Home /News /lifestyle /

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் முதல் ஹிராம் பிங்காம் வரை..உலகின் பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்களின் பட்டியல்.

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் முதல் ஹிராம் பிங்காம் வரை..உலகின் பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்களின் பட்டியல்.

 பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்கள்

பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்கள்

உலகெங்கிலும் உள்ள சில ரயில்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் பிரம்மாண்டமான ஆடம்பர சேவைகளை வழங்கும் ரயில்கள் உள்ளன. அவற்றை ஒரு பார்வை பார்ப்போம் வாங்க…

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இலக்கை விட பயணம் சிறந்தது என்று கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் விடுமுறை என்றால் குடும்பத்துடன் ரயில் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான எளிய மற்றும் வசதியான வழி, ரயில் பயணம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் டீ, காபி , சமோசா விற்கும் சத்தம் இல்லாமல் பயணம் நிறைவடையாது.

உலகெங்கிலும் உள்ள சில ரயில்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் பிரம்மாண்டமான ஆடம்பர சேவைகளை வழங்கும் ரயில்கள் உள்ளன. அவற்றை ஒரு பார்வை பார்ப்போம் வாங்க…

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்
அக்டோபர் 4, 1883 இல் அமெரிக்காவில் உலகின் முதல் உறங்கும் கார்களைக் கொண்ட இரயில் பாதைகளைக் கண்டுபிடித்த பெல்ஜிய பொறியாளர் ஜார்ஜஸ் நாகல்மேக்கர்சால் தொடங்கப்பட்டது. இந்த ரயிலின் பெயரை பிரபல மர்ம கதைகள் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி தனது மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நாவலிலும் பயன்படுத்தியுள்ளார். முதன்முறையாக, பாரிஸில் தொடங்கி மிலன் மற்றும் வெனிஸ் வழியாக இஸ்தான்புல்லுக்கு சென்று சேர்ந்தது. மே 20, 1977 அன்று, தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது.



கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள், வண்ண உயிரினங்களை ரசிக்க ஆர்வமா.. இந்தியாவின் சிறந்த இடங்கள் இதோ

பேலஸ் ஆன் வீல்ஸ் மக்களை ராஜஸ்தான் மற்றும் ஆக்ராவின் நிலப்பரப்பு வழியாக ஒரு அரச மற்றும் ஆடம்பரமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த வரலாற்று நகரங்களின் கலாச்சார நுணுக்கங்களை அனுபவிக்கும் போது, ​​​​அவை ஊழியர்களின் சேவைகளால் ஈர்க்கப்படுகின்றன. இந்த ரயிலில் குளியலறைகள் கொண்ட விசாலமான டீலக்ஸ் கேபின்கள், இரண்டு உணவகங்கள், ஒரு பார் மற்றும் ஸ்பா ஆகியவை அடங்கும்.



ரோவோஸ் ரயில்
1989 இல் நிறுவப்பட்ட ரயில் அதன் உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்திற்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. விண்டேஜ் மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட இந்த ரயில் பயணம் 2 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ரயில் பயணிகளுக்கு மிகச்சிறந்த தென்னாப்பிரிக்க ஒயின்கள் சிலவற்றுடன் சிறந்த உணவு வகைகளை வழங்குகிறது. விக்டோரியா நீர்வீழ்ச்சி, எட்டோஷா தேசிய பூங்கா மற்றும் பல்வேறு இடங்கள் வழியாக செல்கிறது.



கோல்டன் ஈகிள்-டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கோல்டன் ஈகிள்-டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் ரஷ்யாவில் மாஸ்கோவில் இருந்து ,விளாடிவோஸ்டாக் ,பாம் மற்றும் யாகுட்ஸ்க் வரையான மூன்று வழித்தடங்களில் இயங்குகிறது. வரலாற்று நகரமான இர்குட்ஸ்க், உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான பைக்கால் ஏரியை ஆகியற்றைக் காணலாம்.



தி கான்
ஆஸ்திரேலிய டார்வினிலிருந்து அடிலெய்டுக்கு நான்கு நாள் பயணத்திற்கு பயணிகளை கான் ரயில் அழைத்துச் செல்கிறது. 1924 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படும் இந்த ரயில் நவீன பயணத் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டது. இரயில் பயணத்தில் கூபர் பெடியின், ஓபல் சுரங்க நகரமான ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் ஆகியவை அடங்கும். மேலும் உலுரு போன்ற இடங்களுக்கு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகளை பயணிகளுக்கு வழங்குகிறது.



ராக்கி மலை ரயில்
நான்கு மறக்கமுடியாத ரயில் வழித்தடங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவையின் இரண்டு நிலைகளுடன், ராக்கி மலை ரயில் செயல்படுகிறது. கனடிய ராக்கீஸின் கம்பீரமான இயற்கைக்காட்சிகள் வழியாக செல்ல வாய்ப்பளிக்கிறது.

மிக உயரமான மலைச் சிகரங்கள், வசீகரிக்கும் சிவப்பு மணற்கல் நிலக்காட்சிகள் மற்றும் பசுமையான காடுகளின் அழகை பயணத்தில் ரசிக்கலாம். வழியில் வரும் இடங்களில் பான்ஃப் அல்லது லேக் லூயிஸ், ஜாஸ்பர், க்ளென்வுட் ஸ்பிரிங்ஸ் போன்றவைகளையும் காணலாம்



ஹிராம் பிங்காம்
இந்த பெருவியன் சாகச சவாரி உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு, லாஸ்ட் சிட்டி ஆஃப் தி இன்காஸ் வழியாக பயணிக்கிறது. இந்த பழங்கால ரயிலில் 1920 களில் புல்மேன் பாணி பெட்டிகள் உள்ளன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Fourth Best Luxury Train, Train, Travel, Trip

அடுத்த செய்தி