வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால், அங்கு செல்ல வேண்டுமென்றால் அதிக அளவில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதால் பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற கனவை கைவிட்டு விடுவார்கள். இதுவே இதற்கான செலவுகள் மிக குறைவு என்று சொன்னால் நிச்சயம் எல்லோரும் சுற்றுலா செல்ல தயாராகி விடுவர். இப்படியொரு சிறப்பான வாய்ப்பை தான் வியட்நாம் விமான நிறுவனங்கள் ஏற்படுத்த உள்ளது.
ஜூலை மாதத்தில் 7/7 என்கிற இரட்டை நாளை முன்னிட்டு, வியட்ஜெட் நிறுவனம் ஒரு வார கால டிக்கெட் தள்ளுபடியை 777,777 விமானங்களுக்கு வெறும் ரூ. 26-இருந்து இல் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு டிக்கெட்டுகள் வியட்ஜெட் (Vietjet) நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் முன்பதிவு செய்வதன் மூலம் செல்லுபடியாகும்.
இந்தியாவில் உள்ள பயணிகள் புதுடெல்லி மற்றும் மும்பையிலிருந்து ஹனோய், ஹோ சி மின் நகரம் மற்றும் ஃபூ குவோக் (செப்டம்பர் முதல்) வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய சிறப்பு ஒப்பந்தத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வியட்ஜெட் நிறுவனம் சமீபத்தில் புது டெல்லி, மும்பை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் பெங்களூர் ஆகிய தலங்களை குறிப்பிட்டு, வியட்நாமின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான டா நாங்கிற்கு இணைக்கும் புதிய சர்வதேச வழித்தடங்களாக இந்த ஐந்து விமான நிலையங்களை அறிவித்துள்ளது. புதிய சேவைகள் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் வாரத்திற்கு நான்கு முதல் ஏழு விமானங்கள் வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Also Read : கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு நாள்... குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க ஏற்ற இடங்கள்
இதற்கு முன்னதாக, வியட்ஜெட் விமான நிறுவனம் ஜூன் 27 அன்று ஐந்து இந்திய நகரங்களை கடலோர நகரத்துடன் இணைக்கும் என்று அறிவித்திருந்தது. இந்த விமான நிறுவனம் புது டெல்லி, மும்பை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் பெங்களூருவை வியட்நாமிய கடலோர நகரமான டா நாங்குடன் இணைக்கும். தற்போது வியட்ஜெட் நிறுவனம் வியட்நாம் மற்றும் இந்தியா இடையே நான்கு சேவைகளை இயக்குகிறது. அதில் புது டெல்லி - ஹனோய், மும்பை - ஹனோய், புது தில்லி - ஹோ சி மின் நகரம் மற்றும் மும்பை - ஹோ சி மின் நகரம் உட்பட 4 சேவைகள் அடங்கும்.
செப்டம்பர் 2022ல் தீவு நகரமான ஃபூ குவோக் உடன் புது தில்லி மற்றும் மும்பையை இணைக்கும் மேலும் இரண்டு வழித்தடங்களைத் தொடங்குவதற்கான திட்டங்களை ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஐந்து புதிய வழித்தடங்களைத் தொடங்குவதற்கான அறிவிப்பை 2022 ஆம் ஆண்டிருக்கான டா நாங் முதலீட்டு மன்றத்தில்வெளியிடப்பட்டது என்று வியட்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.