முகப்பு /செய்தி /lifestyle / ஹரப்பா கலாச்சாரதை பறைசாற்றும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ராக்கிகர்ஹியில் உருவாகிறது!

ஹரப்பா கலாச்சாரதை பறைசாற்றும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ராக்கிகர்ஹியில் உருவாகிறது!

ராக்கிகர்ஹி

ராக்கிகர்ஹி

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த அருங்காட்சியகத்தில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Haryana, India

ஹரப்பா கலாச்சாரம் தொடர்பாக உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தின் தாயகமாக ஹரியானா மாற உள்ளது. டெல்லியில் இருந்து 150 கிமீ தொலைவில் ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது ராக்கிகர்ஹி கிராமம். இந்த கிராமம் சிந்து சமவெளி நாகரிக காலத்தின் புகழ்பெற்ற தொல்லியல் தளமாகும்.

ஞாயிற்றுக்கிழமை, ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், ராக்கிகர்ஹி கிராமத்தில் நடைபெற்று வரும் ஹரப்பா நாகரிக அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அகழ்வாராய்ச்சி பணிகளை விரைந்து முடிக்க இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த அருங்காட்சியகத்தில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என தெரிகிறது.

ராக்கிகர்ஹி:

சான்றுகள் கிடைத்ததில் இந்தியாவின் பழமையான நாகரிகமாக வரலாற்றில் குறிப்பிடப்படுவது சிந்துசமவெளி நாகரிகம். இந்து இன்றைய இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளின் பறந்து விரிந்து இருந்தது. அதன் எச்சங்களை ஆராயும் பனி இந்திராவும் நடை பெற்று வருமிடத்து. அதில் ஒரு இடம் தான் ராக்கிகர்ஹி கிராமம்.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் மகாபாரதம் சிரீஸ்.. புகைப்படங்கள் வெளியீடு

ராகிகர்ஹி கிராமம் கிமு 2600-1900 வரை சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த இடம் காகர்-ஹக்ரா நதி சமவெளியில் அமைந்துள்ள பண்டைய நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும். இருப்பினும், இந்த இடம் பெரும்பாலும் அகழ்வாராய்ச்சி செய்யப்படாமல் உள்ளது. கிராமத்தின் ஐந்து சதவிகிதம் மட்டுARCHEOமே இன்றுவரை அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம்:

ராக்கிகாஸ் மற்றும் ராக்கி ஷாபூர் ஆகிய இரண்டு கிராமங்களில் ராக்கிகாரின் தொல்பொருள் சான்றுகள் கிடைக்கின்றன. 1963 ஆம் ஆண்டுதான் ASI முதன்முதலில் இந்த கிராமத்தைத் தோண்டத் தொடங்கினார். 1998 ஆம் ஆண்டு வரை, ராக்கிகாரி பகுதியில் சுமார் 56 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்களின் இரண்டு எலும்புக்கூடுகள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இதனுடன், இரண்டு எலும்புக்கூடுகளின் கைகளிலும் ஏராளமான ஷெல் வளையல்கள், ஒரு செப்பு கண்ணாடி மற்றும் அரை விலையுயர்ந்த கல் மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த தொல்பொருட்களின் பட்டியலை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கிராம மக்களிடம் இதுபோன்ற கலைப்பொருட்கள் இருந்தால், அவற்றின் பட்டியலையும் தயார் செய்ய வேண்டும் என்றார். அத்தகைய பொருட்களை ஒப்படைக்கும் கிராமவாசிகளின் பெயர்களும் கலைப் பொருட்களுடன் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கிடைத்த பொருட்களை வைத்து இந்த கிராமத்தில் ஹரப்பா கலாச்சாரத்தின் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை உருவாகும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் ஹரப்பா நகரித்தின் துறைமுகமாக இருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் கரப்பான் நாகரீக வணிகம் சார்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Archeological site, Haryana