• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அடிக்கடி பயணம் செய்யுறதுதான் உங்க ஹாபியா? இதை நீங்க கட்டாயமா படிக்கணும்..

அடிக்கடி பயணம் செய்யுறதுதான் உங்க ஹாபியா? இதை நீங்க கட்டாயமா படிக்கணும்..

பயணம்

பயணம்

பிறரை காட்டிலும் அடிக்கடி பயணம் செய்பவர்கள் 7% மகிழ்ச்சியை பெறுகிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

  • Share this:
பல இடங்களுக்கு அடிக்கடி பயணம் செய்கிறீர்களா? அப்படியானால், அடிக்கடி பயணம் மேற்கொள்ளாத நபர்களை விட, மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன. பிறரை காட்டிலும் அடிக்கடி பயணம் செய்பவர்கள் 7% மகிழ்ச்சியை பெறுகிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

டூரிசம் அனாலிசிஸ் (Tourism Analysis) என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், வீட்டிலிருந்து குறைந்தபட்சம் 120 கி.மீ தூரத்திற்கு தவறாமல் பயணிப்பதாகக் கூறும் நபர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பற்றி கேட்டபோது, மிகவும் அரிதாகவே பயணம் செய்ததாகக் கூறியவர்களை காட்டிலும், அவர்கள் 7 சதவீதம் அதிக மகிழ்ச்சியை உணர்ந்ததாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் (Washington State University) உதவி பேராசிரியர் பணிபுரியும் சுன்-சூ சென் கூறியதாவது, " வேலை, குடும்ப வாழ்க்கை மற்றும் நண்பர்கள் போன்ற விஷயங்கள் நல்வாழ்வின் ஒட்டுமொத்த அறிக்கைகளில் பெரிய பங்கைக் கொண்டுள்ளன. அதேபோல, பயண அனுபவங்கள் வாழ்க்கையில் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த பயணங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது " எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இது உங்கள் வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறி புதிய விஷயங்களை அனுபவிப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு உணர்த்தியது என்று அவர் கூறினார். இந்த ஆய்வினை பொறுத்தவரை, பங்கேற்பாளர்களிடம் தங்கள் வாழ்க்கையில் பயணத்தின் முக்கியத்துவம் குறித்தும், எதிர்கால விடுமுறையைப் பார்ப்பதற்கும் திட்டமிடுவதற்கும் எவ்வளவு நேரம் செலவிட்டார்கள், ஒரு வருடத்தில் எத்தனை பயணங்கள் மேற்கொண்டார்கள் என்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் உணர்ந்த வாழ்க்கை திருப்தி குறித்தும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 500 பேரில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு நான்கு இன்பப் பயணங்களுக்குச் சென்று வந்ததாக கூறியுள்ளனர்.

பார்ட்டிக்குப் பின்னர் ஹேங்கோவரிலிருந்து உங்களை மீட்க உதவும் சில ஹெல்தி உணவுகள்..!

மேலும் பதிலளித்தவர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த விடுமுறையும் எடுக்காதவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பயண கட்டுப்பாடுகள் போடப்பட்டன. நாளடைவில் அரசாங்கங்கள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியதால், இந்த ஆராய்ச்சி சுற்றுலாப்பயணிகளுக்கும் சுற்றுலாத் துறையினருக்கும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், பயண நிறுவனங்கள், ரிசார்ட்டுகள் மற்றும் விமான நிறுவனங்கள் கூட சமூக ஊடக பிரச்சாரங்களை தொடங்கலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது விடுமுறையின் நன்மைகள் குறித்து ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது, பயணம் குறித்த அவர்களின் கருத்துக்களை விவாதிப்பதில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென் கூறியதாவது, "முந்தைய ஆய்வுகள் சுற்றுலா அனுபவங்களின் மன அழுத்த நிவாரணம், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்ந்தன. அந்த ஆய்வுகளே ஒரு பயணம் அல்லது விடுமுறையின் விளைவை ஆராய தூண்டுதலாக இருந்தது. இந்த ஆராய்ச்சி அதிகமான மக்கள், விடுமுறைகளைத் திட்டமிடுவதையும், அது குறித்து பேசுவதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக" தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: