முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வேலை செஞ்சுட்டே 7 கண்டங்கள் 375 துறைமுகங்கள் கொண்ட 3 வருட கப்பல் பயணம் பண்ணலாம்..!

வேலை செஞ்சுட்டே 7 கண்டங்கள் 375 துறைமுகங்கள் கொண்ட 3 வருட கப்பல் பயணம் பண்ணலாம்..!

கப்பல் பயணம்

கப்பல் பயணம்

வீட்டில் இருந்து நீங்கள் வேலை செய்வது போல கடல் மீது கப்பலில் மிதந்துகொண்டே வேலை செய்யலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக ஒரு  சிறப்பு சலுகையை ஒரு கப்பல் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. லைஃப் அட் சீ க்ரூஸ்(Life at Sea Cruises) என்ற அந்த நிறுவனம் 7 கண்டங்களில் உள்ள 135 நாடுகளின் 375 துறைமுகங்களை பார்க்கும் மூன்று வருட கப்பல் பயணத்திற்கான முன்பதிவுகளை அறிவித்துள்ளது. 

MV ஜெமினி எனும் பெரிய கப்பலில் தான் இந்த மூன்று வருட பயணம் இருக்க போகிறது. அந்த கப்பலில் 400 அறைகள் மற்றும் 1,074 பயணிகள் தங்கும் அறைகள்  உள்ளன. இது 2023 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இஸ்தான்புல்லில் இருந்துபுறப்பட இருக்கிறது. CNN அறிக்கையின்படி, இந்த கப்பல் பயணம், இதுவரை பட்டியலிடப்பட்ட 14 உலக அதிசயங்களில் 13 உலக அதிசய தளங்களை உள்ளடக்கும் என்று தெரிய வருகிறது.

அந்த பட்டியலில் ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை(Christ the Redeemer statue), இந்தியாவில் உள்ள தாஜ்மஹால், மெக்சிகோவின் சிச்சென் இட்சா(Chichen Itza) மற்றும் சீனப் பெருஞ்சுவர் போன்றவை முக்கிய தலங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

இது குறித்த Life at Sea Cruises நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்கள் திங்கட்கிழமைகள் எப்போதும் பயங்கரமானவையா? ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான செயல்களைச் செய்வதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா? ஒரு பையை எடுத்து, அதில் உங்கள் லேப்டாப்பைக் போட்டுகொண்டு, 3 வருட Life at Sea Cruises பயணத்தில் சேருங்கள். உலகம் முழுவதும் எங்கள் அதிநவீன வணிக மையம் மற்றும் இலவச அதிவேக இணையம் உலகில் எங்கிருந்தும் நீங்கள் வேலை செய்ய அனுமதிக்கும்." என்று அறிவித்துள்ளது.

 Life at Sea Cruises  நிறுவனம் MV ஜெமினி கப்பலில் இதற்காக அலுவலகக் கட்டமைப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்து நீங்கள் வேலை செய்வது போல கடல் மீது கப்பலில் மிதந்துகொண்டே வேலை செய்யலாம். அதே நேரம் உலகத்தையே சுற்றி வந்து கொண்டிருப்போம். அதுமட்டுமின்றி கப்பலில் சர்வதேச குடியிருப்பாளராக பணிபுரியும் போது வரிச் சலுகைகளை பெரும் வசதிகளையும் சேர்த்துள்ளது.

அதன் இணையதளத்தின்படி, இந்த கப்பலில் 2 மீட்டிங்(meeting) அறைகள், 14 அலுவலகங்கள், ஒரு வணிக நூலகம், ஓய்வெடுக்கும் லவுஞ்ச் மற்றும் ஒரு கஃபே(cafe) ஆகியவற்றைக் கொண்ட முதல் தர வணிக மையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதோடு அலுவலகத்திற்கு தேவையான  திரைகள், அதிநவீன உபகரணங்கள், வைஃபை(WiFi), பிரிண்டர்கள் போன்ற வசதிகளும் உள்ளது. இதை நிர்வகிக்க தொழில்நுட்ப பணியாளர்களையும் நியமித்துள்ளனர். 

நிலத்தில் இருக்கும்போது சம்பாதிக்கும் பணத்திற்கே அதிக வரி கட்டி வருகிறோம். இதில் கடலில் மிதந்துகொண்டே வேலை செய்தால் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்குமே என்ற கவலை ஏற்படும். அதற்கும் ஒரு வழியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். கடலில் பணம் சம்பாதிப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை, ஆனால் இந்த பயணத்தின் போது சம்பாதிக்கும் பணத்திற்கு சர்வதேச வரிச் சலுகைகள் மூலம், நீங்கள் சம்பாதிப்பதில் அதிகமாக சேமிக்க வழிகளை ஏற்படுத்தி தருகிறார்கள்.

நன்றாக இருக்கிறதே. 3 வருடம் உலக முழுக்க சுற்றி பார்க்க போகிறோம். அதுபோக கடலில் பயணிக்கும்போது நம் அலுவலக வேலைகளையும் செய்து கொள்ளலாம் என்ற வசதி இருக்கிறதே இப்போதே முன்பதிவு செய்ய ஆசை வந்துவிட்டது தானே. அதற்கான விபரங்களையும் சொல்கிறோம். இந்த கப்பல் பயணத்திற்கு ஒரு நபருக்கு ஆண்டுக்கு $29,999 அதாவது இந்திய மதிப்பில், ரூ.24,51,300 முதல் $109,999 (ரூ.89,88,320) வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

பயணத்தின் விலையில் நிரந்தர அலுவலக இடம், கடற்கரை உல்லாசப் பயணங்கள், ஸ்பா சேவைகள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் மருந்துகள் மற்றும் சில பருவகால பிரீமியம் சேவைகள் ஆகியவை அடங்கும். விலை கேட்டதும் கொஞ்சம் நெஞ்சுவலி வருவது போல இருக்கிறது தானே. சம்பாதித்து சேர்த்து வைத்தவர்கள் இந்த பயணத்தை நிச்சயம் மேற்கொள்ளலாம். அதுவும் இல்லாமல் பயணத்தின்போதும் சம்பாதிக்கலாம்.

First published:

Tags: Travel, Travel Guide, Trip