முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள், வண்ண உயிரினங்களை ரசிக்க ஆர்வமா.. இந்தியாவின் சிறந்த இடங்கள் இதோ

கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள், வண்ண உயிரினங்களை ரசிக்க ஆர்வமா.. இந்தியாவின் சிறந்த இடங்கள் இதோ

snorkeling

snorkeling

snorkeling: கரைக்கு அருகில் இருக்கும் ஆழம்குறைந்த கடல் வெளியில் மாஸ்க், சுவாசிக்க குழல் மட்டும் மாட்டிக்கொண்டு ஆழம் குறைந்த நீரில் மூழ்கி கடல் பரப்பில் உள்ள பவளப்பாறைகளையும் சிறிய மீன்களையும் காணலாம். இதற்குப் பெயர் தான் ஸ்நோர்கெலிங்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

கடலுக்கு அடியில் உள்ள வண்ணமயமான பவளப்பாறைகளையும் மீன்களையும், கடல் ஆமைகளையும் படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்து பிரமித்திருப்பீர்கள். இந்த காட்சிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அது சொர்க்கத்தையே பார்க்கக் கிடைத்த வாய்ப்பு போலத்தானே?

எனில் ஸ்நோர்கெலிங் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா ?

கரைக்கு அருகில் இருக்கும் ஆழம்குறைந்த கடல் வெளியில் மாஸ்க், சுவாசிக்க குழல் மட்டும் மாட்டிக்கொண்டு ஆழம் குறைந்த நீரில் மூழ்கி கடல் பரப்பில் உள்ள பவளப்பாறைகளையும் சிறிய மீன்களையும் காணலாம். இதற்குப் பெயர் தான் ஸ்நோர்கெலிங். ஆழம் குறைவாக இருப்பதால் ஆபத்து குறைவு. ஆனால் எழிலுக்குக் குறைவிருக்காது.

சூரியன் அஸ்தமனத்திற்கு பின் தடை, தந்திரியின் சாபத்தால் உருவான அமானுஷ்யம் - மர்மங்கள் நிறைந்த பங்கர் கோட்டை

பவளப்பாறைகள்:

பவளப்பாறைகள் என்பது கடல் மட்டத்தில் இருந்து அதிக பட்சம் 50 அடி ஆழம் வரை காணப்படும். வண்ணமயமான பூஞ்சைகளால் சூழப்பட்ட சுண்ணாம்பு எலும்புகள் தான் பவளப்பாறைகள் என்றழைக்கப்படுகிறது. நீருள் ஊடுருவி வரும் சூரிய வெளிச்சம் கொண்டு உயிர்வாழும் இந்த பூஞ்சைகள் வண்ணமயமாக ரசாயனங்கள் கொண்டு கண்ணைக் கவரும் தோற்றம் கொண்டு இருக்கும். சிறிய மீன்கள், நுண்ணுயிரிகள், இந்த பாறைகளில் வாழும்.

தெளிவான நீர்ப்பரப்பு இருந்தால் படகு மூலம் செல்லும் போதே காணலாம்.  ராமேஸ்வரம் பகுதிகளில் கண்ணாடி அடிப்பகுதி  கொண்ட படகுகள் மூலம் கடலுக்கு அடியில் உள்ளதை பார்த்து ரசிக்கலாம்.

ஆனால் அதன் முழு அழகையும் ரசிக்க அதன் உறைவிடத்திற்குத் தானே செல்ல வேண்டும். அப்படி நீச்சல் தெரியாதவர்கள் கூட பவளப்பாறைகளை ரசிக்க வழி செய்வது இந்த ஸ்நோர்கெலிங் ஆகும்.

இந்த ஸ்நோர்கெலிங் செய்ய மாலத்தீவு, மலேசியா, தாய்லாந்து போகவேண்டும் என்றில்லை. இந்தியாவின் அழகிய கடற்கரையிலே இந்த வசதிகள் எல்லாம் உள்ளது.

கர்நாடகாவில் உள்ள நேத்ராணி தீவில் பவளப்பாறைகளைக் காண முடியும். பீஜியன் தீவு என்றழைக்கப்படும் இந்த தீவில் புறாக்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 700 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் டர்காளி தீவில் குறைந்த ஆழத்தில் மீன்கள், கடல் பாறைகள், கடல் பாசிகளைக் காணலாம். ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 500 கட்டணமாகும். தெளிந்த நீர் பரப்பைக் கொண்டுள்ளதால் பாறைகளை தெளிவாகக் காணலாம்.

கோவா என்றாலே அழகியக் கடற்கரைகள் தான். சர்பிங் எனப்படும் அலையோடு மிதக்கும் சாகசத்தோடு சில இடங்களில் ஸ்நோர்கெலிங் வசதியும் உள்ளது. சிங்குவெரீம் கடற்கரை, மங்கி கடற்கரை, ப்ளோலேம் கடற்கரைகளில் ஸ்நோர்கெலிங் வசதி உள்ளது. 500 முதல் 1000 வரை ஒரு நபருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அந்தமான் தீவுக் கூட்டத்தில் அநேகத் தீவுகளில் அரசு மற்றும் தனியார் சார்பில் ஸ்நோர்கெலிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்வராஜ் தீவு அருகே ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 400 கட்டணமாகும்.

போர்ட் பிளேர் மகாத்மா காந்தி கடல்சார் தேசிய பூங்காவில் ஒரு நபருக்கு ஸ்நோர்கெலிங்கு 550 ஆகும். சவுத் பட்டன் தீவுக்கு அருகில் கடல் மட்டம் கொஞ்சம் ஆழமாக இருக்கும். ஆனால் சிரமப்பட்டு உள்ளே செல்ல ஒர்தானா காட்சிகளைக் காணலாம். சில சமயங்களில் கடல் ஆமைகளைக் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

First published:

Tags: Andaman And Nicobar Islands S33p01, Goa, Travel, Travel Guide