பயணங்கள் செல்வது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றுதான். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை சுழற்சி முறையில் சிக்கிக் இருப்பவர்களுக்கு, அனைத்திலிருந்தும் ஓய்வெடுத்துக் கொண்டு நம் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வது உடலையும் மனதையும் உற்சாகமாக வைக்கும் ஒரு வழிமுறையாகும்.
ஆனால் சிலருக்கு இவ்வாறு பயணங்கள் மேற்கொள்ள ஆர்வம் இருந்தும் பயணங்களின் போது ஏற்படும் சில பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பயணங்கள் செல்வதை தவிர்த்து வருவார்கள்.
உதாரணத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதும், தெரிந்த இடத்தில் இருந்து விலகி போவது போன்று பல்வேறு விதமான காரணிகள் அவர்களை மனதளவில் கவலை கொள்ள செய்கின்றன. வேறு சிலருக்கோ விமானத்தில் பறப்பதோ அல்லது வீட்டிலிருந்து நீண்ட நாட்கள் விலகி இருப்பதால் உண்டாகும் கவலை ஆகியவை அவர்கள் பயணம் செல்வதை தடுக்கும் காரணிகளாக இருந்து வருகின்றன.
இவ்வாறு பயணத்தின் போது உண்டாகும் கவலைகளை சரி செய்யவும் மிக மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளவும் சில குறிப்பிட்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றினாலே போதுமானது. பயணங்களின் போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும் கவலைகளிலிருந்து வெளிவரவும் என்ன விதமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் எப்படி எல்லாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்
சமீப காலங்களில் வான்வழி பயணங்களை மேற்கொள்வோருக்கு விமான நிலையங்களில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. உதாரணத்திற்கு இலவச உணவு, அதிவேக வைஃபை இன்டர்நெட், குளியலறைகள் போன்ற பல்வேறு விதமான வசதிகள் விமான நிலையத்தின் சார்பில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர பயணிகளுக்கு வேறு ஏதேனும் கூடுதல் சேவைகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை நிறைவேற்றுவதற்கும் அங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் பெரும்பாலான பயணிகளுக்கு கவலைகள் குறைந்து தங்களது பயணத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு நம்மை கவலை கொள்ள செல்லும் சில விஷயங்களை அறிந்து கொண்டு அதனை சரி செய்தாலே பயணங்கள் தொடர்பான நமது கவலைகள் மறந்துவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதைத்தவிர பயணங்களின் போது நம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களும் உண்டு:
- குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்து விட வேண்டும். இதன் மூலம் அந்த இடத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் தேவையற்ற பதட்டத்தை குறைக்கவும் முடியும்.
- உடல்நிலை மற்றும் மன நலனின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சரியான அளவு உணவை உட்கொண்டு உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் மூச்சுப் பயிற்சிகள், தியானம், ஆழ்ந்த உறக்கம் ஆகியவை மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும்.
- நமக்கு தேவைப்படும் பொருட்களை முன்னதாகவே தேர்வு செய்து அவற்றை பேக் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த பொருள் தேவையோ அவற்றை மட்டும் தேர்வு செய்து பேக் செய்வதன் மூலம் தேவையற்ற சுமைகளை குறைக்க முடியும்.
Also Read : இந்த ஒரு ரயில் பாதைக்காக பிரிட்டிஷாருக்கு இன்றும் பணம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு...
- அடையாள அட்டைகள், கோப்புகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பணப்பை, பாஸ்போர்ட்டுகள், அடையாள அட்டைகள் ஆகியவற்றை பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து அவற்றின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும்.
- சில சமயங்களில் நமது பயண திட்டங்களில் மாறுதல்கள் உண்டாக்கலாம். இது போன்ற எதிர்பாராத சில மாற்றங்களுக்கு முன்னரே நாம் தயாராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்த மாற்றங்கள் நமது பயண அனுபவத்தை முழுவதுமாக கெடுத்து விடாத படியும் கவனமாக இருக்க வேண்டும்.
- முக்கியமான அவசரகால தொலைபேசி எண்களை எப்போதும் நம்முடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆன்லைனிலோ அல்லது டைரியிலோ அவற்றை பதிவு செய்து வைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anxiety, Travel Tips