Home /News /lifestyle /

சூரியன் அஸ்தமனத்திற்கு பின் தடை, தந்திரியின் சாபத்தால் உருவான அமானுஷ்யம் - மர்மங்கள் நிறைந்த பங்கர் கோட்டை

சூரியன் அஸ்தமனத்திற்கு பின் தடை, தந்திரியின் சாபத்தால் உருவான அமானுஷ்யம் - மர்மங்கள் நிறைந்த பங்கர் கோட்டை

தொல்லியல் துறையால் அஸ்தனமத்திற்குப் பின் தடைசெய்யப்படும் பங்கர் கோட்டை..

தொல்லியல் துறையால் அஸ்தனமத்திற்குப் பின் தடைசெய்யப்படும் பங்கர் கோட்டை..

சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையில் பங்கருக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பேய் பிடித்த கோட்டையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Rajasthan, India
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் பங்கர் கோட்டை என்று ஒரு மர்மக் கோட்டை உள்ளது. அரசின் தொல்பொருள் துறையாலேயே சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பங்காருக்குள் நுழைவது தடைசெய்யப்படுகிறது. அப்படி என்ன அந்த கோட்டைக்குள் மர்மம் நடக்கிறது…?

16ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானின் அம்பர் கச்வாஹா பகுதியின் ஆட்சியாளராக ராஜா பகவந்த் சிங் இருந்தார். அவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அக்பரின் தளபதியாக இருந்த புகழ்பெற்ற மான் சிங்.
இளைய மகன் மதோ சிங். தன் இளைய மகனுக்காக தந்தை பங்கர் கோட்டையைக் கட்டினார். மதோ சிங்குக்குப் பிறகு அவரது மகன் சத்ர் சிங் தாத்தா கட்டிய கோட்டையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். பிற்காலத்தில் பங்கர் கோட்டைக்கு அருகில் உள்ள அஜப்கர் கோட்டையை சத்ர் சிங்கின் மகன் அஜப் சிங் காட்டினார்.

ஒரு தந்திரியின் சாபம்...

சத்ர் சிங்கின் மகளான ரத்னாவதி என்ற அழகிய இளவரசி ராஜஸ்தானின் அழகு. ரத்னாவதி தனது மாற்றாந்தாய் மகன் அஜப் சிங்கைக் காட்டிலும் மிகவும் இளையவர். அஜப் சிங்கை மக்கள் பெரும்பாலும் விரும்ப வில்லை. ஆனால் இளவரசி அனைவராலும் விரும்பப்பட்டவர். அவளுடைய அழகு மற்றும் மகிழ்ச்சியான குணம் பற்றிய கதைகள் வெகுதூரம் பரவியது. அவளுக்கு பல திருமண முன்மொழிவுகள் வந்தன. சூனியம் செய்வதை நன்கு அறிந்த ஒரு தந்திரி பூசாரி அவளை காதலித்தார். ஆனால் அழகான இளவரசிக்கு விருப்பம் இல்லை என்பதை அறிந்த அவர், அவர் மீது மந்திரம் போட முயன்றார்.

12 கிமீ நதியில் ராஃப்டிங் பண்ணத் தயாரா... தென்னிந்தியாவில் அதற்கான இடம் இதோ!

கிராமத்தில் இளவரசியின் பணிப்பெண் அவளுக்கு வாசனை திரவியம் வாங்குவதைப் பார்த்து, ரத்னாவதி தன்னைக் காதலிக்க வேண்டும் என்று மந்திரம் போட்டான். இதையறிந்த ரத்னாவதி பாட்டிலை வீசினார். அது பாறாங்கல்லாக மாறி தாந்திரீகரை தாக்கியது. அவர் அதன் எடையால் நசுக்கப்பட்டார்.  ஆனால் அவர் இறப்பதற்கு முன், அவர் இளவரசி, அவரது குடும்பம் மற்றும் முழு கிராமத்தையும் சபித்தார். அடுத்த ஆண்டு, பங்கர் மற்றும் அஜப்கர் படைகளுக்கு இடையே ஒரு போர் நடந்தது, இது ரத்னாவதி மற்றும் பெரும்பாலான இராணுவத்தின் மரணத்திற்கு வழிவகுத்தது.
இந்த சாபத்தால் தான் கிராமத்தில் இந்த கோட்டை ஒரு மர்ம கோட்டையாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்பட்டடுகிறது. ராஜா பகவந்த் சிங் கோட்டையைக் கட்டிய மலையின் உச்சியில் குரு பாலுநாத் என்ற சாது வாழ்ந்து வந்தார். கோட்டையை அங்கு கட்ட அனுமதிப்பதற்கான அவரது ஒரே நிபந்தனை என்னவென்றால், அவரது குடியிருப்பில் ஒருபோதும் அக்கோட்டையின் நிழல் படக்கூடாது என்பதே. மன்னன் துறவியின் வீட்டின் மீது நிழல் படும்படி கட்டினார். கோபமடைந்த சாதுவின் சாபம் கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை அழிக்க வழிவகுத்தது. தந்திரிக் கி சத்ரி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கல் குடில், கோட்டையின் அருகே உள்ளது.

சத்ர் சிங்கின் மரணத்திற்குப் பிறகு, அஜப் சிங் ஒரு புதிய கோட்டையை நிறுவியதால், அப்பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்பது தெரிகிறது. 1783 இல் ஏற்பட்ட பஞ்சம், எஞ்சியிருந்த கிராமவாசிகளை புதிய வழிகளைத் தேடும்படி கட்டாயப்படுத்தியது. 1720 இல், மான் சிங்கின் பேரன் ராஜா ஜெய் சிங், பங்கரை தனது தோட்டத்துடன் இணைத்தார்.கோட்டையின் உள்ளே...

ஒரு நீண்ட சாலையில் இருபுறமும் வரிசையாக இடிபாடுகள் காணப்படுகின்றன. இவை ஜவ்ரி பஜார், நடனம் ஆடும் பெண்களின் வீடுகள் (நச்னி கி ஹவேலி) என்று அழைக்கப்படுகிறது. அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த மரக்கதவைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு மூன்று மாடி கொண்ட பெரிய கோட்டை சிதிலமடைந்திருந்தாலும், எழிலாக உள்ளது. பக்கத்தில் இருந்த சோமேஸ்வரர் கோயில், அழகிய படிக்கட்டுக் கிணற்றுடன், அமைதியாக இருக்கிறது. கோட்டையின் உச்சியில் உடைந்த நெடுவரிசைகள், படிக்கட்டுகள், கற்கள், தூண்கள், ரத்னாவதியின் குளியலறை ஆகியவை உள்ளன.

சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையில் பங்கருக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பேய் பிடித்த கோட்டையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதை மீறி அங்கு தங்கியவர்கள் யாரும் உயிருடன் வந்து அவர்களது அனுபவத்தைத் பகிர்ந்ததில்லை என்றும் சொல்கின்றனர்.அதே போல் இந்த கிராமத்தில் எந்த வீட்டிலும் கூரை இருப்பதில்லை. மீறி கூரை அமைத்தாலும் அது இருந்து விழுந்துவிடுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Archeological site, Rajasthan, Travel, Travel Guide, Trip

அடுத்த செய்தி