உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்த 2 இந்திய நகரங்கள் : எவை தெரியுமா?

டெல்லி

தரவரிசை பட்டியலில் டெல்லி 48 வது இடத்திலும், மும்பை 50 வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் பிரிவு நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. அதில், டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் தான் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆய்வு சுமார் 60 நகரங்களில் நடத்தப்பட்டது.

அதில், டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிமனித மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 76-க்கும் மேற்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் பாதுகாப்பான இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்த பட்டியலில் இரண்டு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை புதுடெல்லி மற்றும் மும்பை ஆகியவை ஆகும்.

ஆனால் தரவரிசை பட்டியலில் டெல்லி 48 வது இடத்திலும், மும்பை 50 வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிப்பெண் அடிப்படையில், தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு, புது டெல்லி 52.8 புள்ளிகளையும், மும்பை 48.2 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் 56.2 புள்ளிகளை பெற்று ஜோகன்னஸ்பர்க் நகரம் புதுடெல்லிக்கு முன்னால் உள்ளது. அதேபோல 55.1 புள்ளிகளை பெற்று 49 வது இடத்தில் ரியாத் நகரம் உள்ளது. அதாவது, இரு இந்திய நகரங்களுக்கிடையே இடம்பிடித்துள்ளது. புதுடில்லியை விட, மும்பை பாதுகாப்பானது என்ற பொதுவான கருத்தை இந்த பட்டியல் தற்போது மாற்றியுள்ளது.

சரி உலகின் பாதுகாப்பான முதல் 5 நகரங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கோபன்ஹேகன் (Copenhagen)

டோக்கியோ மற்றும் சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி, 100 க்கு 82.4 புள்ளிகளைப் பெற்று டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் உலகின் முதல் பாதுகாப்பான நகரமாக மாறியுள்ளது. அங்கு வாழும் டேனிஷ் மக்கள் மகிழ்ச்சியான மற்றும் திருப்தியாக வாழும் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் சைக்கிள் ஒட்டி அந்நகரத்தை சுற்றி பார்ப்பது சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

அந்நகரத்தில் நீங்கள் பார்க்கும் மிகவும் மனதைக் கவரும் காட்சிகளில் ஒன்று சைக்கிள் ஓட்டுபவர்கள். அங்குள்ள, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் கூட சைக்கிள் ஓட்டிச்செல்வது வழக்கம். வரிசையாக கட்டப்பட்ட வண்ணமயமான வீடுகள் இந்த நகரத்தின் மற்றொரு அம்சமாகும். டென்மார்க்கின் தேசிய அருங்காட்சியகமான டிவோலி கார்டன்ஸ் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. டென்மார்க்கின் தேசிய கேலரி 1700-களில் இருந்து இன்றுவரை டேனிஷ் கலைகளின் மிகப்பெரிய தொகுப்பைக் காட்சிப்படுத்தி வருகிறது.டொராண்டோ (Toronto):

பாதுகாப்பான நகர பட்டியலில் கனடாவின் டொராண்டோ இரண்டாவது இடத்தில் உள்ளது. டொராண்டோ நகரம் 100க்கு 82.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த நகரத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் அதன் மாறுபட்ட காட்சிகள் தான். 250-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் மற்றும் 180-க்கும் மேற்பட்ட மொழிகளை பேசும் 2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரம் தான் டொராண்டோ. டொராண்டோ ஒரு கலாச்சார நிகழ்வு, இங்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர். பல மொழிகள், உணவு வகைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவை தான் இந்த நகரத்தை சிறந்ததாக மாற்றியுள்ளது. கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் சிறந்த அருங்காட்சியகங்கள் உள்ளன. வசந்த காலத்தையும் கோடைகாலத்தையும் விரும்புவோருக்கு இது ஒரு சொர்க்கம்.

சிங்கப்பூர் (Singapore)

சிங்கப்பூர் நகரம், பாதுகாப்பின் அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் வலிமையான நகரங்களில் ஒன்றாக இருந்தாலும், சிங்கப்பூர் இன்றும் கொரோனாவுக்கு எதிராக தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய தருணத்திலிருந்தே சிங்கப்பூரில் பார்க்க பல இடங்கள் உள்ளன. விமான நிலையத்தை கூட சுற்றுலா தலமாக மாற்றிய நகரம் என்றால் அது சிங்கப்பூர் தான். மேலும் நகரம் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக உள்ளது. அங்கு நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் கார்டன்ஸ் பை ஆஃப் லி, லிட்டில் இந்தியா, மற்றும் அரபு தெரு, சிங்கப்பூர் ஃப்ளையர், யுனிவர்சல் ஸ்டுடியோஸ், பொட்டானிக் கார்டன்ஸ், சைனாடவுன், சிங்கப்பூர் ஜூ, சாங்கி மியூசியம், எஸ்.ஈ.ஏ மீன்வளம், சாங்கி கடற்கரை மற்றும் செண்டோசா தீவு ஆகியவை அடங்கும்.சிட்னி (Sydney)

ஆஸ்திரேலியாவின் சிட்னி 80.1 புள்ளிகளுடன் பாதுகாப்பான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் 10 பாதுகாப்பான நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. சிட்னியை உலகின் மிக அழகான மற்றும் அற்புதமான நகரங்களில் ஒன்றாக விவரிக்கலாம். இது உணவு பிரியர்களின் சொர்க்கம். நகரத்தில் உள்ள பிரபல ஓபரா ஹவுஸ் பற்றி பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கலாம். ஓபரா ஹவுஸ் தி ஆஸ்திரேலிய பாலே, ஆஸ்திரேலிய சேம்பர் ஆர்கெஸ்ட்ரா, சிட்னி பில்ஹார்மோனிக் கோயர்ஸ் மற்றும் சிட்னி தியேட்டர் கோ ஆகியவற்றுடன் உள்ளது. இன்று, உலகின் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக இருக்கும் சிட்னி பாதுகாப்பு என்று வரும்போது மிகவும் கவனமாக இருக்கிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் புத்தாண்டு பட்டாசு வெடிக்கும் இடங்களில் சிட்னி துறைமுக பாலமும் ஒன்று.

டோக்கியோ (Tokyo)

இன்று, டோக்கியோ பாதுகாப்பு அடிப்படையில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. டோக்கியோ ஜப்பானின் தலைநகரம் மற்றும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். ஷாப்பிங், பொழுதுபோக்கு, கலாச்சாரம், உணவு என வரம்பற்ற சுற்றுலா அனுபவத்தை டோக்கியோ வழங்குகிறது. இங்கு பல சிறந்த அருங்காட்சியகங்கள், வரலாற்று கோவில்கள் மற்றும் தோட்டங்கள் நகரத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.

 
Published by:Sivaranjani E
First published: