ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

திண்டுக்கல்லில் அழகு கொஞ்சும் பன்றிமலை.. பட்ஜெட் ட்ரிப்புக்கு பக்கா இடம்..!

திண்டுக்கல்லில் அழகு கொஞ்சும் பன்றிமலை.. பட்ஜெட் ட்ரிப்புக்கு பக்கா இடம்..!

பன்றிமலை

பன்றிமலை

ஊட்டி கொடைக்கானல் போல் இங்கு வணிக ரீதியான சுற்றுலாத்தங்கள் எதுவும் அமைக்கப்படாதது ஒரு விதத்தில் பயணிகளுக்கு உண்மையான இயற்கை சுற்றுலா அனுபவத்தை கொடுக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Dindigul, India

தமிழகத்தில் மலை பிரதேசம் என்றாலே மேற்கு தொடர்ச்சி மலைகள் தான் நினைவுக்கு வரும் அதிலும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் தான் கண்முன் வரும் ஆனால் இவை தவிர்த்து பல ரம்யமான மலைகள் தமிழ்நாட்டில் உள்ளது. அவற்றில் ஒன்று தான் பன்றி மலை.

இந்த பெயரை பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க கூட மாட்டீர்கள். பெயரைக் கேட்டதும் என்ன பன்றிகள் அதிகம் இருக்கும் இடமா என்று அருவருக்க வேண்டாம். பெயரில் தான் பன்றி உள்ளது. மலையில் குறைவு தான்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பன்றிமலை, சுற்றிலும் பசுமை, இதமான வானிலை, லேசான சாரல், இயற்கை எழில் கொஞ்சும் சிறு சிறு சுற்றுலாத் தலங்கள் என அழகு ததும்பும் இடமாக உள்ளது. கொடைக்கானல் என்ன குளிர்ச்சியையும் பசுமையும் கொண்டுள்ளதோ அதே உணர்வை பன்றி மலையும் கொடுக்கும்.

100 ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலாத்தலமாக மாறும் சிறைச்சாலை..!

திண்டுக்கல் மாவட்டத்தின் மையத்தில் இருந்து சுமார் 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய பன்றிமலை. பசுமையான காட்டிற்கு நடுவே சிறு சிறு நீரோடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள், இதமான வானிலை, நம்மை தொட்டு செல்லும் மேகம் என்று கதைகளில் வர்ணிக்கும் சோலை போல காட்சியளிக்கும். பைக் ட்ரிப் செல்ல அருமையான இடம்.

திண்டுக்கல்லில் இருந்து செல்லும்போது மலை அடிவாரத்தில் கொம்பை ஆணை இருக்கும். மழை நேரத்தில் நீர் நிறைந்து அழகாக இருக்கும். அங்கே கொஞ்ச நேரம் செலவிட்டு மலையை ஏற தொடங்கினால் பாதி மலையில் பழவேலி நீர்வீழ்ச்சி என்று குட்டி நீர்வீழ்ச்சி இருக்கும் இங்கே குளித்துவிட்டு மேலே போகலாம்.

ஊட்டி கொடைக்கானல் போல் இங்கு வணிக ரீதியான சுற்றுலாத்தங்கள் எதுவும் அமைக்கப்படாதது ஒரு விதத்தில் பயணிகளுக்கு உண்மையான இயற்கை சுற்றுலா அனுபவத்தை கொடுக்கும். மிளகுத்தோட்டம், பலாமரங்கள் சூழ்ந்த சாலைகள், காப்பி தோட்டங்கள், ஆரஞ்சு மரங்கள் சூழ்ந்திருக்கும். சாலையில் நிறுத்தி அவற்றின் அழகை ரசிக்கலாம்.

சாலை கொஞ்சம் குறுகலாக தான் இருக்கும் ஆனால் பெரிதாக ட்ராபிக் ஏதும் கிடையாது. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கையே குறைவு தான். வரிசையாக மலை கிராமங்கள் தான் அமைந்திருக்கும். அங்கே கிடைக்கும் பசுமையாக காபி கொட்டைகள் கொண்டு காபி அருந்தலாம்.

சென்னையில் அருவியிருக்கா? அதுவும் இவ்வளவு பக்கத்தில்.. சூப்பர் ஸ்பாட் இதோ!

உள்ளூர் மக்களிடம் விசாரித்தால் காட்டிற்குள் இருக்கும் வாட்ச் டவருக்கு வழி சொல்வார்கள். 1 கிலோமீட்டர் முன்னர் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போனால் அங்கே இருந்து சுற்றி உள்ள மலைகளின் அழகை ரசிக்கலாம். அந்த காட்சிக்கு எந்த விலை கொடுத்தாலும் பத்தாது. நண்பர்களோடு சென்றால் இங்குள்ள கிராமத்தின் அருகே முகாம் போட்டு தங்கலாம். புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் போனால் மேகங்கள் உங்களை தொட்டு செல்வதை நீங்கள் உணர்வீர்கள். கடந்து செல்லும் ஊர்களில் எல்லாம் கிராம பாங்கான உணவுகளை நீங்கள் ருசித்துக் கொண்டே போகலாம். அதோடு மிக முக்கியமாக பன்றிமலையில் சூடான சுவையான பரோட்டா கிடைக்கிறது. நிச்சயம் சுவைக்க மறக்காதீர்கள்.

பட்ஜெட் சாலை பயணம் செய்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த பன்றி மலை அமையும். வார இறுதியில் ஒரு அமைதியான இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு ட்ரிப் அடிக்க சிறந்த இடம். அதோடு பன்றிமலையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் பரபலாறு அணை உள்ளது. நேரம் இருந்தால் அங்கேயும் சென்று வாருங்கள்.

First published:

Tags: Solo Travel, Travel