முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த நாட்டுக்கு சுற்றுலா போனா.. அவங்க நமக்கு ஊக்கத்தொகையா பணம் தருவங்களாம்..!

இந்த நாட்டுக்கு சுற்றுலா போனா.. அவங்க நமக்கு ஊக்கத்தொகையா பணம் தருவங்களாம்..!

தைவான்

தைவான்

2023 இல் 60 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தைவான் திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஒவ்வொரு நாடும் அதன் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக வெவ்வேறு வழிமுறைகளை கையாளும். தாதுப்பொருட்கள், எண்ணெய் வளங்கள் உள்ள நாடுகள் அதை வைத்து தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும். அது போன்ற வளங்கள் இல்லாத நாடுகள் தங்கள் இயற்கை அழகை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றன.

பெரும்பாலான மத்திய ஆசிய நாடுகள் எண்ணெய் வளத்தை வைத்து லாபம் ஈட்டி வரும் நிலையில் தெற்காசிய நாடுகள் தங்கள் இயற்கை வளங்களையும், கடற்கரையையும் பொருளாதார மூலதனமாக மாற்றி வருகின்றனர். அதற்காக சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காக பல அட்டகாசமான ஆஃபர்கள் அறிவித்து வருகின்றனர்.

அப்படிதான் தென்கிழக்கு ஆசிய நாடான தைவான், தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அட்டகமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை கேட்டால் நீங்களே தைவானுக்கு டிக்கெட் தேட ஆரம்பித்து விடுவீர்கள். அட ஆமாங்க.. தைவானுக்கு நீங்க சுற்றுலா போனா உங்களுக்கு அவங்க பணம் தருவாங்களாம்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தைவான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக சில இலக்குகளையும் நிர்ணயித்துள்ளது. அதன்படி, 2023 இல் 60 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தைவான் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளது. அப்போது பிறந்தது தான் இந்த சிறப்பு தொகை அல்லது ஊக்கத்தொகை திட்டம்.

இந்த திட்டத்தின்படி, தைவானுக்கு சுற்றுலா வரும் ஒவ்வொரு பயணிக்கும் தலா 5000 தைவான் டாலர் அதாவது படி இந்திய ரூபாய் மதிப்புபடி ரூ.13492 உதவித்தொகையாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், குழுவாக வரும் 90,000 பயணிகளுக்கு ஒரு குழுவுக்கு NTD 10,000 முதல் 20,000 தைவான் டாலர்கள் வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது குழுவில் உள்ள மக்களின் எண்ணிக்கையை பொறுத்து ரூ.26985 முதல் ரூ.53970 வரை ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

கோவிட் காலத்தில் மூடப்பட்ட தைவான் சுற்றுலா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் மீண்டும் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2022இல் தைவானுக்கு 9 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவிலான பயணிகள் தைவான் வந்துள்ளனர்.

எனவே, இந்தாண்டு மேற்கண்ட நாடுகள் மட்டுமல்லாது மற்ற ஆசிய, ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க தைவான் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சீன குடியரசு (ROC) என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் தைவானுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கும் இடத்திற்கான தகவல், பயணம் விபரங்கள், வந்து-செல்லும் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள், வங்கி அறிக்கைகள் மற்றும் வருகையாளர் பற்றிய முழு தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் பாருங்க: கல்மர பூங்கா பற்றி தெரியுமா..? குழந்தைகளை அழைத்து செல்ல ஒரு வித்தியாசமான இடம்..!

தைவானில் பார்க்கக்கூடிய இடங்கள் என்றால் , சீன ஏகாதிபத்திய கலைப்பொருட்களின் மிகப்பெரிய சேகரிப்புகளில் ஒன்றான தேசிய அரண்மனை அருங்காட்சியகம், மலையேற்றம், ஹைகிங் செய்யக்கூடிய யூஷன் தேசிய பூங்கா, டாரோகோ தேசிய பூங்கா , பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சியைக் கொண்ட எடர்னல் ஸ்பிரிங் ஆலயம், சன் மூன் ஏரி போன்றவை முக்கியமானதாகும்.

First published:

Tags: Taiwan, Travel