Home /News /lifestyle /

சென்னை டூ ஹரித்வார்... IRCTC இன் 'சார்தம் யாத்ரா' அசத்தல் சுற்றுலா தொகுப்பு!

சென்னை டூ ஹரித்வார்... IRCTC இன் 'சார்தம் யாத்ரா' அசத்தல் சுற்றுலா தொகுப்பு!

சென்னை டூ ஹரித்வார்

சென்னை டூ ஹரித்வார்

கேதார்நாத் மலையின் அடிவாரமான கவுரிகுந் எனும் இடத்திற்கு ஜீப்பில் அழைத்து செல்லப்படுவர். அங்கிருந்து கேதார்நாத் ஈசனை வழிபட டிரெக்கிங் மூலம் மலையேறி செல்ல வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
வாழ்க்கையில் ஓரளவு பொறுப்புகளை முடித்து விட்டால் பெரியவர்கள் கொஞ்சம் இமாலய பகுதிக்கு பக்தி சுற்றுலா செல்ல விரும்புவர். ஹரித்வார், கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று விட்டு கங்கையின் புனித நீரில் நீராட ஆசைப்படுவர். ஆனால் தனியாக செல்ல வேண்டும் என்றால் சிரமமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அதிரடி ஆஃபர் தருகிறது IRCTC.

சென்னையில் இருந்து பத்ரிநாத், கங்கோத்ரி, கேதார்நாத், யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்ல சார்தம் யாத்ரா என்ற சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 12 இரவுகள், 13 நாட்கள் அடங்கிய இந்த சுற்றுலா ஒரு பரந்த இமாலய தெய்வீக சுற்றுலா அனுபவத்தைத் தரும்.

சுற்றுலா தொகுப்பின் அம்சங்கள்:
சென்னையில் இருந்து டெல்லி வரை விமானத்தில் எகானாமி வகுப்பில் சென்றுவிட்டு, அங்கிருந்து தனி வாகனம் மூலம் எல்லா கோவில்களுக்கும் சென்றுவிட்டு மீண்டும் விமானம் மூலம் மீண்டும் சென்னை வந்து சேரலாம்.

கோவை மக்களே ஒரு நற்செய்தி... இந்த புரட்டாசிக்கு திருப்பதி போக IRCTC இன் அற்புதமான பேக்கேஜ்!

பயண பாதை:
டெல்லியில் இருந்து முதலில் ஹரித்வார் சென்று அங்கிருந்து பார்கோட் எனும் இடத்தில் தங்க வைக்கப்படுவர். அங்குள்ள கோவில்களை சுற்றி பார்த்துவிட்டு ஹனுமன்சேரி,யமுனை நதியின் பிட்ராப்பிடமான யமுனோத்ரி, உத்திரகாசியில் உள்ள கோவில்,
கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரி , வியாசர் மஹாபாரதம் எழுதிய இடமான குப்தா காசி எனும் சீதாப்பூர், பாசுகி, மந்தாகினி நதிகள் இணையும் சோன் ப்ரயாக் ஆகியவற்றைக் காணலாம்.அங்கிருந்து கேதார்நாத் மலையின் அடிவாரமான கவுரிகுந் எனும் இடத்திற்கு ஜீப்பில் அழைத்து செல்லப்படுவர். அங்கிருந்து கேதார்நாத் ஈசனை வழிபட டிரக்கிங் மூலம் மலையேறி செல்ல வேண்டும். பெரியவர்கள் , மலை எற முடியாதவர்களுக்கு டோலி, குதிரை சவாரி ஆகிய வசதிகளும் உண்டு. கங்கைக்கரையோடு ஒரு மலையேற்ற அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

குப்தா காசியில் இருந்து பாண்டுகேஷ்வர் கோவிலுக்கு சென்று தரிசிக்கலாம். 108 வைணவ கோவில்களில் ஒன்றான பத்ரிநாத், மாயாப்பூர்

ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட அருமையான வாய்ப்பு... IRCTC-ன் அசத்தல் பேக்கேஜ் அறிமுகம்!

பாகீரதி மற்றும் அலக்நந்தா சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள தேவப்ரயாக்,ரகுநாத்ஜி கோவில், ராம் ஜூலா, லக்ஷ்மன் ஜூலா, ஸ்வர்காஷ்ரமம் ஆகியவற்றைக் காணலாம்.

பின்னர் மீண்டும் ஹரிந்துவாருக்கு வந்து, மனசாதேவி கோவில், ஹரித்வார் கங்கை கரையோரம் உள்ள ஆர்த்தி பார்க்கலாம். அதன்பின் டெல்லிக்கு திரும்பி அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைவர்.கட்டணம்:
இந்த டூர் பேக்கேஜ் சாதாரண மக்களுக்கு ஏற்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.54000 கட்டணமாகும். உணவு, உறைவிடம், எகனாமி பயணம், நுழைவு சீட்டு கட்டணம், தரிசன டிக்கெட் அனைத்தும் இதில் அடங்கும்.

முன்பதிவு விவரங்கள்

ஆர்வமுள்ள பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 9 அன்று ஒரு குழு கிளம்ப இருக்கிறது. உங்களது பெயரையும் சேர்த்து விடுங்கள். ஜாலியா ஒரு இமாலய பக்தி சுற்றுலா போய் வரலாம்...
Published by:Ilakkiya GP
First published:

Tags: Ganga aarathi, IRCTC, Kedarnath, Travel

அடுத்த செய்தி