கொரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ஆக்ரா சுற்றுலாத்தலம் மூடப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 21ம் தேதி முதல் இரவு பார்வைக்காக தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அளித்த தகவலின்படி, நிலவொளியின் கீழ் பளிங்கு நினைவுச்சின்னத்தை ஆராய விரும்பும் பார்வையாளர்கள் விருந்தளிக்கும் வகையில் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது இரவில் தாஜ்மஹாலை காண தடைவிதிக்கப்பட்டது. அதன்படி நினைவுச்சின்னத்தின் இரவு பார்வை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17ம் தேதியில் இருந்து மூடப்பட்டது.
இதை குறிப்பிட்ட, ASI கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் (ஆக்ரா வட்டம்) வசந்த் குமார் ஸ்வர்ண்கர் கூறியதாவது, வாரத்தில் 3 நாட்கள் இரவு நேர பார்வைக்கு மக்கள் இனி அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரவு நேர பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நினைவுச்சின்னம் மூடப்படும் என்பதாலும், அதேபோல அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்பதாலும் இந்த இரு நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இரவு பார்வைக்கான நேரங்கள்:
* இரவு நேரத்தில் மூன்று பிரிவுகளில் பார்வையாளர்கள் தாஜ்மஹாலை காண அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதாவது, 8:30 முதல் 9 PM, 9 முதல் 9:30 PM, மற்றும் 9:30 முதல் 10 PM வரை 3 விதமான நேரங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்திய சுற்றுலாவாசிகள் இலங்கை செல்ல அனுமதி கிடைச்சாச்சு..ஆனால் ஒரு கண்டிஷன்..!
* உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி ஒவ்வொரு ஸ்லாட்டிலும் , 50 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று ASI தெரிவித்துள்ளது.
* இரவு நேர பார்வைக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து பேசிய ASI, ஆக்ராவில் 22 மால் சாலையில் உள்ள ஏஎஸ்ஐ அலுவலகத்தின் கவுண்டரில் இருந்து ஒரு நாள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு, ஆக்ராவின் சுற்றுலாக் குழுவின் துணைத் தலைவர் ராஜீவ் சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு 10 மணிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். நகரத்தின் இரவு வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகு தங்கள் ஹோட்டல்களில் அடைந்திருப்பதை விரும்ப மாட்டார்கள். எனவே, பயணிகளின் வருகையை எல்லா நாட்களுக்கும் அதிகளவில் இருக்கும் என்று கூறமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Taj Mahal, Tourist spots, Travel