சுற்றுலா தலங்கள் ஒவ்வொன்றிலும், விநோதமான சடங்குகள், பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படும். ஆனால் நியூசிலாந்தில் உள்ள சுற்றுலாதளம் ஒன்றிற்கு செல்லும் பெண்கள், அங்குள்ள வேலியில் தங்களது பிராவை மாட்டிவிட்டு விநோத வழக்கம் உள்ளது. அது ஏன் தெரியுமா?
ஒரு வேலி முழுவதும் பிராக்கள் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த இடத்தை பிரா வேலி என்றும் அழைக்கின்றனர். ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரக்கணக்கான பிராக்கள் இந்த வேலியில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான பல படங்களும் சோசியல் மீடியாவில் பிரபலம். அந்த புகைப்படத்தை பார்த்தாலே இந்த விசித்திரமான இடம் எங்கு உள்ளது என உடனே உங்களை கூகுளில் தேட வைக்கும் அளவிற்கு சுவாரஸ்யமானது. அதை பார்க்கும் போதே ஏன் பிராவைத் தொங்கவிடுகிறார்கள் என்று பல கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. இதைத் தவிர, எங்கிருந்து ஆரம்பித்தது, எங்கிருந்து இவ்வளவு பிராக்கள் வந்தன என பல கேள்விகள் எழும்.
பிரா வேலி எங்கு உள்ளது?
நியூசிலாந்தின் சென்ட்ரல் ஒடாகோவில் கார்டோனா என்ற இடம் உள்ளது. அங்கு வேலியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பிராக்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து வருபவர்களும் அந்த பாரம்பரியத்தின் படி பிராவை அங்கு விட்டுச்செல்கின்றனர். உள்ளாடைகளால் பிரபலமான இந்த இடம் கார்டோனாவின் பிரபலமான சுற்றுலாதளமாகவும் மாறியுள்ளது. அப்படி வரும் பெண்கள் இந்த இடத்தில் தங்களது பிராவையும் தொங்கவிட்டுச் செல்கின்றனர்.
ஏன் இங்கு பிராவை தொங்கவிடுகிறார்கள்?
பிரா வேலியில் உள்ளாடைகள் ஏன் தொங்கவிடப்படுகின்றன என்பதற்கு வெவ்வேறு காரணங்களும் வெவ்வேறு கதைகளும் உள்ளன. சொல்லப்போனால், ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் இது மாறுகிறது. சில பெண்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவது போல், பிராவை கழட்டி வேலியில் தொங்கவிடுவதை புகைப்படமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், பெண்களும் மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்விற்காக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நிவாரணம் பெறப்படுகிறது.
Oily Skin : மூக்கின் மீது படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க 5 அசத்தலான டிப்ஸ்!
இந்த வேலி கட்டமைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்களும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்காக வேலை செய்து வருகிறார்கள். இத்துடன் இங்கு ப்ராவை மாட்டி வைக்கும் பெண்களுக்கு பிடித்தமான வாழ்க்கை துணை கிடைப்பதாகவும் கதைகள் வலம் வருகின்றன. இதனால் பல பெண்கள் தங்களது பிராவை இந்த வேலியில் தொங்கவிட்டுச் செல்கின்றனர்.
எப்போது தொடங்கியது?
நியூசிலாந்து இணையதளம் ஒன்றில் கிடைத்த தகவலின் படி, 1998 கிறிஸ்துமஸ் மற்றும் 1999 புத்தாண்டுக்கு இடையில் நான்கு ப்ராக்கள் இங்கு தோன்றின. இதற்குப் பிறகு நிறைய விவாதங்கள் நடந்தன, பின்னர் பிப்ரவரியில் இங்கு பிராக்களின் எண்ணிக்கை அதிகரித்து 60 ஆக மாறியது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைய தின அளவில் கணக்கிட்டால், ஆயிரக்கணக்கான பிராக்கள் அங்கு தொங்குவதை காண முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bra, New Zealand, Travel