Home /News /lifestyle /

ராசாளியாக பறக்க ரெடியா? இந்தியாவில் நீங்க மிஸ் பண்ணக்கூடாத சாலைப்பயண வழிகள் இதோ...

ராசாளியாக பறக்க ரெடியா? இந்தியாவில் நீங்க மிஸ் பண்ணக்கூடாத சாலைப்பயண வழிகள் இதோ...

மிஸ் பண்ணக்கூடாத சாலை

மிஸ் பண்ணக்கூடாத சாலை

Road trip : மோட்டார் பைக் எடுத்துக்கொண்டு ராசாளிகளாக பறக்கத் துடிக்கும் இளைஞர்கள் பட்டாளங்களுக்கு ரோட் ட்ரிப் போக இந்தியாவின் அருமையான சாலை வழிகளை சொல்கிறோம்.

வெயில் தணிந்து குளிர் ஆரம்பித்திருக்கும் காலம் கடுங்குளிர் அல்லது லேசாக சாரல் வீசும் காலம் இது. மோட்டார் பைக் எடுத்துக்கொண்டு ராசாளிகளாக பறக்கத் துடிக்கும் இளைஞர்கள் பட்டாளங்களுக்கு ரோட் ட்ரிப் போக இந்தியாவின் அருமையான சாலை வழிகளை சொல்கிறோம். குளிர்ந்த காற்றோடு எழிலாடும் இந்த சாலைகள் உங்கள் சக்கரங்களுக்காக காத்திருக்கின்றன.

டெல்லி - அல்மோரா

டெல்லி பல வடக்கு இமாலய மலை பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பதால், பல சாலைப் பயணத் திட்டங்களுக்கு இது ஒரு சிறந்த அடிப்படை முகாமாக அமைகிறது. NH9 வழியாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா, அத்தகைய மலைவாச ஸ்தலமாகும். நீங்கள் உத்தரபிரதேசத்தைக் கடக்கும்போது வழக்கமான சாலைகள் எல்லாம் அழகிய பகுதிகளாக மாறிவிடும். வழியில் நைனிடால் அருகே நின்று, பீம்டாலைப் பார்க்கலாம் .சில அற்புதமான தாபா உணவை மிஸ் பண்ணிடாதிங்க.

டெல்லி - அல்மோரா


தொடக்கப் புள்ளி: மகாத்மா காந்தி மார்க் (டெல்லியிலிருந்து); போவாலி-அல்மோரா சாலை (அல்மோராவிலிருந்து)
தூரம்: 386 கி.மீ
நேரம்: 10.5 மணி நேரம்

பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரிக்கு 1 நாள் பயணத் திட்டம் இதோ..!

மும்பை - கோவா

மும்பையில் இருந்து கோவாவிற்கு லாங் டிரைவ்களை விரும்பும் அனைவருக்கும் NH48 சரியான வழியாகும். அகலமான, வழுவழுப்பான சாலை, பசுமையான சூழல் சொர்கதிற்கே வழியானது போல் இருக்கும். வழியில் ரன்கலா ஏரி, பன்ஹாலா கோட்டை மற்றும் ஜோதிபா கோயிலுக்குச் செல்லலாம். கோவாவிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள பெலகாவி, இரவு தங்குவதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மும்பை - கோவா


தொடக்கப் புள்ளி: மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே (மும்பையிலிருந்து); ஹத்கம்பா-கோவா சாலை (கோவாவிலிருந்து)
தூரம்: 590 கி
நேரம்: 10.5 மணி நேரம்

சென்னை- பாண்டிச்சேரி

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஒரு சாலைப் பயணத்தின் சிறப்பம்சமே அழகிய கிழக்கு கடற்கரை சாலை (ECR) - ஒருபுறம் வங்காள விரிகுடா மற்றும் மறுபுறம் பிரமிக்க வைக்கும் நவநாகரிக கட்டிடக்கலை. இது ஒரு வார இறுதி திட்டத்திற்கு ஏற்றது. வழியில் ஆலம்பாறை கோட்டை, மகாபலிபுரம், முதலியார்குப்பம் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.

சென்னை- பாண்டிச்சேரி


தொடக்க இடம்: வாலாஜா சாலை (சென்னையிலிருந்து); பெரிய காலாபேட் சாலை (புதுச்சேரியில் இருந்து)
தூரம்: 151 கி.மீ
நேரம்: 4 மணி நேரம்

பெங்களூரு - ஊட்டி

பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு NH 275 வழியாக வளைந்த சாலைகளில் மூடுபனி, நீர்வீழ்ச்சிகள், பசுமையான காடுகள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் ஆகியவற்றை அனுபவித்துக்கொண்டே மைசூர் - மசினகுடி வழியாக வாகனம் ஓட்டினால் அதை வர்ணிக்க வார்த்தையை தேட வேண்டும்.

பெங்களூரு - ஊட்டி


தொடக்க இடம்: மைசூர் சாலை (பெங்களூருவில் இருந்து); பெட்டாம்ஸ் சாலை (ஊட்டியிலிருந்து)
நேரம்: 6.5 மணி நேரம்
தூரம்: 267 கி.மீ

வரலாறோடு ஒரு ட்ரெக்கிங் பயணம்- செஞ்சி கோட்டை!

டார்ஜிலிங் - காங்டாக்

நீங்கள் சாகசத்தை விரும்பினாலும் அல்லது தனிமையை விரும்பினாலும், டார்ஜிலிங்கிற்கும் கேங்டாக்கிற்கும் இடையே NH 10 வழியாக பயணம் செய்வது உங்களுக்கு பொருந்தும். காஞ்சன்ஜங்காவின் அற்புதமான காட்சிகள் மற்றும் இனிமையான வானிலையுடன், ஏராளமான இயற்கை அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன. டார்ஜிலிங்கில் உள்ள அழகிய தேயிலை தோட்டங்கள் மற்றும் காங்டாக்கில் உள்ள, வரலாற்று மடங்கள் மற்றும் கோவில்களை ரசிக்கலாம்.

டார்ஜிலிங் - காங்டாக்


தொடக்க இடம்: காந்தி சாலை (டார்ஜிலிங்கில் இருந்து); சிங்டம்-சுங்தாங் சாலை (காங்டாக்கிலிருந்து)
தூரம்: 100 கி.மீ
நேரம்: 4 மணி நேரம்
Published by:Ilakkiya GP
First published:

Tags: Solo Travel, Travel Guide, Travel Tips, Trip

அடுத்த செய்தி