முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவிலிருந்து முதன்முறையாக அமெரிக்க விசா பெறுபவர்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டம்!

இந்தியாவிலிருந்து முதன்முறையாக அமெரிக்க விசா பெறுபவர்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டம்!

அமெரிக்க விசா

அமெரிக்க விசா

முந்தைய அமெரிக்க விசாக்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இனி நேரில் விசா நேர்காணலுக்கு  செல்ல வேண்டியதில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் , பணியாட்கள் எல்லாம் இப்போது தான் அந்தந்த நாடுகளுக்குத் திரும்பச் சென்றுள்ளனர். அது போக இந்த ஆண்டு புதிதாக படிக்கவும் , வேலைக்காகவும் விண்ணப்பித்தவர்கள் விசாவுக்கு விண்ணப்பித்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

COVID 19 தொற்றுநோய் காரணமாக  விசா செயலாக்கம் என்பது வரலாறு காணாத   அளவிற்கு நீண்ட காத்திருப்பு நேரத்தை அறிவித்தது. ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் படியான சூழல் இருந்த நிலையில் விசா செயல்முறையை விரைவுபடுத்தகூடுதல் பணியாளர்களை அமெரிக்கா அமர்த்தியது.

இதையும் பாருங்க: சென்னைக்கு அருகில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா..? இந்த வீக் எண்ட் பிளான் ரெடி..!

இந்நிலையில் முதன்முறையாக அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நல்ல செய்தி என்னவென்றால் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா செயலாக்க நேரத்தை குறைக்கும்  முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறை அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு காத்திருப்பு நேரத்தை குறைக்க  சிறப்பு விசா நேர்காணல்கள் ஒவ்வொரு வாரமும்  சனிக்கிழமை தனியாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனால் மற்றவர்களோடு சேர்ந்து வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியதில்லை. எளிதாக விசா கிடைத்துவிடும்.

அதேபோல முந்தைய அமெரிக்க விசாக்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இனி நேரில் விசா நேர்காணலுக்கு  செல்ல வேண்டியதில்லை. அவர்களின் புதிய விசா செயலாக்க விண்ணப்பங்கள் தொலைநிலையில், ஆன்லைன் மூலம்  செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி  மும்பையில் உள்ள துணைத் தூதரகத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக விசா சந்திப்புகளுக்கு இடமளிக்கும் வகையில் அவர்களின் வார நாள் வேலை நேரத்தை நீட்டித்துள்ளது.

மாணவர் விசா, H மற்றும் L வகை விசா, H-1B விசா, B-1 வணிக விசா, B-2 சுற்றுலா விசா, மற்றும் கப்பல் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் இந்த புதிய முயற்சியால் அதிகம் பயனடைவார்கள் என்று தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அமெரிக்கா போனது இல்லை. ஆனால் அங்கே சுற்றுலா  செல்ல ஆசை என்றால் சரியான நேரம் இது.  மார்ச் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு அமெரிக்க பகுதியில் இயற்கை உயிர் பெற்று செர்ரி பூக்களாக மலர்ந்து குலுங்கும் . வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், ஓரிகான், சியாட்டில், டெக்சாஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்கள் இந்த நேரத்தில் பார்க்க சிறந்த இடங்களாகும்.

அது மட்டும் இல்லாமல் இப்போது முதல் முறை விண்ணப்பிக்கும் மக்களுக்கு காத்திருப்பு காலத்தை குறைத்து சிறப்பு நேர்காணல்களை வேறு நடத்துகிறார்கள். இன்றே விசாவிற்கு விண்ணப்பித்துவிட்டு மார்ச் மாதம் செர்ரி மரங்களை பார்த்து வாருங்கள்.

First published:

Tags: America, Travel