உலக மக்களிடம் ஒரு காதல் கதையை சொல்ல சொன்னால் முதலில் எல்லோருக்கும் நினைவில் வருவது டைட்டானிக் படம் தான். ஒரு கப்பல் கடலில் மூழ்கிப்போன கதையோடு ஒரு காதல் கதையும் சேர்த்து தரப்பட்டது.
ஏப்ரல் 15, 1912 இரவு, பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கிப்போன அந்த கப்பலின் நிலை என்ன ஆனது என்று பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாத நிலையில் இப்போது ஓஷன் கேட் எனும் ஒரு தன்னார்வ நிறுவனம் அதை ஆராய்வதோடு 8K தரத்தில் RMS டைட்டானிக்கின் சிதைவைக் காட்டும் புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
110 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பழமையான இந்த கப்பலின் எச்சங்களை இப்போது ஓசன் கேட் ஆராய்ந்து வருகிறது. கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டிலிருந்து சுமார் 400 கடல் மைல்கள் தொலைவில் உள்ள வடக்கு அட்லாண்டிக்கின் மேற்பரப்பிலிருந்து 2.4 மைல்களுக்கு கீழே அமைந்துள்ள தளத்திற்கு இந்த Ocean Gate Expeditions திட்டம் மூலம் சென்றுள்ளனர்.
ஒடிசாவில் ஆண்களை விட பெண் குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்: ஆய்வில் தகவல்
குழு:
இந்த ஆய்விற்காக 5 பேர் அமரக்கூடிய நீரில் மூழ்கும் கேப்ஸுல்கள் வடிவமைக்கபட்டுள்ளது . கேப்ஸுல்கள் உள்ளே ஒரு அட்மோஸ்பேரிக் அழுத்தம் நிலைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடலின் அடிவரை சென்று கப்பலின் எச்சங்களைக் காணலாம்
Ocean Gate ஆய்விற்காக கடலில் மூழ்கக்கூடிய டைவ் செய்யும் வல்லுநர்கள், டைட்டானிக் வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் சிவிலியன் மிஷன் நிபுணர்கள் இணைந்து டைட்டானிக் விபத்திற்கான பயணங்களை நடத்துகின்றனர்.
ஆராய்ச்சி:
இப்போது நாங்கள் எடுக்கும் 8K காட்சிகளில் உள்ள அற்புதமான விவரங்கள், 2023 மற்றும் அதற்குப் பிறகு விஞ்ஞானிகள் மற்றும் கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கு டைட்டானிக்கின் சிதைவை இன்னும் துல்லியமாக வகைப்படுத்த உதவும் என்று Ocean Gate Expeditions இன் தலைவர் ஸ்டாக்டன் ரஷ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
அந்த கப்பலின் துறைமுக பக்க நங்கூரத்தில் உள்ள நங்கூரம் தயாரித்தவரின் பெயர், Noah Hingley & Sons Ltd போன்ற அம்சங்கள் இப்போது தெரிய வந்துள்ளது. Ocean Gate Expeditions புதிய காட்சிகள் டைட்டானிக்கின் தற்போதைய சிதைவின் விகிதத்தை தீர்மானிக்க உதவும் என்று நம்புகிறது.
டைட்டானிக்கிலும் அதைச் சுற்றியுள்ள உயிரினங்களையும் அடையாளம் காண விஞ்ஞானிகளுக்கு இந்த வீடியோ உதவும், அதே நேரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிதைவு மற்றும் குப்பைகள் புலத்தை இன்னும் விரிவாக ஆவணப்படுத்த முடியும். அதோடு கூடுதலாக வருடா வருடம் கூடுதல் ஒளி தரவுகளை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ராஜ்பாத் பெயரை, கர்த்தவ்யா பாத் என மாற்ற மத்திய அரசு திட்டம்
அடுத்த ஆண்டு மே மாதம் நியூஃபவுண்ட்லேண்டிலிருந்து புறப்படும் 2023 பயணத்திற்கான இடங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. ஆழத்தில் பயணம் செய்ய பழகிய இருநூறு அல்லது முந்நூறு நபர்கள் இந்த பயணத்தில் பங்கெடுப்பார்கள். விண்வெளிக்கு பயணம் செய்தவர்களை விட இந்த எண்ணிக்கை குறைவே.
நீங்களும் டைட்டானிக்கை பார்க்கும் 10-நாள் பயணத்திற்கு செல்ல விரும்பினால் Ocean Gate ஐத் தொடர்புகொண்டு தகுதிகள், விண்ணப்பங்களைப் பெறலாம் . அந்த 10 நாள் பயணத்தில், எட்டு நாட்கள் கடலில் இருக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Research, Titanic, Travel Guide