ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுற்றுலாத் தலங்களில் நம்பர் 1 என இந்திய அளவில் கெத்து காட்டும் தமிழ்நாடு : சுற்றிப்பார்க்க வருவோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

சுற்றுலாத் தலங்களில் நம்பர் 1 என இந்திய அளவில் கெத்து காட்டும் தமிழ்நாடு : சுற்றிப்பார்க்க வருவோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

தமிழ்நாடு சுற்றுலாதலம்

தமிழ்நாடு சுற்றுலாதலம்

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுற்றுலாத் துறையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொற்றுநோய் காரணமாக மாநிலம் சில அடிகளை சந்திருந்த போதிலும், இந்த மாநில அரசு மிகவும் சுவாரஸ்யமாக மீண்டுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

"கரைகளை கடக்கும் தைரியம் இல்லாதவரை மனிதனால் புதிய கடல்களைக் கண்டுபிடிக்க முடியாது" என்று பயணம் செய்வதன் முக்கியதுவத்தை 'சிம்பிள்' ஆக விவரிக்கிறார் ஆண்ட்ரே கிட். இதுபோன்ற 'டிராவல் கோட்ஸ்' புரிய வைக்காத பயணப்படுவதின் முக்கியதுவத்தை கொரோனா காலம் மற்றும் லாக் டவுன்கள் புரிய வைத்தன என்றே கூறலாம்.

அதனொரு விளைவாக தமிழ்நாடு - உள்நாட்டு பயணிகளின் முக்கிய சுற்றுலாத் தலமாக உருமாறி உள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்களின் படி, அதிக சதவீத பார்வையாளர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. வெளியான அறிக்கையின்படி, இம்மாநிலத்தின் பங்கு 23 சதவீதமாக உள்ளது, தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தரப் பிரதேசம் 14.1% பார்வையாளர் பங்கை பெற்றுள்ளது.

வெளியான அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் வெளிப்படுத்துகிறது. அதன்படி சுமார் 14 கோடி பேர் தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். தமிழ் நாட்டிற்கு அடுத்தபடியாக உள்நாட்டு சுற்றுலாவில் இரண்டாவது முன்னணி மாநிலமான உத்தரபிரதேசம் சுமார் 8.6 கோடி பேர் பார்வையாளர்களை கடந்த 2020 ஆம் ஆண்டில் தன் வசம் ஈர்த்துள்ளது.

உள்நாட்டு பயணிகளின் வருகையில் மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 17.6% மொத்த பங்குடன் முதலிடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவிற்கு சுமார் 12.6 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர், அதே நேரத்தில் தமிழகத்தில் 12.2 லட்சம் பார்வையாளர்கள் வந்து உள்ளனர்.

சென்னையில் கோடையை குதூகலமாக்கும் டைனோசர் திருவிழா : தேதி, இடம் குறித்த தகவல் இதோ...

இப்படி சிறந்த சுற்றுலா செயல்திறன் கொண்ட மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு செல்ல ​​டெல்லி விமான நிலையம் அதிகபட்சமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்த வருகையின் கீழ் சுமார் 30 லட்சம் பேர் இந்த விமான நிலையத்தை கடந்துள்ளனர். டெல்லியின் பங்கு சதவீதம் 36.4% ஆகும். மறுபுறம், சென்னை விமான நிலையம் பெங்களூரு விமான நிலையத்திற்கு சற்று கீழே நான்காவது இடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையம் மொத்தம் 57,102 பார்வையாளர்களுக்கு வழிவிட்டுளள்து, இந்த எண்ணிக்கை மொத்த சதவீதத்தில் 6.8% ஆகும்.

அதிகப்பட்ச வெளிநாட்டுப் பார்வையாளர்கள் என்று பார்க்கும் வங்காளதேசத்திலிருந்து அதிகம் பேர் வந்து உள்ளனர், அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் மேற்கண்ட மூன்று நாடுகளின் பங்கு சதவீதம் முறையே 20%, 14.3% மற்றும் 10.6% ஆகும்.

தற்போது மட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுற்றுலாத் துறையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொற்றுநோய் காரணமாக மாநிலம் சில அடிகளை சந்திருந்த போதிலும், இந்த மாநில அரசு மிகவும் சுவாரஸ்யமாக மீண்டுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிகிறது.

First published:

Tags: Tamilnadu, Travel