Home /News /lifestyle /

ஹில் ஸ்டேஷன் சென்று இயற்கையை ரசிக்க ஆசையா? குறைந்த மக்கள் கூடம் வரும் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்..

ஹில் ஸ்டேஷன் சென்று இயற்கையை ரசிக்க ஆசையா? குறைந்த மக்கள் கூடம் வரும் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்..

மலைப் பிரதேசங்கள்

மலைப் பிரதேசங்கள்

தொற்று நோய் ஏற்படுத்தியிருக்கும் மனசோர்வை நீக்கவும், மன அமைதிக்காகவும் நீங்கள் உங்கள் அன்பானவர்களுடன் டூர் செல்ல விருப்புகிறீர்கள் என்றால், தொற்று அபாயத்தை தவிர்க்க நிச்சயம் கூட்டம் குறைவான டூரிஸ்ட் ஸ்பாட் பகுதிகளை தேடி செல்வது நல்லது.

மேலும் படிக்கவும் ...
கொரோனா தொற்று நம்மை பல மாதங்களாக அச்சுறுத்தி வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. ஒருபக்கம் கொரோனா இருந்தாலும், இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் பல மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளுக்குள் அல்லது வீடு - வேலை - வீடு என்று முடங்கி கிடந்த பலரும் டூர் செல்ல திட்டமிட்டு அதன்படி சென்று வருகின்றனர். குறிப்பாக பல மக்கள் கோவா அல்லது மாலத்தீவுக்கு டூர் போவதை காண முடிகிறது.

எனினும் சில சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. தொற்று நோய் ஏற்படுத்தியிருக்கும் மனசோர்வை நீக்கவும், மன அமைதிக்காகவும் நீங்கள் உங்கள் அன்பானவர்களுடன் டூர் செல்ல விருப்புகிறீர்கள் என்றால், தொற்று அபாயத்தை தவிர்க்க நிச்சயம் கூட்டம் குறைவான டூரிஸ்ட் ஸ்பாட் பகுதிகளை தேடி செல்வது நல்லது. அந்த வகையில் மிகவும் அழகான மற்றும் கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு மலைபிரதேசத்தை பற்றி இங்கே தெரிந்து கொண்டு பிறகு உங்கள் டூரை திட்டமிடுங்கள்.

சக்லேஷ்பூர்:

நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிறிய மலை நகரம் தான் இந்த சக்லேஷ்பூர். கர்நாடகாவின் Hassan மாவட்டத்தில் உள்ளது சக்லேஷ்பூர். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சக்லேஷ்பூரில் பல்வேறு வகையான ப்ரெஷ்ஷான தாவரங்கள், ஏராளமான தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் அமைந்துள்ளன. காபி, ஏலக்காய், மிளகு மற்றும் அரேகா தோட்டங்கள் நிறைந்த உயரமான பச்சை மலைகளால் சூழப்பட்ட சக்லேஷ்பூரில் மிதமான குளிர்ச்சியுடன் கூடிய கிளைமேட் காணப்படுகிறது. துறைமுக நகரான மங்களூரிலிருந்து 128 கிமீ தொலைவிலும், மாநில தலைநகரான பெங்களூருவிலிருந்து 224 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஹில் ஸ்டேஷன். ப்ரெஷ்ஷான காபி, சந்தனம் மற்றும் ஈரப்பதத்தின் மணம் உங்கள் மனதையும், இதயத்தையும் புத்துணர்ச்சியடைய செய்யும். நவம்பர் - பிப்ரவரி மாதங்களில் சக்லேஷ்பூருக்கு சென்றால் மிகவும் சிறப்பான கிளைமேட்டாக இருக்கும்.

