ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

யுனெஸ்கோ பாரம்பரிய தலங்கள் தற்கால பட்டியலில் பிரதமர் மோடியின் சொந்த ஊர்... !

யுனெஸ்கோ பாரம்பரிய தலங்கள் தற்கால பட்டியலில் பிரதமர் மோடியின் சொந்த ஊர்... !

வாட்நகர்

வாட்நகர்

இந்த ஆண்டு தற்காலிக பட்டியலில் ஒரே நேரத்தில் குஜராத்தை சேர்ந்த 2 இடங்கள் இடம்பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

உலகில் உள்ள அழியும் நிலையில் உள்ள இடங்களை அதன் வரலாற்றோடு பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் என்ற பட்டியலை உருவாக்கியது. இதில் இயற்கை, கலாச்சார அல்லது கலப்பு பாரம்பரிய தலம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இடங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

வருடம் தோறும் நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள பாதுகாக்கப்படவேண்டிய பாரம்பரிய இடங்களின் தற்காலிக பட்டியல்களை பரிந்துரைக்கும். அந்த பட்டியலில் இருந்து தான் யுனெஸ்கோ தேர்தெடுத்து அறிவிக்கும். ஆனால் தற்காலிக பட்டியலில் அறிவிக்கப்படும் அனைத்து இடங்களும் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்படாது. இதுவரை இந்தியாவில் உள்ள 40 இடங்களை யுனெஸ்கோ பாரம்பரிய தலங்களாக அறிவித்துள்ளது. மேலும் 52 இடங்கள் தற்காலிக இடங்களின் பட்டியலில் உள்ளன.

இந்த ஆண்டு பரிந்துரைத்த தற்காலிக இடங்களில் இந்தியாவின் கொங்கன் பிராந்தியத்தின் ஜியோகிளிஃப்ஸ், மேகாலயாவில் வாழும் வேர் பாலம் ஜிங்கியெங் ஜேரி, கர்நாடகத்தின் லெபக்ஷியில் உள்ள ஸ்ரீ வீரபத்ரா கோயில் மற்றும் ஒற்றைக்கல் நந்தி, திரிபுராவில் உள்ள உனகோட்டி மலைசிற்பங்கள், குஜராத்தின் வரலாற்று சிறப்புமிக்க வாட்நகர் நகரம் மற்றும் மோதேராவில் உள்ள சூரியன் கோயில் அடங்கியுள்ளது.

இதில் குஜராத்தின் வாட்நகர் நகரம் பிரதமர் மோடியின் பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த ஆண்டு தற்காலிக பட்டியலில் ஒரே நேரத்தில் குஜராத்தை சேர்ந்த 2 இடங்கள் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்திரா காந்தி ஒரு படையையே அனுப்பி அலசிய கோட்டை.. அப்படி அங்கே என்ன தான் இருக்கு?

வாட்நகர் ….

பொதுவாக பழைய பாரம்பரிய நகரங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மக்கள் இடம்பெயர்ந்து தனித்து விடப்படும். ஆனால் வாட்நகர் நகரம் 2,700 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்களின் வாழ்விடமாக இருந்து வருகிறது.

வாட்நகரத்தில் கிரேக்க-இந்திய மன்னர் இரண்டாம் அப்போலோடோடஸ் (கி.மு. 80-65) காலத்திய களிமண்ணில் அச்சிடபட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பொது ஆண்டுக்கு முன்னரே இந்த நகரம் செழித்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் ரோமன் நாட்டுத் தொடர்பு இருந்துள்ளதும் தெரிகிறது.

வாட்நகர் தற்போது பழைய கட்டமைப்புகளின் எச்சங்களால் சூழப்பட்டுள்ளது. நகரத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைக் குறிக்கும் தொடர்ச்சியான வாயில்களால் சூழப்பட்டுள்ளது. நகரின் மிகப் பழமையான அம்பாஜி மாதா கோயில், கிபி 10-11 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது.

விருதாநகர், ஆனந்தபூர், அனந்தபூர் மற்றும் நகர் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் வாட்நகர் நகரம் நகரத்தின் கோட்டைகள், வளைந்த நுழைவாயில்கள் (தோரணங்கள்), கோயில்கள், கிணறுகள், குடியிருப்பு கட்டமைப்புகள் (கோதிஸ்) மற்றும் பௌத்த மடங்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தூபிகள் போன்ற அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தளங்கள் பல்வேறு கலாச்சார காலகட்டங்களின் கட்டிடக்கலை செல்வாக்கை வெளிப்படுத்துகின்றன. இங்குள்ள விரிவான நீர் மேலாண்மை அமைப்பும் நகரத்தின் தொடர்ச்சியில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: பறவைகள் தற்கொலை செய்துகொள்ள வரும் இந்திய கிராமம்..! விலகாத மர்மம்..

பண்டைய இந்தியாவின் வரலாற்று புவியியல் ஆய்வு, வட்நகர் இரண்டு முக்கிய பண்டைய வர்த்தக பாதைகளின் மூலோபாய இடத்தில் அமைந்திருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது: ஒன்று மத்திய இந்தியாவை சிந்து மற்றும் மேலும் வடமேற்கு பகுதிகளுடன் இணைக்கிறது. மற்றொன்று குஜராத் கடற்கரையில் உள்ள துறைமுக நகரங்களை வட இந்தியாவுடன் இணைத்தது. மாலத்தீவு, எகிப்து நாணயங்களும் கூட இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2014 இல், இந்திய தொல்லியல் துறை (ASI) வாட்நகரின் காஸ்கோல், தர்பார்கத் மற்றும் பாடி கர்பனோ ஷெரி ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில் புத்தமதத்தின் எச்சங்கள் பல கிடைத்துள்ளன. அதை வைத்து 2023 இறுதிக்குள் ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட உள்ளது.

சீனப் பயணியான சுவான்சாங் அல்லது ஹியூன் சாங் கி.பி 641 ஆம் ஆண்டு ஆனந்த்பூருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.இது வாட்நகரில் உள்ள 10 மடங்களில் 1,000 க்கும் மேற்பட்ட சமிதியா பள்ளி அல்லது துறவிகள் வாழ்ந்ததையும் பதிவு செய்கிறது. இது பௌத்த கல்வியின் முக்கிய மையமாக இருந்ததும் தெரிகிறது. அனால் இன்று இதற்கான எச்சங்கள் கூட சரிவர கிடைக்கவில்லை.

அதே போல் நகரத்தின் நடுவில் 25 மீட்டர் உயரம் கொண்ட ‘தர்பார்கத்’ என்று சொல்லப்படும் மேடுகள் கொண்ட அமைப்பு இந்தியாவின் பிற பகுதிகளில் இல்லை.

First published:

Tags: Gujarat, PM Narendra Modi