முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 2000 ஆண்டுகளாக இருக்கும் மர்மமான நாஸ்கா வரிகள்... மனிதன் செயலா? ஏலியன் தொடர்பா?

2000 ஆண்டுகளாக இருக்கும் மர்மமான நாஸ்கா வரிகள்... மனிதன் செயலா? ஏலியன் தொடர்பா?

நாஸ்கா வரிகள்

நாஸ்கா வரிகள்

பல ஆராச்சியாளர்கள் பல தியரிகளை முன்வைத்தாலும் எதுவும் இதற்கு சரியான விளக்கத்தையோ காரணத்தையோ தரவில்லை.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நீங்கள் ஒரு விமானத்தில் தெற்கு பெருவின் உயரமான பாலைவன பகுதிக்கு மேலே பறந்து செல்லும்போது பாறைகள் மற்றும் மணல்களின் மந்தமான சூழலில் 2000 ஆண்டு பழமையான ஒரு பறந்து விருந்த கோடுகளால் ஆன அமைப்பை காணமுடியும். ஆனால் அது யாரால் போடப்பட்டது, எப்படி உருவானது என்பது குறித்த மர்மம் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

தென் அமெரிக்காவில் உள்ள நவீன நகரமான நாஸ்காவிற்கு அருகில் லிமாவிற்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள பெருவின் பகுதியில் இந்த கோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . 800 க்கும் மேற்பட்ட நேர்கோடுகள், 300 வடிவியல் உருவங்கள் மற்றும் 70 விலங்கு மற்றும் தாவர வடிவமைப்புகள் இந்த இடத்தில்  காணப்படுகின்றன. வானத்தில் இருந்து பார்த்தல் மட்டுமே இந்த உருவங்களை அடையாளம் காண முடியும். நேரில் பார்க்கும் போது இந்த கோடுகள் சாதாரணமாகவே காட்சி அளிக்கும்.

இந்த கோடுகளால் ஆனா உருவங்களை 'பயோமார்ப்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். சில நேர்கோடுகள் 30 மைல்கள் வரை கூட  செல்கின்றன. அதே சமயம் பயோமார்ஃப்கள் 50 முதல் 1200 அடி நீளம் வரை உள்ளது. சிலந்தி, ஹம்மிங்பேர்ட், கற்றாழை, குரங்கு, திமிங்கிலம், லாமா, வாத்து, பூ, மரம், பல்லி மற்றும் நாய் போன்ற விலங்குகள் மற்றும் தாவர உருவங்களை இங்கு அதிகம் காணலாம்.

இதில் முக்கிய கவனம் பெரும் உருவம் ஒன்று உள்ளது. ஒரு மலையில் ஒரு பக்கம் முழுவதிலும்  'தி அஸ்ட்ரோனாட்' என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு மனித உருவம் அமைந்துள்ளது. அவ்வளவு பெரிய உருவத்தை எப்படி உருவாக்கி இருக்க முடியும் என்ற மர்மம் இன்றும் முழுதாக விளக்கப்படவில்லை.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி , இந்த பாரிய கோடுகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாஸ்கா இன மக்களால் உருவாக்கப்பட்டன. அவர்கள் கி.பி 1 முதல் 700 வரை செழித்து வளர்ந்தனர். நாஸ்கா மக்களுக்கு முன்பு வாழ்ந்த சாவின் மற்றும் பரகாஸ் கலாச்சார மனிதர்கள் கூட  சில ஜியோகிளிஃப்களை வரைந்திருக்கலாம் என்கின்றனர் அறிஞர்கள்.

மேலும், பழங்கால மக்கள் 12-15 அங்குல பாறைகளை அகற்றி, கீழே உள்ள இலகுவான மணலை வெளிப்படுத்துவதற்காக ஆழமாக தோண்டி அந்த குழிகளை  இரும்பு ஆக்சைடு பூசப்பட்ட கூழாங்கற்களால் நிரப்பியிருக்கலாம். அப்படி மூடப்பட்ட பகுதியில் உருவங்கள் தெரியும்படி வடிவங்களை வடிவமைத்ததாக மானுடவியலாளர்கள் நம்புகின்றனர்.

இது வெறும் யூகம்தான். உண்மையில் இந்த உருவங்கள் எப்படி உருவானது என்பது யாரும் தெரியாது. அதுவும் இவ்வளவு பெரிய அளவில் எப்படி மனிதனால் வரைந்திருக்க முடியும் என்பதும் பெரிய கேள்வியாகவே உள்ளது. அதுவும் கொடுக்கல் எல்லாம் வளைந்து நெளிந்து இல்லாமல் ஸ்கேல் வைத்து போட்டது போல நேராக உள்ளது.

1930 களில் விமானிகள் கவனித்து சொன்ன பின்னர் தொடங்கிய ஆராய்ச்சி இன்றும் ஒரு முடிவுக்கு வராமல் போய்க்கொண்டே இருக்கிறது. பல ஆராச்சியாளர்கள் பல தியரிகளை முன்வைத்தாலும் எதுவும் இதற்கு சரியான விளக்கத்தையோ காரணத்தையோ தரவில்லை. ஏலியன்களுக்கு இதோடு தொடர்பு இருக்கிறதா என்ற ஆராய்ச்சி கூட நடந்துள்ளது.

இதையும் படிங்க:வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கும் கர்நாடகாவின் கோவில் பற்றி கேட்டிருக்கிறீர்களா?

வருடத்திற்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே மழை பொழியும் இந்த இடத்தில் எப்படி இவ்வளவு நாட்கள் இந்த உருவங்கள் நிலைத்து நிற்கிறது. மழை வர வேண்டி செய்த சடங்குகளில் ஒன்றா என்ற கண்ணோட்டத்தில் கூட ஆய்வுகள் நடந்து வருகிறது. ஆனால் என்று இதன் மர்மங்கள் விலகும் என்று தான் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால் கூட சொல்லுங்கள்!

First published:

Tags: Peru, Travel, Trip