ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஞானபழத்திற்காக முருகன் கோபித்துக்கொண்ட இடம் தெரியுமா.... இமயமலையில் இருக்கும் ஒரே முருகன் கோவில்!

ஞானபழத்திற்காக முருகன் கோபித்துக்கொண்ட இடம் தெரியுமா.... இமயமலையில் இருக்கும் ஒரே முருகன் கோவில்!

கார்த்திகேய கோவில், உத்தரகண்ட்

கார்த்திகேய கோவில், உத்தரகண்ட்

ருத்ரபிரயாக்கிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த கோயில் உள்ளது. இங்கு செல்ல, பக்தர்கள் கனக்சௌரி கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. கொஞ்சம் சிரமமான மலைபகுதியில் ஏற வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttarakhand (Uttaranchal), India

ஆன்மீகத்தில், தமிழை இந்த உலகத்திற்கே தந்தவராக கருதப்படுபவர் முருகன். 'குன்று இருக்கும் இடமெல்லாம் குகன் இருப்பான்' என்று சொல்ல கேட்டிருப்போம். தமிழகத்தில் எங்கு ஒரு மலையைப்  பார்த்தாலும் அதில் முருகனுக்கு ஒரு கோவில் இருக்கும். ஆனால் தமிழகத்தை தாண்டி மேலே சென்றால் எந்த மாநிலத்திலும் முருகனுக்கு கோவில் இருக்காது.

காரணம், அவர்களது புராணத்தில் சிவன், பார்வதி , விநாயகர் மட்டுமே இருப்பர். ஆனால் இமயமலையில், உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான கார்த்திக் சுவாமி கோயில் இருப்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காக, தென்னிந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் பக்தர்களையும் கவரும் வகையில் கோயிலை மேம்படுத்த உத்தரகாண்ட் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

ஹம்பி முதல் சிலிகுரி வரை... ஜி20 கூட்டங்கள் நடைபெற இருக்கும் பாரம்பரிய தலங்கள் !

கோவிலின் முக்கியத்துவம்

உத்தரகண்டில் உள்ள கார்த்திகேயனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே ஆலயம் என்பதால், இக்கோயில் மகத்தான மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.  முருகனை உத்தரகண்ட் மாநிலத்தில் கார்த்திகேயா அல்லது கார்த்திக் என்று அழைக்கிறார்கள்.

ருத்ரபிரயாக்கிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த கோயில் உள்ளது. இங்கு செல்ல, பக்தர்கள் கனக்சௌரி கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. கொஞ்சம் சிரமமான மலைபகுதியில் ஏற வேண்டும். ஆனால் மேலே ஏறினால் அதன் எழில் காட்சி உண்மையிலேயே வியக்கவைக்கும்.

இந்த கோவிலின் கதைப் படி பூமியை சுற்றி வர சொல்லும்போது உலகை மயிலில் சுற்றி வந்த முருகன் பழம் கிடைக்காமல் இங்கே தான் தன் பெற்றோருடன் கோபித்து கொண்டு சென்றதாக சொல்கின்றனர். கோபித்துக்கொண்டு கோமணத்துடன் நிற்பது  பழனி என்று நமக்கு தெரியும்.

கொட்டிக்கிடக்கும் அழகு.. குஜராத்தின் கட்ச் பகுதி! அக்டோபரில் கண்டிப்பா பார்க்க வேண்டிய லொகேஷன்!

கார்த்திக் ஸ்வாமி கோவில் நீண்ட காலமாக சுற்றுலா தள பட்டியலிலேயே இல்லை. இந்தக் கோயிலை தற்போது மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலாத் துறை கூடுதல் இயக்குனர் பூனம் சந்த் கூறுகிறார்.

நாம் கந்தன் கருணை திருவிளையாடல்படங்களில் இமயமலை பனிக்கு இடையே சிவன், பார்வதி, முருகன் என்று பார்த்திருப்போம். அதை நேரில் காண இந்த கோவிலில் ஒரு வாய்ப்பளிக்கிறது. நம் ஊர் கோவில்களை போல கோபுரம் கருவறை என்று இல்லாமல் இமாலய பகுதியின் பாரம்பரிய கோவில் போலவே அமைந்திருக்கும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Uttarkhand