Home /News /lifestyle /

பயணிகள் கவனத்திற்கு.. மேகாலயாவில் அத்திவேர் பாலம் கொண்ட மாவ்லின்னாங் கிராமத்திற்கு ஒரு பயணம்..!

பயணிகள் கவனத்திற்கு.. மேகாலயாவில் அத்திவேர் பாலம் கொண்ட மாவ்லின்னாங் கிராமத்திற்கு ஒரு பயணம்..!

மாவ்லின்னாங் கிராமம் 100% கல்வித் தேர்ச்சி பெற்றதாகும். இங்கு குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்குத் தான் சொத்துரிமை உண்டு. அதே போல் குடும்பத்தின் இளம், பெண்வாரிசுக்குத் தான் சொத்தின் பெரும்பகுதி சென்று சேரும்.

மாவ்லின்னாங் கிராமம் 100% கல்வித் தேர்ச்சி பெற்றதாகும். இங்கு குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்குத் தான் சொத்துரிமை உண்டு. அதே போல் குடும்பத்தின் இளம், பெண்வாரிசுக்குத் தான் சொத்தின் பெரும்பகுதி சென்று சேரும்.

மாவ்லின்னாங் கிராமம் 100% கல்வித் தேர்ச்சி பெற்றதாகும். இங்கு குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்குத் தான் சொத்துரிமை உண்டு. அதே போல் குடும்பத்தின் இளம், பெண்வாரிசுக்குத் தான் சொத்தின் பெரும்பகுதி சென்று சேரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
விடுமுறை என்றால் நாம் வாழும் நகரங்களை விடுத்து இதற்குத் தொடர்பில்லாத ஒரு இடத்திற்குச் சென்று வர வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவர்.அப்படி ஒரு வித்தியாசமான மலை கிராமத்திற்கு உங்களை இன்று அழைத்துச் செல்கிறோம்.

வடகிழக்கு இந்தியப் பகுதிகள் எல்லாமே கலாச்சார கலவைகளைக் கொண்டு தனித்துவமானதாக இருக்கும். தாய் வழி சமூகம் என்று வரலாற்றுப் புத்தகங்களில் படித்த பழக்கம் எல்லாம் இன்றும் அங்கே வழக்கில் உள்ளது. இன்றும் அங்கு குடும்பத் தலைவிகளுக்குத் தான் மதிப்பு அதிகம்.

அதுவும் குறிப்பாக மேகாலயா பகுதியில் உள்ள காஷி/காசி மலை எடுத்துக்கொண்டால் அந்த பழங்குடியின மக்கள் தேர்ந்த நெறிமுறைகளை பின்பற்றுபவர்களாக இருப்பர். அங்கே உள்ள கிராமத்திற்கு தான் இன்று நாம் ஒரு ட்ரிப் அடிக்க இருக்கிறோம்.

மாவ்லின்னாங் என்பது மேகலாய காசி மலையில் உள்ள ஒரு கிராமம். ஆசியாவின் தூய்மையான கிராமங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது. பழத்தோட்டங்கள், ஓடும் நீரோடைகள், எப்போதும் பசுமையான சுற்றுப்புறங்கள், அசையும் பனை மரங்கள் மற்றும் காசி மலையின் பாதுகாக்கப்பட்ட மரபுகள் ஆகியவை மேகாலயாவின் தெற்குத் தொடர்களின் விளிம்பில் உள்ள கிராமத்தை இன்னும் அழகாக்குகிறது.

12 கிமீ நதியில் ராஃப்டிங் பண்ணத் தயாரா... தென்னிந்தியாவில் அதற்கான இடம் இதோ!

இந்த கிராமம் 100% கல்வித் தேர்ச்சி பெற்றதாகும். இங்கு குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்குத் தான் சொத்துரிமை உண்டு. அதே போல் குடும்பத்தின் இளம் பெண் வாரிசுக்குத் தான் சொத்தின் பெரும்பகுதி சென்று சேரும்.

