இந்திய வரலாற்றில், பல பெண்கள் தங்கள் பெயர்களை சாதனையாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்தியாவின் ஜனாதிபதியான முதல் பெண் - பிரதிபா பாட்டீல், இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி, இந்தியாவின் முதல் பிரதமர் - இந்திரா காந்தி, பெண் நீதிபதி - எம். பாத்திமா பீவி மற்றும் பலர் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இவ்வுலகில் ‘முதல் பெண்’ என்ற பெருமைகளை தங்கள் துறைகளில் பெற்றுள்ளனர்.
அத்தகைய ஒரு பெயரை சுரேகா யாதவ் என்ற பெண்மணி தற்போது பெற்றுள்ளார். எந்த துறையில் என்று தானே யோசிக்கிறீர்கள். சொல்கிறோம்…. சமீபத்தில் இந்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலுக்கான இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் மற்றும் முதல் பெண் லோகோ பைலட் (loco pilot)என்ற பெருமையை சுரேகா தனது பெயருக்கு பதிவு செய்துவிட்டார்.
இந்தியாவின் முதல் லோகோ பைலட் மட்டும் அல்லாது ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையும் சுரேகா வசம் தான் உள்ளது. மார்ச் 13 அன்று சோலாப்பூர் ரயில் நிலையத்திலிருந்து சரியான நேரத்தில் புறப்பட்டு, திட்டமிடப்பட்ட வருகை நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில்நிலையத்தை (CSMT) அடைந்தது. 450-கிமீக்கும் அதிகமான நீண்ட பயணத்தை முடித்த யாதவ் CSMT இல் பிளாட்ஃபார்ம் எண் 8 இல் கௌரவிக்கப்பட்டார் என்று மத்திய இரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் "வந்தே பாரத் - பெண்கள் சக்தியால் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் ஸ்ரீமதி சுரேகா யாதவ்" என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்வீட் செய்துள்ளார்.
தனது முதல் வந்தே பாரத் ரயிலில் பயணித்த சுரேகா, வந்தே பாரத் ரயிலை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். "புதிய யுகம், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வந்தே பாரத் ரயில் ஓட்டும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ரயில் சரியான நேரத்தில் சோலாப்பூரில் இருந்து புறப்பட்டு நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக CSMT ஐ அடைந்தது" என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் பெண்லோகோ பைலட்:
மேற்கு மகாராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள சதாராவைச் சேர்ந்த சுரேகா யாதவ், 1988 இல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரானார். மத்திய அரசின் முதல் 'லேடீஸ் ஸ்பெஷல்' உள்ளூர் ரயிலை ஓட்டினார். பின்னர், அவர் 2011 இல் டெக்கான் ராணி ரயிலை ஓட்டிய ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் ஆனார். அவர் தனது சாதனைகளுக்காக இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளை வென்றுள்ளார்.
"பெண்கள் ரயில் என்ஜின்களை ஓட்டுவதில்லை" என்ற சொற்றொடரை சவாலாக எடுத்து அதை பொய்யாக்கிய முதல் நபர் சுரேகா ஆவர். அவர் 1998 இல் ஜிஜாவ் புரஸ்கார், 2005 இல் பிரேர்னா புரஸ்கார், 2004 இல் சஹ்யாத்ரி ஹிர்கானி விருது, 2013 ஆம் ஆண்டின் RWCC சிறந்த மகளிர் விருது மற்றும் முதல் பெண் லோகோ பைலட்டிற்கான GM விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
முன்னதாக சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8), மத்திய ரயில்வேயானது மதிப்புமிக்க மும்பை-புனே டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் மற்றும் சிஎஸ்எம்டி-கல்யாண் மகளிர் சிறப்பு உள்ளூர் ரயிலை அனைத்து பெண் ஊழியர்களுடன் இயக்கியது. அன்று, யாதவ், சயாலி சாவர்டேகருடன் உதவி லோகோ பைலட்டாக டெக்கான் ராணியை இயக்கினார்.
கடந்த திங்களன்று வெறும் ஆறு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்களில் சோலாபூரிலிருந்து மும்பை வரை 455 கிமீ தூரத்தை கடந்து புதிய சாதனையை படைந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vande Bharat, Women achievers