக்கான இடம். அதாவது நேசத்துக்குரியவருக்கான இடத்தை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவரின் தனித்தன்மை மற்றும் இயல்பில் இருக்க அனுமதிக்க வேண்டும்.

  • Share this:
காதல் வாழ்க்கை எப்போதும் சுவாரஸ்யத்துக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது. எதிர்பார்க்காத சமயங்களில் நடக்கும் சம்பவங்கள் அதிகமாக காதல் வாழ்க்கையில் உணர முடியும். காதல் வாழ்க்கையை அனுபவித்து வாழும் அதே நேரத்தில் வலியையும் கொடுக்க வல்லது என்பதால் விழிப்புடனும் இருக்க வேண்டும். இருவருக்கும் இடையிலான அன்பை டெசிபல் மாறால் இருவரும் உணரும்போது மட்டுமே அழகாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய இடங்கள் தொடர்பான சில டிப்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அளவுகடந்த அன்பு



அளவுகடந்த அன்பு என்பது காதலில் தறிகெட்டு ஓடும். அது உணர்வதற்கு நன்றாக இருந்தாலும், கட்டுப்பாடற்ற அன்பு ஒருவருக்குள் ஒருவிதமான பயத்தையும் ஏற்படுத்த வல்லது. நாம் நேசிக்கிற அதே அளவுக்கு பார்ட்னரும் நேசிக்கிறாரா என்ற சந்தேகமும் பயத்தையும் ஏதாவதொரு இடத்தில் கொண்டு வந்துவிடும். அப்படியான சூழல்களில் உங்களின் அன்பான வாழ்க்கையை அது பாதிக்கத் தொடங்கும். அளவுகடந்த அன்பில் இருக்கும் ஒருவரால் மற்றொருவர் மிகப்பெரிய அளவிலான துன்பத்தை அனுபவிக்க நேரவும் வாய்ப்புகள் உள்ளன.

உங்களுக்கான நேரம்



சில சந்தர்ப்பங்கள் உங்களின் அன்புக்கும், காதல் வாழ்க்கைக்கும் ஏற்றதாக இருக்காது. இருப்பினும் அந்த இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்கள் இருவருக்கும் இடையிலான அன்பை பரிசோதிக்கும் நிகழ்வாகவும் அது இருக்கும். அந்த இடத்தில் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், உங்கள் அன்பை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று நீங்கள் நினைத்தாலும், அந்த சிந்தனையை விட்டுவிட்டு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் பார்டனர் மீது வைத்திருக்கும் அன்பை நேசித்து, அந்த நிகழ்வை உங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

அன்பின் எல்லை

valentines day 2021 Things women need to realize in Love raji krishnakumar

காதல் என்பது வெறுமனே நேரத்தை இருவரும் செலவழிப்பது அல்லது வெளியே சென்றுவருவது இல்லை. ஒருவருக்கொருவர் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள், ஒருவரைப் பற்றி இன்னொருவர் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது அவசியம். உங்களின் அனுபவங்களையும், வாழ்க்கை சந்தர்ப்பங்களையும் முழுவதுமாக நேசத்துக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியான நொடிகள் இருவரும் சேர்ந்து மீண்டும் ஞாபக்கப்படுத்தி அதனை கொண்டாடுங்கள். சின்ன சின்ன சிரிப்புகள் உங்கள் இருவரையும் மேலும் நெருக்கமாக்கும்.

காதல் பாடம்



காதலும் ஒரு பாடம். அதில் கற்றுக்கொள்வதற்கு என்பது ஒருவருக்கு காலம், நேரம் ஆகியவற்றை நிர்ணயிக்க முடியாதும். சில நாட்கள், மாதங்கள், வருடங்கள் கூட ஆகும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, இருவரும் மகிழ்ச்சியாக சேர்ந்து பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் ஒருவருக்கு கொடுக்கும் வரை அந்த படிப்பிணை தொடரும். காதலுக்குப் பிறகும் வாழ்க்கைப் பயணத்திலும் அந்த கற்பித்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். படிப்பிணைகளை நேர்மறையாக அணுகி, உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான பொக்கிஷமாக்கிக் கொள்ளுங்கள்.

தனிமையை உணர்தல்



அன்பு, நம்பிக்கை சேர்ந்த நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒரு பயணம் காதல். அதில், நீங்கள் உங்கள் பார்ட்னர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே சத்தியத்துக்கு சமமானது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து அதற்கு ஈடாக நடந்து கொள்ளுங்கள். தனிமையில் இருக்கும்போது நினைவுகளின் மூழ்கி அவை காயப்படுத்துபவையாக மாற்றிக்கொள்ளாதீர்கள். அன்பு நேசிக்க மட்டுமே, காயப்படுத்த அல்லது காயப்படுத்திக்கொள்ள அல்ல என்பதை உணர்ந்து காதலியுங்கள். காதல் அழகானது.

மாற்றிக்கொள்ள வேண்டாம்



உங்களுக்கு பிடித்தவராக இருக்கும்போது, நேசத்துக்குரியவராக மாறியபின்பு எந்த சூழலுக்காகவும் உங்களுக்காக அவரை மாற்றிக்கொள்ள கட்டாயப்படுத்தாத வேண்டாம். அவரை அவராக இருக்க விடுங்கள். அது தான் அழகு, யாருக்காகவும் யாரும் மாற்றிக்கொள்ள வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒருவர் எப்படி இருக்கிறாரோ? அப்படியே ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே, நீங்கள் காதல் கொள்ள காரணமாகவும் இருந்திருக்கலாம்.

இருவருக்குமான எல்லை



காதலில் மிக முக்கியமான ஒன்று, தனி நபருக்கான இடம். அதாவது நேசத்துக்குரியவருக்கான இடத்தை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவரின் தனித்தன்மை மற்றும் இயல்பில் இருக்க அனுமதிக்க வேண்டும். அதிகப்படியான அக்கறை என்ற பெயரில் நடக்கும் விசாரணைகள் கோபத்தையும், அவர் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை எரிச்சலாகவும் மாற்றும். இருவருக்கும் இடையிலான அன்பை டெசிபல் குறையாமல் பார்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் மனம் விட்டு நேசியுங்கள். காதல் வாழ்க்கை மிகவும் அழகாகவும், பசுமை நிறைந்த நினைவலைகளாகவும் நிச்சயம் இருக்கும்.
Published by:Sankaravadivoo G
First published: