முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Explained | சாதம் சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது ஏன்? தடுக்க இரண்டே வழிகள்!

Explained | சாதம் சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது ஏன்? தடுக்க இரண்டே வழிகள்!

அரிசி நம்மை சோர்வாக்குவதற்கு ஒரு காரணம் இருந்தாலும், அது எந்த விதத்திலும் ஆரோக்கியமற்றது அல்ல.

அரிசி நம்மை சோர்வாக்குவதற்கு ஒரு காரணம் இருந்தாலும், அது எந்த விதத்திலும் ஆரோக்கியமற்றது அல்ல.

அரிசி நம்மை சோர்வாக்குவதற்கு ஒரு காரணம் இருந்தாலும், அது எந்த விதத்திலும் ஆரோக்கியமற்றது அல்ல.

  • Last Updated :

    இந்தியாவில் சாதம் ஒரு முக்கியமான உணவு. அதாவது, இந்திய உணவில் அரிசி ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும். இருப்பினும், சாதம் சாப்பிடுவது உங்களுக்கு தூக்கத்தையும் சோம்பலையும் தருகிறது என்பதை எப்போதும் உணருகிறீர்களா? இது ஏன் நிகழ்கிறது மற்றும் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    சில நேரங்களில் மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் உறங்குவது நல்ல விஷயம்தான் என்றாலும், எல்லா நேரங்களிலும் பணிகளுக்கு நடுவே அதை நாம் செய்ய முடியாது. ஆனால், இந்த சோர்வை நம்மால் தடுக்க முடியும்.

    அரிசி நம்மை ஏன் சோர்வாக்குகிறது?

    அரிசி என்பது எல்லா கலாச்சாரங்களிலும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானது. இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் ஒரு பகுதியாகும். அரிசி நம்மை சோர்வாக்குவதற்கு ஒரு காரணம் இருந்தாலும், அது எந்த விதத்திலும் ஆரோக்கியமற்றது அல்ல.

    Must Read | ஊட்டச்சத்து உணவுகள்தான்… ஆனால் மழைக்காலத்தில மறந்தும் இப்படி ஃபாலோ பண்ணாதீங்க!

    அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் உடலில் இதே போன்ற விளைவைக் கொண்டிருக்கின்றன. அவை இன்சுலின் தேவைப்படும் குளுக்கோஸாக உடலில் மாற்றப்படுகின்றன. இன்சுலின் அதிகரித்தவுடன் டிரிப்டோபனில் (tryptophan) அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நுழைய மூளையைத் தூண்டுகிறது. இந்த செயல்முறை மெலடோனின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்கள் அதிகரிக்க காரணமாக அமையும். அதுவே நமக்கு சோர்வை ஏற்படுத்துகிறது.

    தடுக்க என்ன செய்யலாம்?

    மதிய உணவிற்குப் பிறகான சோர்வைத் தடுக்க இரண்டு எளிய தீர்வுகள் உள்ளன.

    கார்போஹைட்ரேட்டை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்:

    மதிய உணவில் 50 சதவீதம் காய்கறிகள், 25 சதவீதம் புரதம் மற்றும் 25 சதவீதம் கார்போஹைட்ரேட் (சாதம்) இருக்க வேண்டும். உங்கள் உணவில் நிச்சயம் கார்போஹைட்ரேட்டுகளைச் சேர்க்க வேண்டும். ஏனெனில், அது உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது. இருப்பினும், மந்தநிலையைத் தடுக்க சிறிய அளவை எடுத்துக்கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உணவு கட்டுப்பாடு:

    top videos

      உணவில் கட்டுப்பாடு முக்கியமானது. ரொட்டிகளை விட அதிக சாதத்தை உட்கொள்பவர்கள் தங்கள் உணவை அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால், சோர்வு அதிகரித்து தூக்கம் வரும். நீங்கள் எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு சோர்வை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படாமல் இருக்க உங்கள் தட்டில் உள்ள உணவின் அளவில் கவனம் செலுத்துங்கள்.

      First published: