ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டூர் ப்ளானா? மணாலியில் களைகட்டுது ஜனவரி கொண்டாட்டம்.. விவரம் இதோ!

டூர் ப்ளானா? மணாலியில் களைகட்டுது ஜனவரி கொண்டாட்டம்.. விவரம் இதோ!

மணாலி குளிர்காலத்திருவிழா

மணாலி குளிர்காலத்திருவிழா

மணாலி குளிர்கால திருவிழாவானது மால் சாலையில் நடைபெறும் ஒரு பிரமாண்டமான அணிவகுப்புடன் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Manali, India

மணாலியில் இருப்பதற்கு ஜனவரியை விட சிறந்த நேரம் எதுவுமில்லை , ஏனெனில் பிரபலமான சுற்றுலா நகரம் மணாலி குளிர்கால திருவிழாவை  ஜனவரியில்  கொண்டாட உள்ளது. சுற்றிலும் பனி மற்றும் மலையின்  அழகுடன், இந்த பிரமாண்டமான திருவிழாவில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்க தயார் என்றால் விபரங்கள் இதோ ...

மணாலியின் பாரம்பரியம், நாட்டுப்புற கலாச்சாரம், விளையாட்டு மற்றும் உணவு ஆகியவற்றைகே கொண்டாடவும் சுற்றுலா பயனிக்குகளை ஈர்க்கவும் மணாலி  குளிர்கால திருவிழாஜனவரி 2 முதல் 6, 2023 வரை நடைபெற உள்ளது.

மணாலி குளிர்கால கார்னிவல் முதன்முதலில் 1977 இல் நடத்தப்பட்டது.  மணாலி இந்தியாவில் சில சிறந்த பனிச்சறுக்கு சரிவுகளைக் கொண்டிருப்பதால் இந்த திருவிழாவிற்கு பெரும்பாலான  மக்களின் கவனம் ஈர்ப்பதற்காக பனிச்சறுக்கு விளையாட்டுகளை நடத்தத் தொடங்கினர். காலப்போக்கில், குளிர்கால விளையாட்டு மிகவும் பிரபலமானது.  அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தொடங்கியது.

இதையும் படிங்க: இந்திரா காந்தி ஒரு படையையே அனுப்பி அலசிய கோட்டை.. அப்படி அங்கே என்ன தான் இருக்கு?

இதனால்  உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி நாடு முழுவதிலுமிருந்து  பெரும் திரளான மக்கள் இந்த பிரபலமான குளிர்கால விளையாட்டை அனுபவிக்க மணாலிக்கு வருகை தருகின்றனர். அதன் பின்னர் இமாச்சல அரசு விளையாட்டோடு  திருவிழாவை மேலும் சிறப்பு அம்சங்களுடன் பெரிதாக்க முடிவு செய்தனர்.

மெதுவாக, குலு மற்றும் மணாலியின் நாட்டுப்புற கலாச்சாரம் திருவிழாவில் இடம்பெறத் தொடங்கியது. பாடல்கள், நடனம் மற்றும் உணவு ஆகியவை திருவிழாவின் முக்கிய அம்சங்களாக  மாறாத தொடங்கின. இருப்பினும், சில காலத்திற்கு, திருவிழாவானது கலாச்சார நிகழ்வுகளை நிறுத்தியது. மேலும் குளிர்கால விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆனால் அது 2008 இல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.

இப்போது குளிர்கால கொண்டாட்டம் விளையாட்டு மற்றும் கலாச்சாரத்திற்கு சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது, அதை விட புத்துணர்ச்சியை அளிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு கொண்டாட்டங்களை கொட்டித் தீர்க்கிறது.

இதையும் படிங்க:  புத்தாண்டிற்கு எங்கே போகலாம் என்ற யோசனையா... குறைந்த விலையில் உங்களுக்கான அருமையான இடம் இதோ

மணாலி குளிர்கால திருவிழாவானது மால் சாலையில் நடைபெறும் ஒரு பிரமாண்டமான அணிவகுப்புடன் தொடங்குகிறது. இந்த அணிவகுப்பு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பாரம்பரிய ஹிமாச்சலி உடைகளை அணிந்த வண்ணமயமான நடனம் மற்றும் அணிவகுப்பு  நிகழ்வாகும்.

அணிவகுப்பைத் தொடர்ந்து பாடல் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டிகள்,  தெரு நாடகங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கக்கூடிய விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக  மணாலி மற்றும் அண்டை நகரங்களில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் கூடுகிறார்கள்.

First published:

Tags: Manali, Tourism, Travel, Travel Guide