முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலகின் மிகப்பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடம்.. முதல் நாடு எது தெரியுமா..?

உலகின் மிகப்பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடம்.. முதல் நாடு எது தெரியுமா..?

உலகின் மிகப்பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா

உலகின் மிகப்பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா

இந்தியாவின் ஆரம்பகால அரசாங்கம் பொது ஆண்டு 2000 இல் தான் நிறுவப்பட்டது என்று சான்றுகள் கூறுகின்றன. அதனால் இந்தியாவின் பழமை என்பது பொ.ஆ. 2000 தான் தொடங்கும் என்கின்றனர்.

 • News18 Tamil
 • 1-MIN READ
 • Last Updated :
 • Chennai, India

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி என்று எல்லாம் நம் பள்ளிகளில் நாம் படித்திருப்போம். குமரிக்கு கீழே இருந்த லெமுரியா கண்டம் தான் உலகின் முதல் மனிதன் பிறந்த இடம் அங்கிருந்து தான் ஆப்பிரிக்க புல்வெளிகளுக்கு போனான் என்றெல்லாம் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இதையெல்லாம் பொய் என்று உரைக்கும் விதமாக உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் இந்தியா 7 ஆவது இடத்தில் உள்ளது.

இதை நான் சொல்லவில்லை. அமெரிக்காவின் சென்சஸ் பீரோ - உலக மக்கள்தொகை கடிகாரம் சமீபத்தில் தனது "உலக மக்கள்தொகை மதிப்பாய்வு" அறிக்கையை வெளியிட்டது. அதில் தான் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேதியின்படி இந்தியா உலகின் ஏழாவது பழமையான நாடாம்.

இந்தியாவின் ஆரம்பகால அரசாங்கம் பொது ஆண்டு 2000 இல் தான் நிறுவப்பட்டது என்று சான்றுகள் கூறுகின்றன. அதனால் இந்தியாவின் பழமை என்பது பொ.ஆ. 2000 தான் தொடங்கும் என்கின்றனர். இந்தியாவே 7 ஆவது இடம் என்றால் முதல் இடம் யாருக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று தானே யோசிக்கிறீர்கள். உலகின் மிக பழமையாக நாடு ஈரானாம்.WPR இன் பட்டியலின் படி ஈரானின் அரசாங்கம் கிமு 3200 இல் நிறுவப்பட்டது என்று கூறுகின்றனர்.

ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேதியின் அடிப்படையில் உலகின் மிகப் பழமையான முதல் பத்து நாடுகள்:

 • ஈரான் - கிமு 3200
 • எகிப்து - கிமு 3100
 • வியட்நாம் - கிமு 2879
 • ஆர்மீனியா - கிமு 2492
 •  வட கொரியா - கிமு 2333
 •  சீனா - கிமு 2070
 •  இந்தியா - கிமு 2000
 • ஜார்ஜியா - கிமு 1300
 • இஸ்ரேல் - கிமு 1300
 • சூடான் - கிமு 1070
 • அதேபோல சுய-இறையாண்மை தேதியின்படியும் உலகின் மிகப் பழமையான நாடுகளின் பட்டியலை உலக மக்கள்தொகை மதிப்பாய்வு தயார் செய்துள்ளது. அந்த பட்டியலில் ஜப்பான் உலகின் மிகப் பழமையான நாடாக முதல் இடம் பிடித்துள்ளது.

  • ஜப்பான் - கிமு 660
  •  சீனா - கிமு 221
  • சான் மரினோ - கிபி 301
  • பிரான்ஸ் - கிபி 843
  • ஆஸ்திரியா - கிபி 976
  • டென்மார்க் - கிபி 1000
  • ஹங்கேரி - கிபி 1001
  • போர்ச்சுகல் - கிபி 1143
  • மங்கோலியா - கிபி 1206
  • தாய்லாந்து - கிபி 1238
  • இந்த இறையாண்மை பட்டியலின் முதல் 10 இடங்களில் இந்தியாவை காணவே இல்லை. அதோடு இந்த பட்டியலின் அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சில கேள்விகளும் எழுந்து வருகிறது.

First published:

Tags: Analysis Report, India, Iran