முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நீங்க பைக் ரைடரா? - அப்போ இந்த இடங்களுக்கு போங்க..!

நீங்க பைக் ரைடரா? - அப்போ இந்த இடங்களுக்கு போங்க..!

bike riding places In Tamil Nadu

bike riding places In Tamil Nadu

நீங்கள் பைக்கில் அதிகமாக பயணம் செய்ய விரும்புவாரா?. அப்போ இந்த இடங்களுக்கு செல்லுங்கள். உங்க பைக் ரைடு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போதைய இளைஞர்கள் மத்தியில், பைக் ரைடு பிரபலமாகி வருகிறது. அதுமட்டும் அல்ல, அனைவரும் சோலோவாக பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படி, நீங்களும் நினைத்தால் உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் பைக் ரைடுக்கு ஏற்ற தமிழகத்தில் உள்ள இடங்கள் மற்றும் சாலைகள் பற்றி கூறுகிறோம். இவை உங்களின் பயண அனுபவத்தை அழகாக மாற்றும்.

சென்னை - ஏலகிரி சாலை :

நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியாக உங்கள் விடுமுறையை கழிக்க விரும்பினால் ஏலகிரி ஏற்ற இடம். ஏலகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலை ஒரு அழகான பாதையாகும், மேலும் பைக் ஓட்டுபவர்கள் சென்னையிலிருந்து சிறந்த சாலை பயணங்களில் ஒன்றாக கருதுகின்றனர். புங்கனூர் செயற்கை ஏரி-கம்-பூங்கா கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். மேலும், இங்கு பாராகிளைடிங் மிகவும் முக்கியமானது.

சென்னையில் இருந்து செல்வபவர்களுக்கு NH48 புறவழி சாலை உங்களுக்கு உதவும். சென்னை - ஏலகிரி செல்ல 278 கிமீ தூரத்தை கடக்க வேண்டும். இந்த பயணம் உங்களுக்கு நிறைய அனுபவங்களையும், இனிமையான விஷயங்களையும் கொடுக்கும்.

சென்னை - கன்னியாகுமரி சாலை :

கன்னியாகுமரி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலையின் கடைசி இடமாகும். இந்த சாலை சென்னையில் தொடங்கி வங்காள விரிகுடாவில் கன்னியாகுமரி வரை பயணிக்கிறது. செல்லும் வழியில் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளது. கன்னியாகுமரியை உங்களின் இறுதி இலக்காகக் கொண்டு, நீங்கள் சென்னையில் தொடங்கி, ஃபிளமிங்கோக்களைப் பார்க்க புலிகாட் ஏரிக்குச் செல்லலாம்.

Also read : உங்களுக்கும் உங்க மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருதா? - அப்போ இதுதான் காரணம்! 

பின்னர் பாண்டிச்சேரியின் பிரஞ்சு காலனியான மகாபலிபுரத்தின் கோயில் நகரத்திற்குச் செல்லுங்கள். பின்னர் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்குச் செல்லவும், டிரான்குபார் டச்சு காலனி. அங்கிருந்து வேளாங்கனி அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள ஆதாம் பாலத்தின் புகழ்பெற்ற தேவாலயங்களுக்கு செல்லலாம். இந்த இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 710 கிமீ தூரம் உள்ளது. உங்கள் பைக் ரைடுக்கு NH38 மற்றும் NH44 நெடுஞ்சாலைகள் உங்கள் பயணத்தை இனிமையாக்கும்.

சேலம் - கொல்லிமலை சாலை :

பைக் ரைடுக்கு ஏற்ற சிறந்த சாலைகளில் ஒன்று சேலம் - கொல்லிமலை. இது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாகும். 70 ஹேர்பின் வளைவுகளுக்கு இந்த மலை மிகவும் பெயர் பெற்றது. அகாயகங்கை அருவிகள், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான கோயில் மற்றும் பல அன்னாசி தோட்டம் என பல விஷயங்களுக்கு புகழ்பெற்றது.

சேலத்தின் மைய நகரில் இருந்து கொல்லி மலையை சென்றடைய சுமார், 92 கிமீ தூரம் பயணிக்க வேண்டும். கொல்லிமலை செல்லும் வழியில், இராசிபுரம், மல்லூர், வாழப்பாடி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் ஊர்களை நீங்கள் கடந்து செல்வீர்கள். பெங்களூரிலிருந்தும் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம்.

