ஹோம் /நியூஸ் /lifestyle /

நடு இருக்கையை தேர்ந்தெடுத்தால் 2 கோடி பரிசு ... ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் அசத்தும் ஆஃபர்!

நடு இருக்கையை தேர்ந்தெடுத்தால் 2 கோடி பரிசு ... ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் அசத்தும் ஆஃபர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

3 நாட்களுக்கான சுற்றுலா, பன்ஜி ஜம்பிங், ஹெலிகாப்டர் பயணம் என்று அசத்தல் ஆஃபர்களை அள்ளித்தருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

விமான பயணமாக இருந்தாலும் சரி பேருந்து பயணமாக இருந்தாலும் சரி அந்த நடு இருக்கை என்பதை யாருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் நடு இருக்கையை எடுத்தால் $230,000 (ரூ. 1,90,36,525) பரிசுத்தொகை என்று ஒரு விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இருக்கை வரிசையை பொறுத்தவரை விமானமானாலும் பேருந்தானாலும் எல்லோருக்கும் பிடித்தது  ஜன்னல் அருகில் உள்ள இருக்கை  தான். விமானத்தில் பேருந்தை போல் கரம், சிரம் புறம் நீட்ட முடியாவிட்டாலும், மேகங்களுக்கு மேலே பறந்து கொண்டு கடந்து போகும் ஊர்களை கழுகுப்பார்வை போல் பார்ப்பதே தனி வரம். கூடுதல் கட்டணம் என்றாலும் அதை விட்டுத்தர யாருக்கும் மனம் வராது.

அது கிடைக்கவில்லை என்றால் அடுத்த தேர்வு உள்பக்கம் இருக்கும் இருக்கையாக இருக்கும். கழிவறைக்கு எழுந்து செல்ல, நடக்க, கால்களை நீட்டி அமர விசாலமான இடம் கிடைக்கும்.

விலை மலிவாக இருந்தாலும் எல்லோரும் தேர்ந்தெடுக்கத் தயங்குவது அந்த நடுஇருக்கை தான். காரணம் அங்கிருந்து ஜன்னல் காட்சியும் தெரியாது. நடந்து செல்ல வசதியாவும் இருக்காது. ஒருவரை தாண்டி தான் வெளியே போகவேண்டும். ஏதோ சிறையில் அடைத்தது போல அந்த இருக்கை இருக்கும்.

85% தண்டிக்கப்படாத பத்திரிகையாளர் கொலை வழக்குகள்... விரைந்து முடிக்க கோரும் யுனெஸ்கோ!

இதனால் விமான புக்கிங் தளத்தில் இறுதிநேரம் வரை புக் ஆகாத இருக்கையாக இவை தான் இருக்கும். இந்த நிலையை மாற்றுவதற்காக ஆஸ்திரேலியாவின் விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் நடு இருக்கையை தேர்ந்தெடுக்கும் பயணிகளுக்கு $230,000 பரிசு கிடைக்கும் அரிய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. நடு இருக்கையை தேர்ந்தெடுக்கும் பயணிகளில் சிலரை வாரம் ஒரு முறை குழுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது.

பரிசு என்றால் நம் ஊரில் கொடுப்பது போல் இல்லை. 3 நாட்களுக்கான சுற்றுலா, பன்ஜி ஜம்பிங், ஹெலிகாப்டர் பயணம் என்று அசத்தல் ஆஃபர்களை அள்ளித்தருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Australia, Flight travel