பாலைவனத்தைப் பார்க்க நினைக்கும் போதெல்லாம் ராஜஸ்தான் என்ற பெயர்தான் நினைவுக்கு வரும். அனால் அவ்வளவு தூரம் போக வேண்டியது;லாய் தென் இந்தியாவிலேயே ஒரு குட்டி பாலைவனம் உள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
அதுவும் கர்ணகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அதிர்ச்சி கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கும். அறைக்கு பள்ளத்தாக்கு, சிக்மங்களூரு, குடகு மலை என்று மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை போர்த்திய மாநிலத்தில் எப்படி ஒரு பாலை வானம் இருக்க முடியும் என்று தோன்றும். ஆனால் இது உண்மை தான்.
இதையும் படிங்க: பறவைகள் தற்கொலை செய்துகொள்ள வரும் இந்திய கிராமம்..! விலகாத மர்மம்..
கர்நாடகா மைசூரில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலக்காடு என்ற இடம் தான் அந்த மினி பாலைவன ஊர். தல- காடு என்று பெயரில் காடு இருந்தாலும் ஊர் காடு போல் இருப்பதில்லை. இந்த ஊரில் எங்கு பார்த்தாலும் வெறும் மணல் மட்டுமே இருக்கும்.
காவேரி ஆற்றின் இடது கரையில் உள்ள பாலைவனம் போன்ற நகரம் உடையார் வம்சத்தின் ஆட்சியின் போது ஒரு இயற்கை பேரிடரால் இப்படி மாறியது என்று கூறப்படுகிறது.ஆனால் உள்ளூர் வாசிகள் கூறும் கதைகள் மற்றும் புராணங்கள் வேறு ஒன்றைக் கூறுகின்றன.
உடையார் வம்சம் 1399 முதல் 1947 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்தது. இந்தியாவில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாநிலத்தை ஒரே அரச குடும்பம் ஆண்ட வரலாறு இதற்குண்டு. சுமார் 25 மன்னர்கள் இந்த இடத்தை ஆட்சி செய்து வந்தனர்.
11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தல்காடு கங்கர்கல் வடசம் இருந்தது. பின்னர் சோழர்கள் தல்காட்டைக் கைப்பற்றி அதற்கு ராஜராஜபுரம் என்று பெயரிட்டனர். ஆனால் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சோழர்களை மைசூரில் இருந்து விரட்டிய ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்தன் தல்காட்டை கைப்பற்றினான்.
14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, இது ஹொய்சாளர்களின் உடைமையாக இருந்தது, பின்னர் விஜயநகர இறையாண்மையின் நிலப்பிரபுத்துவத்தின் கைகளுக்கு சென்றது. 1610 இல், மைசூர் உடையார் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க: நம் ஊர் ஏரியில் வீடு கட்டி பார்த்திருப்போம்... விண்கல் பள்ளத்தில் நகரம் இருந்து பார்த்திருக்கீங்களா?
முதலாவது உடையார் விஜயநகர அரசனை கொன்றபிறகு ராணி அலமேலம்மாவின் நகைகளை கைப்பற்ற விரும்பினார். ஆனால் அந்த நகைகளை அவரால் எளிதில் பெற முடியவில்லை. அவர் ஒரு படையை ராணி அலமேலம்மாவுக்கு எதிராக அனுப்பினார்.
இதைப் பார்த்த ராணி அலமேலம்மா காவிரிக் கரைக்குச் சென்று நகைகளை ஆற்றில் வீசிவிட்டு தலக்காடு மணலாகிவிடும் என்று சபித்துவிட்டு தானும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதன் பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் மணலுக்கு அடியில் புதைந்தது. அவரது சாபத்தால் தான் இந்த இடம் இப்படி மணலாக மாறியது என்று கூறுகின்றனர்.
தலக்காடு இந்த மணல் மேட்டிற்கு மட்டுமின்றி வேறு சில சுற்றுலாத் தலங்களுக்கும் பெயர்பெற்றது. வைத்யநாதேஸ்வரா, பாதலேஷ்வரா, மருளேஸ்வரா, அர்கேஸ்வரா மற்றும் மல்லிகார்ஜுனா கோவில் என ஐந்து கோவில்களுக்கு பெயர் பெற்றது. இந்தக் கோயில்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் மணலில் புதைந்துவிடுகின்றன.
இந்த ஐந்து கோவில்களின் லிங்கங்கள் சிவனின் பஞ்ச பதியை எனும் ஐந்து முகங்களைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஐந்து சிவன் கோவில்களை போற்றும் வகையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் என்ற திருவிழா நடத்தப்பட்டுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Travel, Travel Guide