சென்னை - கொடைக்கானல் சாலை பயணம் :

"கொடை" அல்லது “ மலைகளின் இளவரசி” என்று அன்புடன் அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் பிரபலமான மலைத்தொடர்களில் ஒன்று. . இந்த நகரம் நீர்வீழ்ச்சிகளால் நிரம்பியுள்ளது. சைக்கிள் ஓட்டுவதற்கும், மலையேற்றம் செய்வதற்கும், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளை விற்கும் வினோதமான சிறிய கஃபேக்களுக்கும் பெயர் பெற்றது.

Also read : பிரசவத்திற்குப் பிறகு உடலுறவில் எப்போது ஈடுபடலாம்..? நிபுணர்களின் பதில்.!

கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு அல்லது NH 45 வழியாக கொடைக்கானலுக்குச் செல்ல உங்களுக்கு எட்டு மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்றால் திண்டுக்கல் பிரியாணியை சுவைக்க மறக்காதீர்கள்.

சேலம் - ஜவ்வாதுமலை ட்ரிப் :

மூலிகை செடிகளின் தாயகம் என கருதப்படும் ஜவ்வாது மலைக்கு, சேலம், கிருஷ்ணகிரி பாதையை தேர்வு செய்யலாம். சாலை வழியாக சேலத்தில் இருந்து ஜவ்வாது மலை செல்ல 146 கிமீ தூரத்தை கடக்க வேண்டும். சேலத்தில் இருந்து செல்லும் வழியில், வாணியம்பாடி, பாலக்கோடு வழியே நீங்கள் பயணிக்க வழியெங்கும் காடு, மலைகள் போன்றவற்றை அதிகம் காணலாம். இந்த பயணம் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.

சென்னை - வேலூர் சாலை :

புகழ்பெற்ற திராவிட கட்டிடக்கலையை நினைவூட்டும் தமிழ்நாட்டின் பழங்கால நகரங்களில் வேலூர் ஒன்றாகும். இந்து புராணங்களின்படி, முருகப்பெருமான் இங்கு தோன்றியதாக நம்பப்படுகிறது. வேலூர் கோட்டை மற்றும் ஸ்ரீலக்ஷ்மி பொற்கோயில் ஆகியவை இந்த பழமையான நகரத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்.

வேலூருக்குப் பயணம் செய்வது தமிழ்நாட்டின் கடந்த காலத்தைப் பற்றி அறிய உங்களுக்கு உதவும். சென்னை - வேலூருக்கு இடையே உள்ள 140 கிமீ தூரத்தை மிகவும் எளிமையாக கடக்க NH48 சாலைகள் உங்களுக்கு உதவும். சென்னையில் இருந்து வேலூருக்குச் செல்ல சுமார் நான்கு மணி நேரம் ஆகும்.

சென்னை - காஞ்சிபுரம் சாலை :

தமிழகத்தின் "தங்க நகரம்" மற்றும் "ஆயிரம் கோயில்களின் நகரம்" என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இது பட்டுப்புடவைக்கு மிகவும் பிரபலமானது. இது சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளது, இது நகரத்தின் மிகப் பழமையானது.

Also Read : கருச்சிதைவை எதிர்கொண்ட பெண்கள் அதிலிருந்து எப்படி மீள்வது..?

இது தவிர வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இங்கு உள்ளது. பல்லவர்கள் மற்றும் சோழர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம் திராவிட வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. காஞ்சிபுரம் சென்னையில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் உள்ளது.

சென்னை - கும்பகோணம் சாலை :

கும்பகோணம் தமிழ்நாட்டின் மற்றொரு பழமையான நகரம். இது சென்னையில் இருந்து சாலைப் பயணங்களுக்கு சிறந்த ரூட்டுகளில் ஒன்று. இது ஒரு விசித்திரமான கோவில் நகரமாக உள்ளது. கும்பகோணம் இரண்டு நாள் பயணத்திற்கு ஏற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்து பண்டிகையான மகாமகத்திற்கும் இது பெயர் போனது.

சென்னையில் இருந்து கும்பகோணம் செல்ல சுமார் 296 கிமீ பயணிக்க வேண்டும். இதை கடக்க உங்களுக்கு 6.5 மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் வழியே நீங்கள் பயணிக்கையில் கடல் சார்ந்த விஷயங்களை அதிகம் காணலாம்.

First published:

Tags: Travel, Travel Tips