இசைப் பிரியர்களைக் கவரவுள்ள உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல்!

குறிப்பாக ஹார்ட் ராக் கஃபே பிரியர்களுக்கு  நிச்சயம் இந்த ஹோட்டலும் உங்கள் ஃபேவரெட் லிஸ்டில் இடம் பெறும்.

இசைப் பிரியர்களைக் கவரவுள்ள உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல்!
கிட்டார் அமைப்பு கொண்ட ஹோட்டல்
  • News18
  • Last Updated: June 7, 2019, 8:10 PM IST
  • Share this:
நீங்கள் இசைப் பிரியர் எனில் இந்த ஹோட்டல் உங்களுக்கானதுதான். குறிப்பாக ஹார்ட் ராக் கஃபே பிரியர்களுக்கு  நிச்சயம் இந்த ஹோட்டல் பிடிக்கும்.

அமெரிக்காவில் இன்னும் கட்டப்படாத இந்த ஹோட்டலின் கட்டிட அமைப்பும், தகவலும் மட்டும் வெளியாகியுள்ளன. ஃப்ளோரிடாவின் ஹாலிவுட் சிட்டியில் திறக்கப்படவுள்ள இந்த ஹோட்டல் மொத்தம் 450 அடியில் கட்டப்படவிருக்கிறது. இதுதான் மிக உயரமான ஹோட்டல் என்கிற பெயரையும் வரலாற்றில் பதிக்கவுள்ளது.
இதில் தங்குவதற்கு வசதியாக 515 சதுர அடியில் விசாலமான அறைகளும் கட்டப்படவுள்ளன. அங்கு 10 ஏக்கரில் லாங்கூன் ஸ்டைலில் பிரமாண்ட ஸ்விம்மிங் பூலும் அமைக்கவுள்ளனர். 12,000 சதுர அடியில் பார், ஷாப்பிங் கடைகள், 41,000 சதுர அடியில் கால்களுக்கான ஸ்பா, காமெடி தியேட்டர், 14 ரெஸ்டாரண்டுகள், 228 சூதாட்ட விளையாட்டுகள் என மக்களை முழுக்க முழுக்க மகிழ்ச்சியில் மூழ்கடிக்கச் செய்யும் விஷயங்கள் நிறைந்ததாக இந்த ஹோட்டல் இருக்கப்போகிறது. சுற்றுலாத் தளத்திலும் முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது.

சரி அமைப்பில் மட்டும்தான் இது கிட்டார் ஷேபா என்றால் நிச்சயம் இல்லை. இசைப் பிரியர்களைக் கவரும் விதமாக 7000 சீட்டுகளோடு பிரமாண்ட ஹாலை உருவாக்கவுள்ளது. அதில் ஒரு வருடத்திற்கு 100 ஷோக்களையும் நடத்தவுள்ளது. கான்சர்டுகள் மட்டுமன்றி பாக்ஸிங் மேட்சுகள், தியேட்டர் ஷோக்கள் என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், உலகின் பிரபலமான   மரூன் 5  பாப் ராக் பேண்ட்தான் ஹோட்டல் திறப்புவிழா இரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ஹோட்டல் திறப்பு விழா என்றும் அறைகளை முன் கூட்டியே பதிவு செய்ய முன் பதிவுகளும் வரும் ஜூலை 24-ம் தேதியிலிருந்து துவங்கவிருப்பதாக ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை அள்ளி வீசுகிறது அந்த ஹோட்டலின் அறிக்கை.

மொத்தத்தில் இந்த ஹோட்டல் கட்ட USD 1.5 billion ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மதிப்புப் படி சுமார் 1,0,000 கோடி ரூபாயாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading