ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலகின் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனம்!

உலகின் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனம்!

உலகின் சிறந்த 20 விமான சேவை நிறுவங்களின் பட்டியல்

உலகின் சிறந்த 20 விமான சேவை நிறுவங்களின் பட்டியல்

இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனத்தின் விமான சேவையான விஸ்டாரா பட்டியலில் 20 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் விலகி இப்போது தான் நாடுகளுக்கு இடையேயான மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களுக்கு ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் (Skytrax World Airline Awards) 2022 அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், ஜப்பானியம் மற்றும் சீனம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துக்கணிப்பின் மூலம் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் தீர்மானிக்கப்பட்டன. இறுதி முடிவுகளில் 350க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் எமிரேட்ஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனத்தின் விமான சேவையான விஸ்டாரா பட்டியலில் 20 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் இன்டர்நெட் சேவை!

ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த, ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் கோ மற்றும் ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் லிமிடெட் ஆகியவை முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன. ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்து 16வது இடத்திற்கு சரிந்தது.

ஒவ்வொரு கேபின் வகுப்பிற்கும் சிறந்த சேவை வழங்கும் விமான நிறுவனத்திற்கும் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த முதல் வகுப்பு கேபின் பரிசு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெற்றது. கத்தார் சிறந்த வணிக வகுப்பிற்காக கௌரவிக்கப்பட்டது. விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் லிமிடெட் பிரீமியம் எகானமிக்காகவும், எமிரேட்ஸ் சிறந்த எகானமி கேபினுக்காகவும் பரிசுகளை வென்றன.

அது மட்டுமின்றி சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பட்ஜெட் கேரியர் ஸ்கூட் சிறந்த நீண்ட தூர குறைந்த கட்டண விமான நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிறந்த கேபின் ஊழியர்களை பெற்றதற்கான விருதையும் பெற்றது. ANA கேபின் தூய்மை பிரிவில் முதலிடத்தில் இருந்தது.

சென்னையில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் 14 ! விலை குறையுமா?

2022க்கான சிறந்த 20 விமான நிறுவனங்கள் இதோ:

 • கத்தார் ஏர்வேஸ்
 • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
 • எமிரேட்ஸ்
 • அனைத்து நிப்பான் ஏர்வேஸ் (ANA)
 • குவாண்டாஸ் ஏர்வேஸ்
 • ஜப்பான் ஏர்லைன்ஸ்
 • துர்க் ஹவா யோலாரி (துருக்கி ஏர்லைன்ஸ்)
 • ஏர் பிரான்ஸ்
 • கொரிய ஏர்
 • சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்
 • பிரிட்டிஷ் ஏர்வேஸ்
 • எதிஹாட் ஏர்வேஸ்
 • சீனா தெற்கு
 • ஹைனன் ஏர்லைன்ஸ்
 • லுஃப்தான்சா
 • கேத்தே பசிபிக்
 • கேஎல்எம்
 • ஈ.வி.ஏ ஏர்
 • கன்னி அட்லாண்டிக்
 • விஸ்தாரா
Published by:Ilakkiya GP
First published:

Tags: Flight, Vistara