சக்லேஷ்பூரில் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள்:

1. மஞ்சராபாத் கோட்டை (Manjarabad Fort):

கடந்த 1792-ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட இந்த கோட்டை நிச்சயமாக நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு வியக்கதக்க இடமாக இருக்கும். நட்சத்திர வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை ட்ரோன் வியூவில் அட்டகாசமாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,240 அடி உயரத்தில் இந்த ஸ்டார் வடிவிலான கோட்டை அமைந்திருக்கிறது. மிக அதிக உயரத்தில் இந்த கோட்டை இருப்பதால் கோட்டையின் மேற்பகுதி எப்போதும் மூடுபனியால் சூழப்பட்டிருக்கும். அதனால் தான் இந்த கோட்டைக்கு திப்பு சுலதான் மஞ்சராபாத் என பெயரிட்டார். கன்னடத்தில் ‘Manju' என்றால் மூடுபனி என்று அர்த்தம்.2. ஒம்பட்டு குடா மலை (Ombattu Gudda Hill):

டூரின் போது நீங்கள் மலையேற விரும்பினால் அதற்கு சரியான இடம் ஒம்பட்டு குடா மலை. இந்த மலையேற்ற பாதை சிறிது சவால் நிறைந்தது என்றாலும் இதனால் கண்ணை ஈர்க்கும் அழகான நிலப்பரப்பு மலையேறும் சிரமத்தை பெரிதாக தெரிய வைக்காது. ஒம்பட்டு குடா மலையில் முழுவதுமாக நீங்கள் மலையேற விரும்பினால் நீங்கள் கிடைக்க வேண்டிய முழு தூரம் சுமார் 3236 அடி ஆகும்.

3. மஞ்சேஹள்ளி நீர்வீழ்ச்சி (Manjhehalli Waterfalls):

நீங்கள் சக்லேஷ்பூர் சென்றால் தவறாமல் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கிய இடம் இந்த மஞ்சேஹள்ளி நீர்வீழ்ச்சி. இயற்கையான நீர்வீழ்ச்சியான இந்த இடத்தில் சுத்தமான நீரோடையையும் காணப்படும். இது பிரமாண்டமான பெரிய நீர்வீழ்ச்சி இல்லை என்றாலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் ஃபன் செய்வதற்கு சிறந்த இடமாக இருக்கும். ஆனால் இந்த நீர்விழ்ச்சியில் இருக்கும் பாறைகள் வழுக்கும். அதே போல அருகில் உடை மாற்ற வசதியாக ரூம்கள் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜோத்பூரின் நீல நகரம் : இங்கு வீடுகள் நீல நிறத்தில் இருக்க என்ன காரணம் ? ராஜஸ்தானில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

4. பிஸ்ல் வியூபாயிண்ட் (Bisle Viewpoint):

மலை நகரத்திற்கு சென்று விட்டு ஒரு வியூபாயிண்ட்டை சேர்ந்ரு பார்க்கா விட்டால் எப்படி.? மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கண்கவர் காட்சிகளைக் கண்டு மயங்க நீங்கள் கட்டாயம் பிஸ்ல் வியூபாயிண்ட்செல்ல தயாராகுங்கள். பிஸ்லே காட் அருகே அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து, யெனிக்கல்லுபெட்டா, தொட்டபெட்டா மற்றும் புஷ்பகிரி & குமாரபர்வதா ஆகிய 3 மலை தொடர்களின் கண்கவர் காட்சியை நமக்கு காட்டுகிறது. மயில், குரங்கு, புள்ளி மான், யானை போன்ற பலவகையான காட்டு விலங்குகளை ரிசர்வ் காடுகளின் வழியே பிஸ்ல் வியூபாயிண்ட் செல்லும் போது கண்டு மகிழலாம்.5. பேலூர் மற்றும் ஹலேபிட் (Belur And Halebid):

இவை இரண்டும் வெவேறு இடங்கள் என்றாலும் இவற்றில் அமைந்திருக்கும் கோயில்கள் புகழ்பெற்றவை. இரு நகரங்களும் அருகருகே அமைந்திருக்கின்றன என்பதால் இவை இரட்டை நகரங்கள் எனப்படுகின்றனர். எனவே இந்த 2 இடங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்றால் கொடாஅ மற்றொரு இடத்திற்கும் தவறாமல் செல்லுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hill Stations, Tourist spots, Travel, Travel Tips

அடுத்த செய்தி