முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 17 ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்த உலகின் பணக்கார இளவரசி.. அவர் கட்டிய விடுதிக்கு இன்று வரை ஈடு இணை இல்லை..!

17 ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்த உலகின் பணக்கார இளவரசி.. அவர் கட்டிய விடுதிக்கு இன்று வரை ஈடு இணை இல்லை..!

இளவரசி ஆரா

இளவரசி ஆரா

முகலாயர் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க இளவரசி' மற்றும் 'உலகின் பணக்கார இளவரசி' என்று பல வரலாற்றாசிரியர்கள் ஆராவை நினைவுகூர்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

தாஜ் மஹால், குதுப் மினார், டெல்லி செங்கோட்டை,  ஆக்ரா  கோட்டை, என்று இந்திய நாட்டின் அடையாளங்களாக கூறப்படும் பெரும்பாலான கட்டிடங்கள் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவே உள்ளது. டெல்லியை தலைமையிடமாக வைத்து ஆண்டு வந்த முகலாயர்களது தோட்ட அமைப்பை அடித்துக்கொள்ள இன்று வரை ஆட்கள் இல்லை. இந்நிலையில் அக்காலத்திலேயே வணிகம் செய்த  முகலாய இளவரசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

காதல் சின்னத்தை உலகத்திற்கு அளித்த ஷாஜஹான் - மும்தாஜ் மெஹல்தான் இந்த செல்வ மகள் ஆரா பேகமின் பெற்றோர்.  ஷாஜஹானுக்கு பல குழந்தைகள் இருந்தாலும் ஆரா பேகம் தான் முக்கியமானவர். பாட்ஷா பேகம் என்ற சிறப்பு பதவி பெற்ற ஆரா தான் அன்றைய காலத்தில், வணிகம், பொருளாதாரம், ஆட்சி திறன் என்று எல்லா விதத்திலும் சிறந்தவராக விளங்கியுள்ளார்.

ஷாஜஹான் அரசராக பதவி ஏற்கும் போது ஆராவிற்கு வெறும் 14 வயது தான். ஆனால் அப்போது 6 லட்சம் ரூபாயை கொடைத்தொகையாக பெற்றுள்ளார்.  மற்ற குழந்தைகளுக்கு அதிகபட்சம் 1  லட்சம் தான் கொடைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. ஆராவின் தாய் மும்தாஜ் இறந்தபோது சொத்தில் பாதிக்கு நிகரான சொத்து ஆராவிற்கு வழங்கப்பட்டதாகவும் மீதம் உள்ளதை மற்ற பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஜஹான் ஆராவுக்கு அவரது தாய் மும்தாஜ் மஹால் மற்றும் தந்தை ஷாஜஹான் ஆகியோர் சொத்துகளில் இருந்து பெரும் பங்கு கொடுக்கப்பட்டது. ரொக்கத் தொகையுடன் கூடவே தோட்டங்களில் இருந்து வரும் வருமானமும் இதில் அடங்கும். தாய் இறந்த பின் தனது சகோதர சகோதரிகளை கவனிக்கும் பொறுப்பு ஆராவிடம் தான் இருந்துள்ளது.

ஜஹான் ஆரா  அழகான மற்றும் திறமையான இளவரசி. 'முகலாயர் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க இளவரசி' மற்றும் 'உலகின் பணக்கார இளவரசி' என்று பல வரலாற்றாசிரியர்கள் அவரை நினைவுகூர்கிறார்கள். வரலாற்றில், அவரது 'அமாரத்'  எனும் ஆட்சி காலத்தில் பல வணிகம் சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவரே வணிகமும் செய்து வந்துள்ளார்.

முகலாயர் காலத்தில் பெஷாவர் ஒரு பெரிய வணிக மையமாக இருந்தது. டெல்லியில் இருந்து மத்திய ஆசியா வரை செல்லும் வணிகர்கள்  பெஷாவரில் நின்று ஓய்வெடுத்து செல்வது வழக்கம். ஆனால் அங்கு  வசதிகள் எதுவும் இல்லை. இதை கவனித்த ஆரா,  பெஷாவரின் வணிகர்களுக்கான ஆடம்பர விடுதியை 1638இல் கட்டத் தொடங்கினார்.

1641 இல் முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் வரலாற்று புத்தகங்களில் 'கேரவன் சராய்', 'சராய் ஜஹான் பேகம்' மற்றும் 'சராய் தோ தர்' என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டிடம் அப்போது  இருந்த மற்ற விடுதிகளை ஒப்பிடும்போது ஒரு சொகுசான விடுதி என்றே  சொல்லலாம். குடியிருக்க அறைகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு எல்லா விதமான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த சத்திரம், நகரின் நடுவில் உள்ள 'கோர் கட்ரி' என்ற மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டது, அங்கு ஒவ்வொரு அறையின் முன்பும் ஒரு சிறிய வராண்டாவும், அறைக்கு அருகே பெரிய வரவேற்பறையும் கட்டப்பட்டன. வியாபாரிகள் வரவேற்பறையில் அமர்ந்து தங்கள் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி, சரக்குகளை ஏற்றிச் செல்லும் கால்நடைகள் ஓய்வெடுக்கவும் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளுக்குளேயே ஒரு கிணறு, இஸ்லாமிய வணிகர்கள் தொழுகை செய்ய மசூதி என்று சகல வசதிகளும் செய்யப்பட்டது. இதற்கு பின்னர் பெஷாவரில் 8 விடுதிகளை பல்வேறு தலைவர்கள் கட்டினாலும் ஆரா கட்டிய இந்த விடுதிக்கு ஈடாகவில்லை.

இதையும் படிங்க : காலம் காலமாக இஸ்லாமியர்கள் தொழுகை செய்து வழிபடும் சிவன் கோவில்... எங்கே இருக்கிறது தெரியுமா?

"பெஷாவர் நகரின் முக்கியமான இடத்தில் ஜஹான் ஆரா பேகம் இந்த சத்திரத்தை கட்டினார். இது நகரின் கோட்டைக்குள் கட்டப்பட்டதால் மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது,”என்று  கைபர் பக்துன்க்வாவில் உள்ள தொல்லியல் துறை இயக்குனர் அப்துஸ் சமத் கான் கூறினார். அப்படி ஒரு பாதுகாப்பான வணிகர் விடுதியை வரலாற்றில் எங்கும் காண முடியாது என்று வரலாற்றாசிரியர்கள் புகழ்கின்றனர்.

First published:

Tags: History, Travel