உலகத்தில் அதிக பணியாளர்களை கொண்டு இயங்கி வரும் நிறுவனமாக இந்திய ரயில்வே துறை தான் உள்ளது. அதே போல ஆசியாவிலேயே மிகப்பெரிய இரயில் வலையமைப்பு மற்றும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உலகின் இரண்டாவது பெரிய ரயில் நெட்வொர்காக இருந்து வருகிறது. வடக்கே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக லட்சக்கணக்கான ரயில்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
1850களில் பம்பாய் முதல் தானே வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய ரயில் சேவையை ஆங்கிலேயர்கள் போட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பின்னர் அதன் முழு ஆளுமையையும் இந்திய அரசு ஏற்றது. அன்று முதல் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து நவீன ரயில் சேவைகளை இந்தியா கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.
அதிவேக ரயில், வந்தே பாரத் மட்டுமல்லாது புல்லட் ரயில் சேவைகளுக்கான பணியும் நடைபெற்று வருகிறது. அது மட்டும் இன்றி காந்த சக்தியை பயன்படுத்தி போகும் அதிவேக ரயில்களை கொண்டு வரவும் ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இவ்வளவு இருந்தாலும் நாட்டின் ஒரு ரயில் பாதை மட்டும் இன்றும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் தான் இருக்கிறது. அந்த பாதைக்காக இன்றும் இந்திய அரசு பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்தி வருகிறது. உண்மையாக தான் மக்களே…
மஹாராஷ்ட்ட மாநிலத்தில் உள்ள யவத்மாலுக்கும் மூர்த்திஜாபூருக்கும் (Yavatmal and Murtijapur ) இடையில் 190 கிமீ நீளமுள்ள சகுந்தலா இரயில்வே என்ற குறுகிய ரயில் பாதை உள்ளது. 1910 இல், கில்லிக்-நிக்சன்(Killick-Nixon,) என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனம் தான் இந்த சகுந்தலா ரயில்வே பாதையை நிறுவியது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது மத்திய இந்தியா முழுவதும் இயங்கிய கிரேட் இந்தியன் பெனிசுலர் இரயில்வே (Great Indian Peninsular Railway ) நிறுவனம் இந்தப் பாதையில் ரயில்களை இயக்கியது.
அதன் பின்னர் , 1952ல் ஆங்கிலேயர் கால ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட போது இந்தப் பாதையை மட்டும் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தண்டவாளங்களை நிறுவிய நிறுவனம் தான் இன்னும் இந்த ரயில் பாதையை பராமரித்து வருகிறது. மேலும் இங்கு ரயில்களை இயக்குவதற்காக பிரித்தானியர்களுக்கு இந்தியா இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தி வருகிறது.
இன்றைய நிலையில் சகுந்தலா இரயில்வே பாதையில் ஒரு நாளைக்கு ஒரு சுற்றுலா ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. அமராவதி மாவட்டத்தில் உள்ள யவத்மால் மற்றும் அச்சல்பூர் இடையே 190 கிமீ தூரம் உள்ளது சாலை வழியாக போக அதிக கட்டணம் ஆகும். ஆனால் இந்த இரண்டு கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களால் அந்த செலவை தினசரி செய்ய முடியாது .
இதற்காக மட்டுமே 1921 இல் மான்செஸ்டரில் தயாரிக்கப்பட்ட ஒரு ZD-நீராவி இயந்திரம் மூலம் ஒரே ஒரு ரயில் இந்த கிராமங்களின் உயிர்நாடியாக ஓடிக்கொண்டு இருந்தது. 70 ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 15, 1994 இல், அசல் இயந்திரத்திற்கு பதிலாக டீசல் மோட்டார் நிறுவப்பட்டது. இன்று இந்த ரயிலுக்காக டிக்கெட் விலை வெறும் 150 ரூபாய் தான்.
அதன் பின்னர் கில்லிக்-நிக்சன் நிறுவனம், பிரிட்டிஷ் இந்திய காலனி நிர்வாகத்துடன் இணைந்து மத்திய மாகாண ரயில்வே நிறுவனத்தை நிறுவியது. (CPRC). மேலும் இந்த சகுந்தலா குறுகிய ரயில் பாதையின் நோக்கம் பருத்தியை யவத்மாலில் இருந்து மும்பைக்கு (பம்பாய்) கொண்டு செல்வதாகும். பின்னர் அது இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டருக்கு அனுப்பப்பட்டது.
முதலில் சரக்கு ரயில் செல்லும் பாதையாக இருந்தது, பின்னர் மக்களை ஏற்றிச் செல்ல இரயில்வே வழியாக மாற்றப்பட்டது. சிக்னலிங், டிக்கெட் விற்பனை, வண்டிகளில் இருந்து இன்ஜினைப் பிரித்தல் உள்ளிட்ட அனைத்து ரயில்வே பணிகளையும் ஏழு பேர் கொண்ட ஊழியர்கள் தற்போது செய்கிறார்கள்.
இதையும் பாருங்க : வேலை செஞ்சுட்டே 7 கண்டங்கள் 375 துறைமுகங்கள் கொண்ட 3 வருட கப்பல் பயணம் பண்ணலாம்..!
முன்னதாக, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, யவத்மால்-முர்திசாபூர்-அச்சல்பூர் ரயில் பாதையை குறுகிய பாதையில் இருந்து அகலப்பாதையாக மாற்ற 1,500 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றும் இதன் நிர்வாகம் மற்றும் உரிமை பிரித்தானிய நிறுவனத்திடம் தான் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Travel