இந்தியாவில் பல விசித்திரமான மற்றும் அசாதாரணமான கோவில்கள் உள்ளன. வடிவத்திலும், அமைப்பிலும், கட்டிடக்கலையில் என வித்தியாசத்தை பார்த்திருப்போம். வழிபாடு விஷயங்களில் கூட வித்தியாசத்தை பார்த்திருக்கிறோம். ஒரு ராயல் என்பீல்ட் பைக் கூட தெய்வமாக வணங்கப்படுகிறது. அது போல வித்தியாசமான ஒரு தெய்வம் கர்நாடகாவின் சென்னபட்னாவில் உள்ள கோயிலில் உள்ளது.
கர்நாடகாவின் சென்னபட்னா நகரில் அக்ரஹார வலகெரேஹள்ளி என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த நகரம் மரத்தாலான பொம்மைகளுக்கு உலகளவில் புகழ்பெற்றது. 'பொம்மைகளின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. யுனெஸ்கோ பாரம்பரிய பொருள்களில் ஒன்றாக இந்த மர பொம்மைகள் உள்ளது.
அனால் பெங்களூரு நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அக்ரஹார வலகெரேஹள்ளி நாய்களுக்கு கோவில் கட்டி அதை காவல் தெய்வங்களாக வழிபடுவது பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
கிராமவாசிகளின் கூற்றுப்படி, இந்த கிராமத்தின் முக்கிய தெய்வமான கெம்பம்மா தேவிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அவர் தான் இந்த ஊரை காக்கும் தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளார்.
ஒருமுறை இரண்டு நாய்கள் கிராமத்தில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனது. சில நாட்களுக்குப் பிறகு, கெம்பம்மா தேவி ஒருவரின் கனவில் தோன்றி, கிராமத்தையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் வகையில் தனக்கு அருகில் காணாமல் போன நாய்களுக்கு ஒரு கோயில் கட்டும்படி கேட்டுள்ளார். கெம்பம்மா தேவிக்கு கோவில் கட்டிய ரமேஷ் என்ற தொழில் அதிபர் 2010 இல் காணாமல் போன இறண்டு நாய்களை போலவே 2 சிலைகளை செய்து ஒரு சிறிய கோவிலை நிறுவி உள்ளார்.
அன்றில் இருந்து காணாமல் போன 2 நாய்கள் அந்த கிராமத்தின் காவல் தெய்வங்களாக மாறி உள்ளது. கெம்பம்மா தேவிக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் இந்த இரு நாய்களின் சிலைகளுக்கும் செய்யப்படுகிறது. அதோடு நாய்களை விரும்பி வளர்க்கும் நபர்கள் அநேகர் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
அது மட்டும் அல்ல, இந்த காவல் நாய்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கிராமத்தில் மாபெரும் திருவிழா நடத்தப்படுகிறது. இதனால் தற்போது இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதையும் பாருங்க: அந்த ஊருக்கே தண்ணீர் தொட்டிகள்தான் அடையாளம்... ரசனை நயத்துடன் காட்சியளிக்கும் வீடுகள்..!
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் பெங்களூரு நகர ரயில் நிலையம் ஆகியவை முறையே சென்னபட்னாவிற்கு அருகிலுள்ள விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம் ஆகும். விமான நிலையம் மற்றும் இரயில் நிலையங்களுக்கு வெளியில் இருந்து சென்னபட்னாவிற்கு நேரடி பேருந்து வசதி கிடைக்கும். சென்னபட்னா மையத்திலிருந்து, அக்ரஹார வலகெரேஹள்ளி கிராமத்திற்குள் கிட்டத்தட்ட 20 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Hindu Temple, Karnataka, Travel