ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

105 உடல்கள்.. காவு வாங்கும் காடு.. தொடரும் மர்மம்.. திகில் நிறைந்த ஜப்பான் காடு!

105 உடல்கள்.. காவு வாங்கும் காடு.. தொடரும் மர்மம்.. திகில் நிறைந்த ஜப்பான் காடு!

அயோகிகஹாரா  தற்கொலை காடு

அயோகிகஹாரா  தற்கொலை காடு

தற்கொலை செய்து கொள்வதற்கு உலகின் இரண்டாவது பிரபலமான இடம் (முதலாவது கோல்டன் கேட் பாலம்) என்ற பெயர் பெற்றது அயோகிகஹாரா காடு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலகில் எத்தனையோ வகை காடுகளை நாம் கேட்டிருப்போம். அடர்வனக்காடு, இலையுதிர் காடு, பனிக்காடு என்று,, ஆனால் உலகின் தற்கொலைக் காடு என்றும் அழைக்கப்படும் காடு ஒன்று உள்ளது தெரியுமா?

ஜப்பானில் உள்ள அயோகிகஹாரா வனத்தைத்தான் தற்கொலை காடு என்று அழைக்கின்றனர். வனத்தின் நுழைவு வாயிலிலேயே ‘உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பெற்றோரின் விலைமதிப்பற்ற பரிசான உங்கள் வாழ்க்கை பற்றி கவனமாக சிந்தியுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும். அப்படி என்ன மர்மம் உள்ளது இந்த காட்டில் என்று பார்போம்..

இந்த அழகிய பசுமையான மரங்களால் .சூழ்ந்தது. இங்கு 300 ஆண்டுகளுக்கும் மேலான சில தனித்துவமான மரங்கள் காடுகளில் உள்ளன. அயோகிகஹாரா காடு, பசுமையாக அடர்த்தியாக இருப்பதால், இது 'மரங்களின் கடல்' என்றும் அழைக்கப்படுகிறது. காடு இயற்கையாகவே அழகாக இருப்பதால், மலையேறுபவர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் இங்கிருந்து ஃபியூஜி மலையின் அழகைக் காண ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

அயோகிகஹாரா காடுகள் அல்லது தற்கொலை காடுகள் ஜப்பான் புஜி மலையின் வடமேற்கே அமைந்துள்ளது. சுமார் 35 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கு தொலைந்து போவது மிகவும் எளிதானது ஆனால் வெளியே வருவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

உங்களுக்கு பிடித்த ஒயின் இந்த எரிமலையில் இருந்துகூட வந்திருக்கலாம்!? - எப்படி தெரியுமா?

தற்கொலை செய்து கொள்வதற்கு உலகின் இரண்டாவது பிரபலமான இடம் (முதலாவது கோல்டன் கேட் பாலம்) என்ற பெயர் வர முக்கிய காரணமே இதுதான். உள்ளே தொலைந்து இறப்பவர்கள் தான் அதிகம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அடையக்கூடிய இந்த காட்டில் தற்கொலைகள் நடப்பதற்கு இரண்டு பெரிய காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஜப்பானிய புராணங்களின்படி இறந்தவர்களின் பேய்கள் என்று பொருள்படும் “யுரேயின் வீடு” இந்த காடு. தற்கொலைகள் அயோகிகஹாராவின் மரங்களை ஊடுருவிவிட்டன, இது அமானுஷ்ய செயல்களுக்கு வழிவகுத்தது என்று நம்புகிறார்கள்.

பதிவுகளின்படி, 2003 ஆம் ஆண்டில் காட்டில் இருந்து சுமார் 105 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை கடுமையாக சிதைந்து அல்லது காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டன. அமானுஷ்ய மரணங்கள் என்று கூறுகின்றனர்.

இரண்டாவதாக, இந்த காட்டில் திசைகாட்டி மற்றும் மொபைல் போன்கள் போன் அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் செயலிழந்துவிடுகிறது. அடர்த்தியான காடு ஆதலால் செல்போன் சிக்னல் இங்கே கிடைக்காது. அதேபோல இப்பகுதியில் எரிமலை மண்ணால் உருவாக்கப்பட்ட காந்த இரும்புகளின் வளமான வைப்புகளால் இங்கு திசை காட்டும் காம்பஸ் கூட குழம்பி விடுகிறது. சரியான வலி தெரியாமல் திசை மாறி காட்டுக்குளேயே நடந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

பறவைகள் தற்கொலை செய்துகொள்ள வரும் இந்திய கிராமம்..! விலகாத மர்மம்..

இதனால் சுற்றுலா நோக்கங்களுக்காக வனப்பகுதிக்கு வருபவர்கள் தனியாக வராமல், குழுவாகத்தான் வருவார்கள். தொலைந்து போவதைத் தவிர்க்க ஒரு பிளாஸ்டிக் டேப்பை கையில் வைத்துக்கொள்வார்கள் அவர்கள் போகும் பாதையில் அடையாளங்களை போட்டுக் கொண்டே போவார்கள். சிலர் டேப் கொண்டு கடக்கும் பாதையில் உள்ள மரங்களில் சுற்றிக்கொண்டே போவார்கள். இதனால் அவர்கள் தொலைந்தால் கூட தேடுவது எளிதாகும்.

மக்கள் கருத்துப்படி, தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் உடல்களை காட்டில் தனியாக விடக்கூடாது. எனவே வன ஊழியர்கள் அவர்களை மீட்டு கொண்டு வந்து, சடலங்கள் உள்ளூர் வன காவல் நிலையத்தின் சிறப்பு அறையில் வைத்து விடுகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் காட்டிலேயே விடப்படுவது துரதிர்ஷ்டம் என்று மக்கள் நம்புவதால் இது செய்யப்படுகிறது.

First published:

Tags: Forest, Japan, Suicide, Travel, Trip