மியான்மர் புத்த கோவில்களுக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்த யுனெஸ்கோ!

பாகனில்  11 மற்று 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 3500 தாது கோபுரங்கள், கோவில்கள், மடங்கள் மற்றும் இதர சிற்பங்கள் அமைந்துள்ளன.

news18
Updated: July 10, 2019, 4:46 PM IST
மியான்மர் புத்த கோவில்களுக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்த யுனெஸ்கோ!
மியான்மர்
news18
Updated: July 10, 2019, 4:46 PM IST
மியான்மருக்கு சிறப்பு பாரம்பரியம் என்பது புத்த கோவில்கள்தான்  என்பது அனைவரும் அறிந்ததே. இதை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை யுனஸ்கோ அமைப்பு, மியான்மரின் சுற்றுலாத் தளமாக விளங்கும் பாகன் தலைநகர் உலகின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ பட்டியலில் கால் நூற்றாண்டிற்குப் பிறகு புத்த கோவில்கள் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது அங்குள்ள மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. யுனெஸ்கோ, பாகனில் புத்த கோவில்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வைத்தே இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
பாகனில்  11 மற்றும் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 3,500 தாது கோபுரங்கள், கோவில்கள், மடங்கள் மற்றும் இதர சிற்பங்கள் என மியான்மரைச் சுற்றிலும் எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளன. சுற்றுலாவாசிகளுக்கும் இங்கு சென்று வந்தால் மன அமைதி, நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதாலேயே அதிகமாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இது சிறந்த சுற்றுலாத் தளமாக இயங்கி வருகிறது.

யுனெஸ்கோவிற்கு , நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச கவுன்சில் இந்தப் பட்டியலை பரிந்துரைத்தது. மேலும் மியான்மர் அரசு சில பாரம்பரிய சட்டம் (heritage law) ஒன்றை புதிதாக இயற்றியுள்ளது. இதன் மூலம் கோவில்களைச் சுற்றியுள்ள ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா முன்னேற்றத்திற்காக இயங்கும் நிறுவனங்களுக்கு சில விதிகளை வகுத்து ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்த பாரம்பரிய கோவில்களின் புகழை உலகம் முழுவதும் பரவச் செய்யவும், புத்த வழிபாடு மேம்படவும்  ஏற்பாடு செய்துள்ளது.
Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...