முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஹிமாச்சல பிரதேம் சாங்க்லா பள்ளத்தாக்கின் தனித்துவமான ஹோலி கொண்டாட்டம் பற்றி கேள்விப்பட்டதுண்டா..?

ஹிமாச்சல பிரதேம் சாங்க்லா பள்ளத்தாக்கின் தனித்துவமான ஹோலி கொண்டாட்டம் பற்றி கேள்விப்பட்டதுண்டா..?

சாங்லா பள்ளத்தாக்கு

சாங்லா பள்ளத்தாக்கு

ஊர்வலத்தின் போது, ​​உள்ளூர் உணவுகள் மற்றும் பாசூர் எனப்படும் பாரம்பரிய மதுபானங்களும் பரிமாறப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • himachal |

சாங்லா பள்ளத்தாக்கு (Sangla Valley) என்பது இமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் (Kinnaur) மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகை விட இங்கு கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை தான் இப்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாங்லா பள்ளத்தாக்கின் அழகிய இயற்கை காட்சிகள், ஏதோ ஓவியத்தில் வரைந்து வைத்தது போல இருக்கும். மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் என்று சொல்வதை எல்லாம் இந்த இடத்தில் உண்மையில் நம்மால் உணர முடியும். இங்குள்ள ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் பாரம்பரிய கின்னவுர் கிராமங்கள் இந்த கிராமங்களின் தனித்துவத்தை பேசும்.

ஹிமாச்சல பிரதேசத்தின் சாங்க்லா பள்ளத்தாக்கில், ஃபகுலி(Faguli) திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த தனித்துவ ஹோலி நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சாங்க்லா பள்ளத்தாக்கின் முக்கிய கோயிலான நாக்(Nag) கோயிலில் முக்கிய ஹோலி திருவிழாக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஹோலி அன்று காலை, அனைவரும் நாக் கோவிலில் கூடுவார்கள்.

பொதுவாக ஹோலி திருவிழா என்பது மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் கதாபாத்திரம், அவரது பால்ய காதலியான ராதையோடு விளையாடிய வண்ணங்களின் திருவிழாவை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மதுரா, பர்ஸானா பகுதிகளால் கிருஷ்ண கதைகளை வைத்து தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆனால் சாங்க்லா பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக ராமாயண விஷ்ணு அவதாரத்தை வைத்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை தொடக்கத்தில் சாங்க்லா பள்ளத்தாக்கின் ஆண்கள் சிலர் ராமாயண காவியத்தின் பாத்திரங்களை வேடமாக அணிந்துகொள்கிறார்கள்.

பின்னர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக மக்கள் போகிறார்கள். ஊர்வலத்தின் போது, ​​உள்ளூர் உணவுகள் மற்றும் பாசூர் ( phasur) எனப்படும் பாரம்பரிய மதுபானங்களும் பரிமாறப்படுகின்றன. பனி குறைந்தாலும் முற்றிலும் பனி முடியாத நேரத்தில் வெள்ளை பனி மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் உலர்ந்த வண்ணங்களை தூவி கொண்டு ராமாயண புராணங்களை பாடிக்கொண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

சாங்க்லா பள்ளத்தாக்கை எப்படி அடைவது?

சாலை வழியாக: சாங்லா பள்ளத்தாக்கை அடைய மிகவும் வசதியான வழி சாலை வழியாகும். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மற்றும் ராம்பூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து வழக்கமான பேருந்துகள் மற்றும் டாக்சிகள் உள்ளன . சிம்லாவிலிருந்து சங்லா பள்ளத்தாக்கு வரையிலான தூரம் தோராயமாக 230 கி.மீ., கடக்க 8-9 மணி நேரம் ஆகும்.

விமானம் மூலம்: சிம்லாவில் விமான நிலையம் இருந்தாலும், விமான சேவைகள் ஹெலி-டாக்ஸி சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தபடுகிறது. எனவே சிம்லாவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள சண்டிகர் விமான நிலையம் சிறந்த வழி . சிம்லாவில் இருந்து சாங்க்லா பள்ளத்தாக்குக்கு ஒரு டாக்ஸி அல்லது பேருந்து மூலம் செல்லலாம்.

இதையும் பாருங்க : ஹோலிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் சீக்கியர்களின் பாரம்பர்ய 'ஹோலா மொஹல்லா பண்டிகை'

ரயில் மூலம்: சாங்லா பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் சிம்லாவில் உள்ளது, இது இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Himachal, Holi Festival, Travel, Travel Guide