ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோரக்பூர் டூ கர்னூல்.. வழி: திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம்.. IRCTC இன் தென்னிந்திய பக்திச்சுற்றுலா!

கோரக்பூர் டூ கர்னூல்.. வழி: திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம்.. IRCTC இன் தென்னிந்திய பக்திச்சுற்றுலா!

irctc

irctc

நவம்பர் 14, 2022 அன்று உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் இந்த ரயில் பயணத் தொகுப்பு 8-இரவுகள் மற்றும் 9-பகல்களைக் கொண்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு பயணத்தை எளிதாகவும், பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்காக பல டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது. நாட்டின் குறுக்கு வெட்டுகளை இணைக்கும் பயணத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தென் இந்தியாவில் இருந்து காசி, வாரணாசி, கங்கோத்ரி, ரிஷிகேஷ் என்று வட இந்திய புனித தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் பயணத்திட்டங்களை அழைத்துவந்த இந்தியன் ரயில்வே தற்போது வடஇந்தியர்களை தென்னிந்திய புனித தலங்களுக்கு அழைத்து வரும் அட்டகாசமான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எங்கெல்லாம் போகலாம்..

தக்ஷிண் பாரத் யாத்ரா எனும் இந்த இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பக்தர்களுக்காக ஒரு தென்னிந்திய பக்தி ரயில் பயணமாகும். இந்த பயணத்தில் பயணிகள் திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கர்னூலுக்கு மலிவு விலையில் பயணிக்கலாம்.

ராமாயணா யாத்திரை.. அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை ரயில் பயணம்.. விவரங்களும் வழிகாட்டலும்!

எவ்வளவு நாள் ?

பக்தர்கள் ஸ்வதேஷ் தர்ஷன் டூரிஸ்ட் ரயில் வழியாக அனைத்து முக்கிய மத இடங்களையும் உள்ளடக்கும் பயணமாக அமையும் இந்த ரயில் நவம்பர் 14, 2022 அன்று உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும். இந்த ரயில் பயணத் தொகுப்பு 8-இரவுகள் மற்றும் 9-பகல்களைக் கொண்டது.

கோரக்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் சங்கமம், லக்னோ, ஜான்சியின் விரங்கனா லக்ஷ்மி பாய் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளலாம்.

பயணத்திட்டம்:

14.11.22 கோரக்பூரில் தொடங்கும் இந்த திட்டம் முதலில் 16.11.22 அன்று திருப்பதியை அடையும். திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிறகு அங்குள்ள தர்மசாலையில் தங்கவைக்கப்படுவர். அடுத்த நாள் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட, சுற்றிப்பார்க்க கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

அங்கிருந்து கிளம்பும் ரயில் 18.11.22 அன்று ராமேஸ்வரத்தை அடையும். ராமர் தனது மனைவி சீதா மற்றும் தமையன் லக்ஷ்மணனோடு நிர்மாணித்த சிவலிங்கம் கொண்டதாக கூறப்படும் ராமேஸ்வரம் கோயிலை தரிசிக்கலாம். 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான ராமநாதசுவாமி, பர்வதவர்தினி அம்மையாரை தரிசித்த பின்னர் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறிது நேரம் கிடைக்கும்.

அடுத்த நாள் 19.11.22 அன்று மதுரை மீனாட்சியை சொக்கனுடன் பார்த்துவிட்டு ரயில் கர்னூல் நோக்கி பயணிக்கும். அங்கு மல்லிகார்ஜுனா கோயிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

20.11.22 அன்று எல்லா கோயில்களையும் தரிசித்துவிட்டு வடஇந்தியா நோக்கி புறப்படும். 22.11.22 அன்று பயணிகளை தங்கள் ரயில் நிலையங்களில் விட்டு கோரக்பூர் அடையும்.

கட்டணம்:

14.11.2022 முதல் 22.11.2022 வரையான இந்த பயணத்திற்கு ரூ. 17,640/- கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பயணம், ஏசி அல்லாத தங்கும் விடுதிகள், தரம்சாலா, கோயில்களுக்கு பயணிப்பதற்கான பேருந்து சேவைகள், தரிசன டிக்கெட்டுகள், நாளுக்கு 3 வேளை சைவ உணவு ஆகியவை அடங்கும்.

முன்பதிவு:

விருப்பம் உள்ள பயணிகள் https://www.irctctourism.com/tourpackageBooking?packageCode=NZSD08   என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: IRCTC, Kurnool S01p18, Madurai, Rameshwaram, Tirupati temple, Tourism