முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலகில் சுற்றுலா பயணிகள் குறைவாக செல்லும் நாடு எது தெரியுமா?

உலகில் சுற்றுலா பயணிகள் குறைவாக செல்லும் நாடு எது தெரியுமா?

துவாலு தீவுகள்

துவாலு தீவுகள்

துவாலு தீவு கூட்டம் தான் நிலப்பரப்பின் அடிப்படையில், உலகின் நான்காவது  சிறிய இறையாண்மை கொண்ட நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

 இப்போது இருக்கும் அநேக உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தின் ஒரு பங்கை அதிகரிக்க சுற்றுலா துறையை மேம்படுத்தி வருகிறது. ஆனால், உலகிலேயே மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாக இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் சுற்றுலா துறையில் மிகவும் பின்தங்கிய நாடாக இருக்கிறது துவாலு(Tuvalu) 

மேற்கு  பசிபிக் கடலில் அமைந்துள்ள துவாலுவா தீவுக்கூட்டத்தில் உள்ள ஒன்பது தீவுகள் எனப்படும் nine islands நாடு இப்போது இயற்கை சீற்றம் காரணமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த தீவு கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு தீவின் நிலப்பரப்பும் நீரில் மூழ்கி குறைந்துகொண்டே இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய் ஆகிய இரு இடங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த தீவு கூட்டம் தான் நிலப்பரப்பின் அடிப்படையில், உலகின் நான்காவது  சிறிய இறையாண்மை கொண்ட நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.வாடிகன் நகரம், மொனாக்கோ, நவ்ரு ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக துவாலுவா நாடு உள்ளது.

இந்த நாட்டில் மொத்தம் 6 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். அதோடு  3 பவளத்தீவுகள் உள்ளன. இங்கு பொலினேசியா கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இது பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளில் ஒன்றாக இன்றும் உள்ளது. இங்கு சிறிய விமான நிலையம் ஒன்றும் உள்ளது. அதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 15 அடி மட்டுமே. அந்த நாட்டில் வாழும் 3இல் ஒரு பங்கு மக்கள் தலைநகரில் மட்டுமே வாழ்கிறார்கள்.

இந்த நாட்டின் தலைநகர் ஃபுனாஃபுடி-Funafuti ஆகும். இங்கு துவாலு டாலர் பயன்படுத்துகிறார்கள். மேலும் அருகில் இருக்கும் நாடு என்பதால் ஆஸ்திரேலியா டாலரும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள்.

இந்த நாடு மிகவும் ஸ்திரத்தன்மை அற்று காணப்படுகிறது. அடிக்கடி சூறாவளி, புயல், என்று பல அழிவுகளை சந்தித்து வருகிறது. மேலும் இந்த நாட்டில் பெரிய வளங்கள் ஏதும் இல்லாததால், இந்த நாட்டில் 97% சோலார் பேனல் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறார்கள். இதையே அவர்கள் தங்களது ஒரு ப்ளஸ் பாயிண்டாக மாற்றியுள்ளனர்.

எப்படி என்று கேட்கிறீர்களா? கரிமல உமிழ்வால் ஏற்படும் உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் விதத்தில் இந்த நாடு சோலார் பேனல் மின்சார முறைகளை மிகப்பெரிய பங்காக மாற்றியுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாடாக (Renewable Energy Country) என்ற நிலைக்கு மாறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

புவி வெப்பமாவதாலால்  உயர்ந்து வரும் கடல் மட்டத்தால் அடிக்கடி இந்த நாட்டில் நுழையும் உப்பு நீர் மக்களை விவசாயம் செய்ய முடியாத வகையில் பாதிக்கிறது. அதனால் தென்னை மர சாகுபடி மீன் பிடிப்பது, பன்றிகள் வளர்ப்பு, முத்துக்குளித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதுவே இந்த நாட்டு மக்களின் மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது.

அடிக்கடி சூறாவளி, மூழ்கும் நிலம் என்று வருவதால், கடலில் இருந்து நாட்டை பாதுகாக்க சதுப்புநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் ஒரே நம்பிக்கையாக சுற்றுலா துறை மட்டுமே உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து குறைவான உயரத்தில் இருப்பதாலும்  கடல் அலை சீற்றம் குறைவாக இருப்பதால் டைவிங், மீன்பிடித்தல் போன்ற  செயல்பாடுகள் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஈர்த்துவருகிறது. 

இதையும் பாருங்க:  1 லட்சம் செலவில் துபாய்க்கு 6 நாட்கள் சுற்றுலா பேக்கேஜ்ஜை அறிமுகம் செய்துள்ள IRCTC!

அது போக இங்கு இருக்கும் பவளப்பாறைகளை பார்க்கவும் மக்கள் வருகை தருகின்றனர்.  சுற்றுலா பயணிகள் வருகையால் கிடைக்கும் பணத்தை வைத்து மக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்து கொள்வார்கள். ஆனால் இது மற்ற நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையே ஆகும்.

இப்படியே சென்றால் இன்னும் 50 முதல் 100 ஆண்டுகளுக்குள் மக்கள் வாழ முடியாத பகுதியாக மாறி அனைவரும் காணாமல் போவார்கள் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. பலர் அருகில் இருக்கும் நியூஸிலாந்து நாட்டிற்கு குடிபெயர்கிறார்கள். ஆனால் இப்படியே அனைவரும் வெளியேறினால் அந்த நாட்டின் கலாச்சாரமே அழிந்துவிடும் என்ற கவலையும் எழுந்து  வருகிறது.

First published:

Tags: Tourism, Travel