• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வாரணாசி பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..! அடுத்த முறை போனா மிஸ் பண்ணாதீங்க

வாரணாசி பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..! அடுத்த முறை போனா மிஸ் பண்ணாதீங்க

வாரணாசி

வாரணாசி

காசி அல்லது வாரணாசி என அழைக்கப்படும் இந்த இடம், இந்துக்களின் உயர்ந்த புனித தலங்களுள் ஒன்றாக உள்ளது

  • Share this:
காசி அல்லது வாரணாசி என அழைக்கப்படும் இந்த இடம், இந்துக்களின் உயர்ந்த புனித தலங்களுள் ஒன்றாக உள்ளது. வாழ்க்கையின் மோட்சம் வேண்டும் என்று நினைப்பவர்கள், வாரணாசியில் அடைக்கலமாகின்றன. கோவில் நகரமான அங்கு ஆறுகள், மலைகள், கோவில்கள், கல்வி நிலையங்கள் என இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு என்ற ஏரளாமான இடங்கள் இருக்கின்றன. அங்கு செல்ல வேண்டுமென நினைத்திருப்பவர்கள், அந்த நகரத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம்.

வருணா மற்றும் அசி என்ற இரு ஆறுகள் அங்கு ஓடுவதால், அவற்றை குறிப்பிடும் வகையில் அந்த நகரத்துக்கு காலப்போக்கில் வாரணாசி என பெயர்வந்துள்ளது. மேலும், பனாரஸ், காசி, சுதர்ஷனா, ரம்யா மற்றும் பிரம்ம வர்தா என வேறு பல பெயர்களிலும் அந்த நகரம் அழைக்கப்படுகிறது. அமெரிக்க எழுத்தாளர் மார்க் டுவெய்ன் இந்த நகரத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்பில், பனாரஸ் நகரம் வரலாறுகளைவிடவும், பாரம்பரியங்களை விடவும், புராணங்களை விடவும் பழமையான நகரம் என கூறியுள்ளார்.சிவனின் இருப்பிடம்

காசி சிவனின் இருப்பிடமாக கருத்தப்படுகிறது. சிவனும், பார்வதியும் அங்கு வசிப்பதாக இந்துக்களின் நம்பிக்கை. அங்கு ஒருமுறை சென்று கங்கை நதியில் நீராடி பாவங்களை கழிப்பதற்கும், வாழ்வில் மோட்சம் பெறுவதற்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக, இந்தப் பிறப்பின் மோட்சத்தை பெறுவதற்காக அங்கேயே இருந்து இறப்பவர்களும் ஏராளம். வேதம் படிக்க விரும்பும் மாணவர்கள் இங்கே வந்து தங்கிப் படிக்க விரும்புகிறார்கள். ஏனெனில் இந்நகரில்தான் வேதம் படித்தவர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.

நகரின் விஷித்திரங்கள்

காசியைச் சுற்றி ஏராளமான கட்டுக்கதைகளும், விஷித்திரமான சடங்குகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மழை பொய்க்கும் காலங்களில் அங்கு மனிதர்களுக்கும் தவளைக்கும் இடையே திருமண சடங்கு செய்வார்கள். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் கடவுள் தங்களின் கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்ப்பார் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். அங்கிருந்தது தான் மற்ற நகரங்களுக்கும் இந்த தவளை திருமண சடங்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

சமயச் சடங்குகள் நிறைந்திருக்கும் இந்த நகரில்தான் உலகப் புகழ்பெற்ற, ஆசியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்ததை மதன் மோகன் மால்வியா தோற்றுவித்தார். கலை, இலக்கியங்களின் பிறப்பிடமாகவும் விளங்கும் வாரணாசியில் புகழ்பெற்ற எழுத்தாளர்களும், இலக்கிய வாதிகளும் நிறைந்துள்ளனர். துளசி தாசர், முன்ஷி பிரேம் சந்த் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமைகளாக உள்ளனர்.

கோவில் நகரம்

நாம் ஏற்கனவே கூறியதுபோல் வாரணாசி எனப்படும் காசி கோவில் நகரமாகும். ஏறத்தாழ 23 ஆயிரம் கோவில்கள் அந்த நகரத்ததை சுற்றி இருக்கின்றன. அனைத்து தெய்வங்களுக்கும் கோவில்கள் இருப்பதால், உலகிலேயே அதிக கோவில்கள் இருக்கும் நகரமாகவும் வாரணாசி உள்ளது. ஒரே நாளில் அத்தனை கோவில்களையும் சுற்றிப் பார்ப்பது என்பது கற்பனையில் கூட முடியாத காரியம். விஷ்ணுவுக்கும் இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கின்றன.

யுவராஜ் சிங்கின் வீடு ரூ.64 கோடியா..? அதற்குள் என்னென்ன வசதிகள் இருக்குன்னு தெரிஞ்சா அசந்துபோவீங்க..

நதிகளின் சங்கமம்

கோவில்களைப் போன்று மலைக்குன்றுகளும், நதிகளும் இந்த நகரத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. நகரம் முழுவதும் பசுமை போர்த்திய மலைக்குன்றுகள் ஏராளமாக உள்ளன. உலகிலேயே அதிக மலை தொடர் இருக்கும் நகரமாக விளங்கும் வாரணாசியில் 84 மலைத் தொடர்கள் உள்ளன. மலைக்காலங்களில் அங்கு செல்வோர் கவனமுடன் தங்களின் பயணத்தை திட்டமிடுவது நல்லது. வெள்ளம் எப்போது அதிகரிக்கும் என்று கணிக்க முடியாத நகரங்களில் வாரணாசியும் ஒன்று. குறிப்பாக, வாரணாசியில் பாயும் கங்கை நதிக்கு தனி பெருமை உண்டு.பனாரஸ் பட்டு

உலகப் புகழ்பெற்ற பனாரஸ் பட்டு இங்குதான் தயாரிக்கப்படுகிறது. இந்த நகரத்தில் கைத்தறி நெசவு மூலம் பட்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு பட்டு தயாரிக்க ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகும். இதன் காரணமாக இந்த பட்டினை அணிவதற்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் விரும்புகின்றனர். காலப்போக்கில் இந்த பட்டு தயாரிப்பு குறைந்துவிட்டதால், மீண்டும் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.

முக்தி பவன்

டெத் ஹோட்டல் என அழைக்கப்படும் முக்தி பவன் இங்கு தான் உள்ளது. வாரணாசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என நம்புபவர்கள் அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம். அதற்கும் முன்பதிவு உள்ளது. ஒருவருக்கு அதிகபட்சம் 15 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. அதற்குள் இறக்கவில்லை என்றால், முக்தி பவனில் கொடுக்கப்பட்ட ரூமை காலி செய்து விட வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: