Home /News /lifestyle /

மர்மங்கள் நிறைந்த பத்மநாப சுவாமி கோவிலின் வரலாறு பற்றி தெரியுமா..? அடுத்த முறை சென்றால் இதை கவனியுங்கள்..!

மர்மங்கள் நிறைந்த பத்மநாப சுவாமி கோவிலின் வரலாறு பற்றி தெரியுமா..? அடுத்த முறை சென்றால் இதை கவனியுங்கள்..!

காட்சி படம்

காட்சி படம்

பல மர்மங்களை மறைத்து வைத்திருக்கும் பத்மநாப சுவாமி கோவிலில் இருக்கும் பெட்டகங்களை சர்ப்பங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் மந்திர சக்தியால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று நம்பப்படுகிறது.

கேரளா திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி ஆலயம் இருக்கிறது. விஷ்ணு ஆலயம், கட்டிடக்கலை அழகு மற்றும் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம், அதே அளவுக்கு மர்மமான விஷயங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி பத்மநாப சுவாமி ஆலயத்தில் ஆறு பெட்டகங்கள் பூட்டப்பட்ட நிலையில் இருக்கின்றன. இந்த பெட்டகங்கள் மந்திர சக்தியால் பாதுகாக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது.

பத்மநாப சுவாமி ஆலயத்தின் சிறப்புகள் :

திருப்பதிக்கு சமமாக, இந்து கோவில்களில் மிகவும் பணக்கார கோவிலாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. ஆனால் மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே இருக்கும் மர்மமான பெட்டகங்களில் திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு கூட பொக்கிஷம் இருக்கின்றது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

பத்மநாத சுவாமி ஆலயம் உலகிலேயே மிகவும் செல்வ வளம் மிக்க ஆலயமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பல ஆண்டுகளாக கோவிலில் செலுத்தப்படும் நன்கொடைகள் என்று கூறப்படுகிறது. பத்மநாப சுவாமி ஆலயத்தை பார்க்கும் பொழுதே அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும். அதன் கட்டிடக்கலை நுணுக்கங்கள் கேரளா மற்றும் அண்டை மாநிலங்களின் கட்டிடக்கலை நுணுக்கங்களையும் சேர்த்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.



கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு இந்த கோவிலின் பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. திரு அனந்த புரம் என்பதுதான் திருவனந்தபுரம் என்று தற்போது மறுவியுள்ளது. அனந்தம் என்பது பத்மாசுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் அனந்த பத்மநாப சுவாமியைக் குறிக்கிறது. எனவே கேரளா தலைநகரான திருவனந்தபுரம் என்பது பெருமாளின் மற்றொரு அவதாரமாக அனந்த பத்மநாபன் இருக்கும் வசிக்கும் இருப்பிடத்தை குறிக்கின்றது

இந்த கோவிலின் ஆறு பெட்டகங்கள் இருக்கின்றன ஆனால் புராணங்களின்படி, கோவில் வரலாற்று கதைகளின்படி இவை அனைத்துமே ஒரு சாபம் பெற்று இருக்கிறது என்றும், எனவே கோயிலின் பொக்கிஷங்கள் அனைத்துமே வெவ்வேறு பெட்டகங்களில் தனித்தனியாக பூட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் பற்றியும் இதில் சுற்றி இருக்கும் மர்மத்தை பற்றியும் இங்கே பார்க்கலாம்.

பத்மநாப சுவாமி ஆலயத்தின் வரலாறு : 

பத்மநாப சுவாமி கோவிலின் ஆரிஜின் எனப்படும் தொடக்கம் பற்றி வரலாற்று ஆய்வாளர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் பத்மநாப சுவாமி ஆலயம் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போதுள்ள கட்டட கலை அமைப்பு 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்டவர்மனால் கட்டப் பட்டது என்று என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. தற்பொழுது திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் வம்சத்தினர் ஒரு ட்ரஸ்ட் உருவாக்கி அதன் மூலம் ஆலயத்தை நிர்வகித்து வருகின்றனர்.



