சுற்றுலா என்று சொன்னதும் கடவுள் இருக்கும் தலங்கள், நீர்வீழ்ச்சிகள், மால்கள், விளையாட்டு தலங்கள் என்று தான் சிந்திப்போம். பழங்கால புதைகுழிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் நம்மில் எத்தனை பேர் சரி என்போம்? புதைக்குழிக்கு சுற்றுலாவா என்றும் முகம் சுளிப்பர்.
ஆனால் 4000 ஆண்டுகள் பழமையான புதைக்குழி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படி என்றால் அனைவருக்கும் சம்மதம் தான். அப்படி ஒரு பெரும்கற்காலத்தை சேர்ந்த புதைக்குழி பற்றி தான் சொல்லப்போகிறோம்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பழங்கற்காலம் இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோகக்காலம் என்று பிரிப்பர். ஆனால் தென்னிந்தியாவில் இதோடு பெரிய கற்காலம் என்ற ஒன்றும் இருந்துள்ளது. அவை தான் பொது ஆண்டுக்கு முன் 5000-3000 காலத்தை சேர்ந்தது. அந்த காலத்தை சேர்ந்த புதைவிடங்கள் தமிழகம், கேரள, கர்நாடக பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்படி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் தான் குடக்கல்லு பறம்பு. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சேர்மனங்காட்டில் அமைந்துள்ள குடக்கல்லு பரம்பில் மொத்தம் 69 பாதுகாக்கப்பட்ட பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் உள்ளன.
இதையும் பாருங்க: புத்தாண்டிற்கு எங்கே போகலாம் என்ற யோசனையா... குறைந்த விலையில் உங்களுக்கான அருமையான இடம் இதோ
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பழங்கால நினைவுச்சின்னங்களைப் போலவே, இதுவும் மக்கள் மற்றும் இயற்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இவற்றை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) பாதுகாத்து வருகிறது..
குடக்கல்லு பறம்பு என்றால் என்ன?
உண்மையில், இந்த வார்த்தையின் அர்த்தம் ' குடை கற்கள்'. குடை போன்ற அமைப்பில் கற்கள் நடப்பட்டதால் இந்த இடம் குடக்கல்லு என்று பெயர் பெற்றது. அன்றைய பெருங்கற்கால முறைப்படி பழங்காலத்தவர்கள் தங்கள் இறந்தவர்களை இந்தக் கற்களுக்கு அடியில் மண் கலசங்களில் புதைத்ததாக நம்பப்படுகிறது.
" குடக்கல்லு " மற்றும் " தொப்பிக்கல்லு " ஆகியவை மத்திய கேரளாவில், முக்கியமாக திருச்சூர் மற்றும் கொச்சியைச் சுற்றி அமைந்துள்ளன. சௌவனூர், கந்தனாச்சேரி, போர்க்குளம், கட்டகாம்பல், எய்யல் மற்றும் அரியனூர் ஆகியவை மிகவும் முக்கியமான இடங்களாகும்.
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சேர்மனங்காட்டின் குடக்கல்லு பறம்பில் உள்ள கொடக்குத்தி கல்லு அல்லது குடக்கல்லு 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என இந்திய தொல்லியல் துறை மதிப்பிட்டுள்ளது .சேர்மனங்காட்டின் குடக்கல்லு பறம்பு 69 மெகாலிதிக் நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது.
குடக்கல்லு பறம்பு லாவோஸின் போன்சாவனில் உள்ள பிரபலமான ஜார்ஸின் சமவெளிக்கு மிகவும் ஒத்திருக்கிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், லாவோஸில் உள்ள புதைகுழிகள் பெரிய கல் ஜாடிகளின் வடிவத்தில் உள்ளன. சில கல் மூடிகளுடன் உள்ளன. கேரளாவின் குடக்கல்லு குடை வடிவில் உள்ளது.
பயணிகள் கவனத்திற்கு ..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Tourism, Travel, Travel Guide