மலைகளின் அரசி என்ற பெருமையை சுமந்து நிற்பவள் நீலகிரி மலை தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அமைந்துள்ள முக்கியமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டா, அவலாஞ்சி ஏரி, மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல சுற்றுலா தலங்களை தன்னுள் ஒளித்துவைத்துள்ளது.
என்னதான் இத்தனை இடங்கள் இருந்தாலும் ஊட்டிக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அதன் மலை ரயிலில் போக வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும். குன்னூர் , மேட்டுப்பாளையம் ஆகிய இரண்டுஇடங்களில் இருந்தும் ஊட்டிக்கு மலை ரயில் உள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்வது தான் தனித்துவம்.
சாதாரண பாதையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் ஏறும் போது சாதாரண தண்டவாள பாதையோடு பற்கள் பொருந்திய சங்கிலி பாதையையும் சேர்த்துக்கொள்ளும். ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட இந்த தனித்துவமாக பாதை 1899 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே மிக செங்குத்தான அதே நேரம் மிக நீளமான மீட்டர் கேஜ் ரயில் பாதை எனும் சிறப்பு இதற்கு உண்டு.
ஊட்டியின் முழு அழகை யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த ரயில் பயணம் எவ்வளவு அழகாக்கும் என்பதை ரயிலில் பயணம் செய்த பின்னர் நீங்களே புரிந்து கொள்வீர்கள். அப்படி ஒரு முக்கிய பயணத்தை மிஸ் செய்து விட கூடாது என்பதற்காக கடந்த வாரம் இங்கிலாந்தில் இருந்து வந்த 1 குழு ஊட்டி நீராவி மலை ரயிலை ரூ.3 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மலை ரயிலை வாடகைக்கு எடுக்க முடியுமா? அது சாத்தியமே என்று யோசிக்கிறீர்களா? முடியும்! ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகின்றனர். நம் நாட்டின் பாரம்பரிய கோவில்கள், புராதன நினைவுச் சின்னங்கள், மலைப்பிரதேசங்கள் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் எல்லாம் பார்த்து விட்டு நாடு திரும்புகிறார்கள். அப்படி வரும் பயணிகளுக்கு இது போன்ற வசதி வழங்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த 16 சுற்றுலாப் பயணிகள் கடந்த வாரம் டார்ஜிலிங், சிம்லா, ஆக்ராவில் உள்ள நினைவு சின்னங்கள், பதேபூர் சிக்ரி ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு தமிழ்நாடு வந்துள்ளனர். ஊட்டி மலை ரயிலைப் பற்றி அறிந்தவர்கள் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் கோயம்பத்தூர் சென்றுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இந்த சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணித்துள்ளனர். அதற்காக ரூ.3.6 லட்சத்திற்கு ரயிலை வாடகைக்கு எடுத்தனர்.
மலை ரயிலில் பயணிக்க நாம் முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். அதை பயன்படுத்தியே ரயிலை வாடகைக்கு எடுத்ததாக அவர்கள் கூறினார்கள்.மலை ரயிலில் பயணித்தபடி ஊட்டி மலை, பள்ளத்தாக்கு, அருவிகள் அனைத்தையும் கண்டு கழித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படும் ஊட்டி மலை ரயில் உதகமண்டலம்-மேட்டுப்பாளையம், உதகமண்டலம்- குன்னூர் வழித்தடங்களில் செயல்படுகிறது. அதற்கான டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே இணையதளமான www.irctc.co.in மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
இதையும் படிங்க:சிவிங்கிப்புலி சஃபாரி செய்ய ஆசையா..? அதற்கான வாய்ப்பு இந்த மாதம் தொடங்க இருக்கு..!
நேரில் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். சீசன் நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், 2-3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வது நன்று.
விலை விபரம்:
முதல் வகுப்பு - நபருக்கு ரூ. 205
இரண்டாம் வகுப்பு- நபருக்கு ரூ. 30
முன்பதிவு செய்யப்படாத பிரிவினருக்கு ரூ. 15
முதல் வகுப்பில் 12 இருக்கைகளும், இரண்டாவது வகுப்பில் 88 இருக்கைகளும் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.