மாவ்லின்னாங் அருவி

டவ்கியிலிருந்து மாவ்லின்னாங் கிராமத்திற்கு காடுகளுக்குள் நீங்கள் செல்லும் போது, ​​அழகிய மாவ்லின்னாங் அருவியைக் காணலாம். உயரமான மலையில் இருந்து ஒரு தண்ணீரால் ஏற்படுத்தப்பட்ட தூண் போல ரம்மியமாக காட்சியளிக்கும்.வேர் பாலம்..

மேகாலயாவின் மிகவும் பிரபலமான சின்னம் இங்கே காணப்படுகிறது. நோஹ்வெட் லிவிங் ரூட் பிரிட்ஜ் எனப்படும் பூமியின் உயிரோட்டமுள்ள வேர்களால் ஆன பாலம் இங்கு தான் உள்ளது. Ficus Elastica எனும் அத்தி மரத்தின் வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இந்த பாலம் உருவாகியுள்ளது. இது யுனெஸ்கோவின் பாரம்பரியத் தளங்களுள் ஒன்றாகும். இதன் அடியில் இருக்கும் நதியில் நீராடியபடியே இந்த ஒற்றை அடுக்குப்  பாலத்தின் அழகை ரசிக்கலாம். இதற்கு ரூ.30 கட்டணமாகும்.எபிபானி தேவாலயம்

மாவ்லின்னாங் கிராமத்தின் முக்கிய அடையாளமான எபிபானி தேவாலயம் உள்ளது.இது 100 ஆண்டுகள் பழமையான கட்டிடமாகும். இது இன்னும் தனக்கான பழைய அழகைக் கொண்டுள்ளது. இந்த தேவாலயத்தைச் சுற்றி பசுமையான பூந்தோட்டங்கள் கண்ணைக் கவரும்.

கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள், வண்ண உயிரினங்களை ரசிக்க ஆர்வமா.. இந்தியாவின் சிறந்த இடங்கள் இதோ

ஸ்கை வாக்

மவ்லின்னாங் கிராமத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் ஸ்கை வாக் என்று அழைக்கப்படும் இந்த அழகான மர வீடு உள்ளது. இது நோஹ்வெட் வியூபாயிண்ட் என்ற பெயராலும் அறியப்படுகிறது. சுமார் 85 அடி உயரம் கொண்ட இது முற்றிலும் மூங்கில் கம்புகளால் கட்டப்பட்டுள்ளது. சணல் மற்றும் மூங்கில் கயிறுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இதை வங்காள நாட்டின் எல்லைப்பகுதி என்பதால் அழகிய மாவ்லின்னாங் கிராமத்தோடு பங்களாதேஷ் சமவெளிகளையும் பார்த்து ரசிக்க முடியும். இதற்கு 10 ரூபாய் கட்டணமாகும்.திருவிழாக்கள்:

ஜூலையில் பெஹ்டியன்க்லாம், செப்டம்பர் மற்றும் டிசம்பருக்கு இடையில் வாங்கலா மற்றும் அக்டோபர் அல்லது நவம்பரில் நோங்க்ரெம் நடன விழா ஆகியவை மாவ்லின்னாங் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அனுசரிக்கப்படும் முதன்மை திருவிழாக்களாகும்.பயணிகள் கவனத்திற்கு…
விமானம் மூலம் செல்ல விரும்பினால் சென்னையில் இருந்து கவுகாத்தி விமான நிலையம் அடைந்து அங்கிருந்து 187 கி.மீ பேருந்து மூலம் பயணித்தால் மாவ்லின்னாங் கிராமம் அடையலாம்.
இங்கிருந்து ஷில்லாங் விமான நிலையம் 99 கி.மீ தொலைவில் உள்ளது. ரயில் மூலம் செல்ல விரும்பினால் சென்னையில் இருந்து கவுகாத்தி ரயில் நிலையம் அடைந்து 164 கி.மீ பயணிக்க வேண்டும். சிரபுஞ்சி, ஷில்லாங், கவுகாத்தியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் இந்த இடம் பூமியில் தான் உள்ளதா இல்லை, சொர்க்கமா எனும் அளவிற்கு அழகாக இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…
Published by:Ilakkiya GP
First published:

Tags: Meghalaya, Travel, Travel Guide

அடுத்த செய்தி