Home /News /lifestyle /

சென்னைக்கு அருகிலேயே அற்புதமான டிராவல் டெஸ்டினேஷன்கள்.. பட்ஜெட் டிராவல் இதோ

சென்னைக்கு அருகிலேயே அற்புதமான டிராவல் டெஸ்டினேஷன்கள்.. பட்ஜெட் டிராவல் இதோ

சென்னைக்கு அருகிலான சுற்றுலா இடங்கள்.

சென்னைக்கு அருகிலான சுற்றுலா இடங்கள்.

சென்னைக்கு அருகிலேயே குறைந்த பட்ஜெட்டில் டிராவல் செய்ய அற்புதமான இடங்கள் உள்ளன. அவற்றை நாம் கவனிப்பதில்லை!

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  நாட்டில் உள்ள பரபரப்பு மிகுந்த மாநகரங்களில் சென்னையும் ஒன்றாகும். காலையில் எழுந்து நம்மை தயார்படுத்திக் கொண்டு, நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணித்து அலுவலகம் சென்று சேருவதே மிகப் பெரிய போராட்டம் தான். மேலும், அலுவலகத்தின் வேலைப் பளு எல்லாவற்றையும் சமாளித்து, மீண்டும் வாகன நெருக்கடிகளில் நீந்தி வீடு வந்து சேர்வதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது.

  திரும்பிய திசையெங்கும் வானளாவிய கட்டடங்கள், சர், சர் என்று விரைந்து செல்லும் வாகனங்கள் என்று சென்னை மாநகரம் எப்போதும் இரைச்சல் மிகுந்ததாக இருக்கும். இதற்கு மத்தியில் நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.

  அருகாமையில் உள்ள தியேட்டர்கள், சின்னஞ்சிறிய பூங்காக்கள் போன்றவை நமக்கு ஓரளவு ஆறுதலைக் கொடுத்தாலும், பெரிய அளவுக்கான திருப்தி அவற்றில் கிடைப்பதில்லை. இதனால் தான் நேரம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் மக்கள் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

  ஆனால், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் அதே கடற்கரை, அதே சென்னை என சுற்றி, சுற்றி உங்களுக்கு போர் அடித்திருக்க கூடும். ஆகவே தான், சென்னை தவிர்த்து எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்தச் செய்தியில் பட்டியல் போட்டிருக்கிறோம்.

   

  பழவேற்காடு

  சென்னை மாநகரில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் அமைந்துள்ள கடலோர நகரம். இங்குள்ள நீர்நிலைகளில் எண்ணற்ற பறவை இனங்களை நீங்கள் கண்டு மகிழலாம்.

  மகாபலிபுரம்

  புராதானச் சின்னங்கள் மற்றும் குடவரைக் கோவில்களை கொண்ட பிரபலமான சுற்றுலா தளம் ஆகும். மத ரீதியாகவும், கலை ரீதியாகவும் பல அதிசயங்களை உள்ளடக்கியதாக மகாபலிபுரம் இருக்கிறது.

  நாகலாபுரம்

  பசுமை போர்த்திய மலைப் பகுதிகள், அருவி, குளங்கள் நிறைந்த நாகலாபுரம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய இடமாகும். இங்கு முகாம் அமைத்து தங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  திருப்பதி

  நீங்கள் இறை நம்பிக்கை மிகுந்தவர் என்றால் கண்டிப்பாக இங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். அதிலும் மலையேற்றம், பசுமைக் காடுகளுக்குள் பயணம் மற்றும் ஆன்மிகம் என அனைத்து அனுபவங்களும் ஒருங்கிணைந்து கிடைக்கும்.

  பாண்டிச்சேரி

  பிரெஞ்சு கட்டட கலை வடிவமைப்புகளில் பல வண்ணமயமான கட்டடங்கள், அழகிய கடற்கரையோரத்தில் நிலவு ஒளியில் நடைபயணம் மற்றும் ஆங்காங்கே உள்ள கலாச்சார ரீதியிலான வண்ண மயமான அலங்காரங்கள் போன்றவை நம் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

  ஏலகிரி

  ஏலகிரியை ஏழைகளின் சொர்க்கம் என்பார்கள். மலைப் பகுதியான இங்கு காணும் இடமெல்லாம் பசுமையான போர்வையும், ஏரிகளும் நம் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, மலையேற்றம் செய்து ஜலகம்பாறை அருவியில் ஒரு ஆனந்தக் குளியல் போடலாம்.
  First published:

  Tags: Chennai, Travel

  அடுத்த செய்தி