சிம்லாவில் கோலாகலமாக தொடங்கியது கோடைகாலத் திருவிழா!

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிரபலமான உணவுகளை எடுத்துரைக்கும் வகையில், உணவுத் திருவிழாவுக்கும் சிம்லாவின் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Web Desk | news18
Updated: June 4, 2019, 9:03 AM IST
சிம்லாவில் கோலாகலமாக தொடங்கியது கோடைகாலத் திருவிழா!
சிம்லாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள்
Web Desk | news18
Updated: June 4, 2019, 9:03 AM IST
சிம்லாவில் கோடைக்காலத் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இமாச்சலப்பிரதேச மாநிலம், இயற்கையிலேயே கண்கவர் மலைப்பகுதிகளை உள்ளடக்கியது. இமாச்சலப் பிரதேசத்துக்கு உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், தலைநகர் சிம்லாவில் ஆண்டுதோறும் கோடைகாலத் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. நாளை மறுதினம் வரை நடைபெற உள்ள இந்த விழாவில், ஜம்மு-காஷ்மீர், அசாம், தெலங்கானா, குஜராத், மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


ஒரே இடத்தில் கலைஞர்கள் ஒன்றுகூடி கிராமிய நடனங்களை ஆடி பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, நீண்ட மரத்தில் நின்றபடி நடனமாடிய கலைஞர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தனர்.

பல பகுதிகளிலும் நிகழ்ச்சிக்கு இடையே கோமாளி வேடமணிந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தினர். இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிரபலமான உணவுகளை எடுத்துரைக்கும் வகையில், உணவுத் திருவிழாவுக்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பாரம்பரிய சுற்றுலா நிகழ்ச்சியை இன்று நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் வரை நடைபெற உள்ள இந்தத் திருவிழா, சிம்லாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைப்பதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Loading...

Also see,,, விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்க்கும் மருந்துக்கடைகாரர்

Also see..
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see....
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...