பொதுவாக ஒயின் என்று சொல்வது ஆரம்ப காலகட்டத்தில் எல்லா பழங்களில் இருந்தும் தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்போது பெரும்பாலும் திராட்சையில் இருந்து மட்டுமே தயாராகிறது. ஆண்டுகள் கூடகூட ஒயினின் தரமும் விலையும் கூடும். அதேபோல் அதன் தனி சுவை கொண்டும் அதன் விலை அதிகரிக்கும். அப்படியான ஒரு விலை உயர்ந்த ஒயின் பற்றிதான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் என்ற பகுதி எரிமலை பாறைகள், நெருப்பு குழம்பு படிமங்கள், குப்பைகள் மற்றும் சாம்பல் ஆகியவற்றின் பெரிய குவியல் நிறைந்த பகுதி ஆகும். ஆனால் அங்கிருந்துதான் உலகின் சுவையான ஒயின் தயாரிக்கப்படுகின்றன.
18 ஆம் நூற்றாண்டு வரை கேனரி தீவுகளில் உள்ள மலைகளை சுற்றி சில கிராமங்கள் இந்த மலைப்பகுதியில் செழிப்பாக இருந்துள்ளன. ஆனால் 1730 மற்றும் 1824 ஆம் ஆண்டு இங்குள்ள எரிமலை வெடித்து அதில் இருந்து வழிந்த நெருப்பு குழம்பு இங்குள்ள மொத்த கிராமங்களையும் தன்னுள் விழுங்கியது. இங்கிருந்து உயிர்தப்பி மற்ற இடங்களுக்கு மக்கள் குடியேறினர்.
திண்டுக்கல்லில் அழகு கொஞ்சும் பன்றிமலை.. பட்ஜெட் ட்ரிப்புக்கு பக்கா இடம்..!
எரிமலை குழம்பால் நிரம்பிய இந்த இடம் இதற்கு மேல் எந்த உயிர்களும் வாழ தகுதியற்றது என்று நினைத்து முதலில் ஒத்துக்கியுள்ளனர். ஆனால், அடுத்து நடந்தது தான் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. மலையை சுற்றி உள்ள லா ஜெரியா, மஸ்டாச் மற்றும் டினாஜோ ஆகிய பகுதிகள் கருப்பு மண்ணால் மூடப்பட்டிருந்தது.
இந்த மண்ணில் திராட்சை கொடிகள் செழிப்பாக வளர்வதை உள்ளூர் மக்கள் கவனித்தனர். இங்கு நிரம்பியுள்ள வெப்ப மணல் அதிக ஈரப்பதம் மற்றும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீண்ட காலத்திற்கு தக்கவைத்து பாதுகாக்கிறது. எனவே அவர்கள் இந்த பகுதியில் குழிகளையும் அகழிகளையும் தோண்டி, திராட்சை கொடிகளை வளர்ப்பதற்கு இதுவரை வேறு எங்கும் காணாத ஒரு நுட்பத்தை செயல்படுத்தினார்.
இந்த முறை திராட்சை விவசாயத்தில் கொடிகள் தள்ளி தள்ளி நடப்பட்டு ஒவ்வொரு செடிக்கும் எரிமலை கற்கள் கொண்டு அணை போல தடுப்புகளும் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு பெரும் காற்று, புழுதிகளில் செடி பாதிக்காமல் காக்கும். மேலே இருந்து பார்த்தால் கருப்பு நிலத்தில் ஆங்காங்கே பசுமை தெளித்தது போல இருக்கும்.
லான்சரோட் பகுதியில் வளர்ந்த திராட்சைகள் மற்ற இடங்களில் இருக்கும் திராட்சைகளை விட மாறுபட்ட அதே நேரம் சுவை கூட்டப்பட்டதாக இருந்தது. இதனால் ஸ்பானில் இந்த குறிப்பிட்ட எரிமலை பகுதியில் இருந்து வாங்கும் திராட்சைக்கும், அதில் தயாரிக்கப்படும் ஒயினுக்கும் மவுசு அதிகம். அதன் சுவை நாக்கிற்கு சிறந்த விருந்தாய் அமைவதால் இதை விலையும் கொஞ்சம் அதிகம் தான்.
லான்சரோட் என்ற பகுதி ஒயினுக்கு மட்டுமல்ல இந்த நிலத்தின் அமைப்புக்கும் பிரபலமானது. எரிமலை வெடித்ததால் உண்டான நிலம் என்பதால் அதை பார்க்கவும், இந்த அழகிய திராட்சைத் தோட்டங்களைக் காணவும் சுற்றுலாப்பயணிகள் இந்த தீவு பகுதிக்கு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Travel, Travel Guide, Volcano, Wine