ஒயின் பிரியர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. ஒயின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உலகின் முதல் ஒயின் தயாரிக்கும் நிறுவனம் விமான சேவையை இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.
இன்விவோ எனும் வைன் தயாரிக்கும் நிறுவனத்தின் முதல் விமானம் ஆக்லாந்தில் இருந்து ஜனவரி 31, 2023 அன்று புறப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து குயின்ஸ்டவுனில் இறங்கும். 18,000 அடி உயரத்தில் பறக்கும்போது ஒரு ஒயின் விருந்து கிடைக்கும்.
அந்த நேரத்தில், இன்விவோ இணை நிறுவனர்களான டிம் லைட்போர்ன் மற்றும் ராப் கேமரூன் தலைமையிலான எட்டு-வகை ஒயின் ருசியை பயணிகள் அனுபவிப்பார்கள். இதில் கிரஹாம் நார்டன் ஒயின்கள் மற்றும் இன்விவோ எக்ஸ், எஸ்ஜேபி ஒயின்கள் உள்ளிட்ட ஒயின்கள் அடங்கும். குறைந்த மற்றும் ஆல்கஹால் இல்லாத ஒயின்களும் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும்.
அதுபோக ஒரு குட்டி ஒயின் குறித்த ட்ரிப்புக்கும் அழைத்து செல்கின்றனர். போட்ஸ்வானா பேட்சரி க்கு ஒரு பயணம் , குயின்ஸ்டவுனில் இரவு உணவு மற்றும் ஹில்டன் குயின்ஸ்டவுன் ரிசார்ட்டில் ஒரே இரவு தங்குவது என்று ஒரு பேக்கேஜை வழங்குகின்றனர்.
டிக்கெட்டின் விலை ஒரு நபருக்கு சுமார் £600 - இந்திய மதிப்பில் சுமார் 60,066 ரூபாயாம். உலகின் முதல் ஒயின் விமான பயண திட்டத்தின் மூலம் வானத்தில் 18,000 அடி உயரத்தில் ஒயின் சுவையையும் , அழகிய மத்திய ஒடாகோ திராட்சைத் தோட்டங்களில் ஒன்றின் அழகையும் ரசிக்க வைப்பதன் முயற்சி தான் இது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight travel, Queens land, Wine