ஆலயத்தில் மறைந்திருக்கும் மர்மம் : மர்மத்துக்கு பெயர் பெற்ற பத்மநாபசுவாமி ஆலயத்தில் தற்பொழுது ஆறு பெட்டகங்கள் உள்ளன. கோவிலில் இருக்கும் மர்மமான பொக்கிஷங்கள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சுந்தர்ராஜன், சுப்ரீம் கோர்ட்டுக்கு முறையீடு செய்தார். அதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ஏழு உறுப்பினர்கள் உள்ள ஒரு கமிட்டியை உருவாக்கி கோவிலில் பொக்கிஷத்தை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

also read : சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

சுப்ரீம் கோர்ட் கமிட்டி மெம்பர்கள் தேடலின் படி மறைந்திருந்த ஆறு அறைகள் கண்டறியப்பட்டன. இந்த அறைகளின் கதவுகள் கடினமான இரும்பால் செய்யப்பட்டு இருந்தது மற்றும் திறப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்த அறைகள் ஒவ்வொன்றும் ஆங்கில எழுத்துக்களின்படி A முதல் F வரை பெயரிடப்பட்டது. இந்த அறைக்குள் நுழைவது மிகவும் சவாலாக இருந்தது, ஆனால் குழுவினர் தொடர்ந்து சளைக்காமல் தேடியதன் விளைவாக தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் விலையுயர்ந்த நவரத்தின கற்கள் மட்டுமல்லாமல் கடவுளின் சிலைகள், விலை உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் ஆகியவையும் கண்டறியப்பட்டன.



இதன் மதிப்பு தோராயமாக 1 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. ஆனால் இதில் வால்ட் B என்ற பெட்டகம் திறக்கப்படவில்லை. யாரேனும் இந்த பெட்டகத்தை திறக்க முயற்சி செய்தால் அவர்களுக்கு துரதிஷ்டம் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் பெட்டகம் இன்னும் மர்மம் : ஆறு பெட்டகங்களில் இரண்டாம் அறை பத்மநாத சுவாமிக்கு மிகவும் நெருக்கமானது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பெட்டகங்களை மந்திர சக்திதான் பாதுகாக்கிறதோ என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவிலில் மர்மத்தை கண்டறிய வேண்டும் என்று மனு கொடுத்த ஓய்வு பெற்ற அதிகாரி அறைகள் திறந்த சில நாட்களிலேயே இறந்து போனார்.



அமானுஷ்யம் மற்றும் மந்திர சக்தியால் பாதுகாக்கப்படும் இரண்டாம் பெட்டகம், சர்ப்பங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் மந்திர சக்தியால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று நம்பப்படுகிறது. பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த பெட்டகத்துக்கு பாதுகாவலர்கள் ஆக இருந்து வருவதால் யார் அதை திறக்க அல்லது உடைக்க முயற்சி செய்தாலும் அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

also read :சர்வ வல்லமை தரும் திருவெண்காடு புதன் ஸ்தலம்... புதன் பகவானுக்கு விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் பெருகும்...

பல நூற்றாண்டுகளுக்கு முன் கோவிலின் நிர்வாகிகள் இதைத் திறக்க முயற்சி செய்தபோது அச்சுறுத்தக்கூடிய அலைகளின் சத்தத்தையும், மர்மமான ஓசைகளையும் கேட்டனர். அதனால் அவர்களுடைய முடிவை மாற்றிக்கொண்டு திறக்காமலேயே விட்டு விட்டனர். அதுமட்டுமின்றி 1930 ஆம் ஆண்டில் இரண்டாம் பெட்டகத்தை திறக்க முயற்சி செய்த கொள்ளையர்களை சர்ப்பங்கள் தாக்கியதாக வரலாற்று செய்தி உண்டு.



பண்டைய காலத்தில் இந்த அறைக்குக் சித்தர்கள் மந்திர பூட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த அறையை திறக்கவே முடியாத படி நாக மந்திரம் கூறி இவை பூட்டப்பட்டிருக்கிறது. கருட மந்திரத்தை மிகத் துல்லியமாக கூறும் ஒரு நபரால் மட்டுமே இதை நபரால் மட்டுமே திறக்க முடியும் என்று நம்புகிறார்கள். எப்படி இருந்தாலும், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Kerala, Temple

அடுத்த செய்தி